சங்கடங்கள் தீர்க்குமா சனி தசை

சனிதசை நடக்கும் போது சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், சனிக்கிழமைகளில் அகல் விளக்கில் எள் மூட்டையை வைத்து நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றி சனி பகவானை வழிபட வேண்டும்.இந்த தசையில் சிவன், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால் சங்கடங்கள் தீரும்.

சங்கடங்கள் தீர்க்குமா சனி தசை

சங்கடங்கள் தீர்க்குமா சனி மகாதசை

நீதிமானான சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று கூறுமளவுக்கு அவரை எந்த கிரகமும் கட்டுப்படுத்த முடியாது, ஏனென்றால் அவர் நீதியின்படியே பலன்களை கொடுப்பார். சனி தசையில் உடல் பாதிப்பு ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க மாட்டார். அதனால் சனியை ஆயுள்காரகன் என்று கூறுவார்கள். சனிதசையின் பொது பலன்களை பற்றியும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம்.

சனி மகாதசை (19 வருடங்கள்)

சனி தசை சனி புத்தி- 3 வருடம் 3 நாட்கள். இது கெட்ட காலம். 

சனி தசை புதன் புத்தி- 2வருடம் 8 மாதங்கள் 9 நாட்கள். இது நல்ல காலம். 

சனி தசை கேது புத்தி-1வருடம் 1 மாதங்கள் 9 நாட்கள். இது கெட்ட காலம். 

சனி தசை சுக்கிரன் புத்தி- 3 வருடம் 2 மாதங்கள். இது நல்ல காலம். 

சனி தசை சூரியன் புத்தி- 11 மாதங்கள் 12 நாட்கள். இது கெட்ட காலம். 

சனி தசை சந்திரன் புத்தி- 1 வருடம் 7 மாதங்கள். இது கெட்ட காலம். 

சனி தசை செவ்வாய் புத்தி- 1 வருடம் 1 மாதங்கள் 9 நாட்கள். இது கெட்ட காலம். 

சனி தசை ராகு புத்தி- 1வருடம் 10 மாதங்கள் 6 நாட்கள். இது கெட்ட காலம். 

சனி தசை குரு புத்தி-2 வருடம் 6 மாதங்கள் 12 நாட்கள். இது நல்ல காலம். 

சனி தசை சாதகமாக இருந்தால்

ஆயுளை அதிகரிக்கும், திருமணம் நடை பெறும், சமூக அந்தஸ்து உயரும், செல்வம் அதிகரிக்கும், வெற்றியைத் தரும், புத்திர பாக்கியம் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும், நல்ல அறிவாற்றல், புத்திசாலித்தனம், ஞாபக சக்தி போன்றவை கொடுக்கும், பிரச்சனைகளை எதிர்கொள்ள சக்தியை கொடுக்கும், நீதித் துறை மற்றும் அரசியலில் உள்ளவர்களுக்கு புகழும், செல்வாக்கும் கிடைக்கும், தாய் மாமன் மூலம் அனுகூலம் உண்டாகும். 

சனி தசை பாதகமாக இருந்தால்

மந்த நிலை, அமைதியின்மை, உடல் உபாதைகள், மன அழுத்தம், எரிச்சல், வலி, வேதனை, பயம், பொருள் இழப்பு ஆகியவை ஏற்படும். சவால்கள், தேவையற்ற சிக்கல்கள்,கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை போன்றவை ஏற்படுத்தும், குடும்பத்தில் பிரிவை உண்டாக்கும், தாய் வழி உறவினருடன் பிரச்சனை, சிறைக்கு செல்ல வேண்டிய நிலை, எதிர்பாராத விபத்து, காலில் அடி, காலில் பாதிப்பு மற்றும் நரம்பு சம்பந்தமாக பாதிப்பு போன்றவை ஏற்படும். வீண்பழியை சுமக்க நேரிடும்.

சனி காயத்ரி மந்திரம்:

ஓம் காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ சனிப் ப்ரசோதயாத்

சனிதசை நடக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், சனிக்கிழமைகளில் அகல் விளக்கில் எள் மூட்டையை வைத்து நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றி சனி பகவானை வழிபட வேண்டும்.இந்த தசையில் சிவன், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால் சங்கடங்கள் தீரும்.