இளவேட்டனார்

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

இளவேட்டனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவ மாலை ஆகிய தொகை நூல்களில் காணக்கிடைக்கின்றன. இவர் மதுரையில் வாழ்ந்தவர். அறுவை வணிகம் செய்தவர். துணி ஆடை பாவும் ஊடையுமாக இருப்பதை அறுத்து, மடித்து அழகாக அடுக்கி வணிகம் செய்தவர். இதனால் அவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என அழைப்பர். திருக்குறளுக்கு "வாயுறை வாழ்த்து" என்னும் பெயர் இவராலேயே ஏற்பட்டது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like