5 நிமிடத்தில் முடக்கத்தான் கீரை தோசை

முடக்கத்தான் கீரை மருத்துவ குணத்தைப் பற்றி தெரிந்தவர்கள் இதை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.

5 நிமிடத்தில் முடக்கத்தான் கீரை தோசை

5 நிமிடத்தில் முடக்கத்தான் கீரை தோசை

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணத்தை அறிந்ததால் தான் பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் இதை  உணவாகவும், ஆயுர்வேத சிகிச்சையில் மருந்தாகவும்  பயன்படுத்த வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். முடக்கத்தான் கீரை தமிழ்நாட்டில்  எளிதில் கிடைக்கும் ஒரு வகை கீரை என்றாலும்  இதன் மருத்துவ குணத்தைப் பற்றி  தெரிந்தவர்கள் இதை  பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். இக்கட்டுரையில்  முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணத்தை பற்றியும், முடக்கத்தான் தோசை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியும் காண்போம்.    

முடக்கத்தான் கீரையில் உள்ள  ஊட்டச்சத்து அளவு :

100 கிராம் முடக்கத்தான் கீரையில் சுமார் 61 கலோரிகள், 4.7 கிராம் புரதம், 0.6 கிராம் கொழுப்பு மற்றும் 9 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஒவ்வொரு பச்சை நிற காய்கறிகள் போலவே இதிலும் தாதுக்கள், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளது.

பயன்கள்: 

இது மிகவும் பாதுகாப்பான மூலிகையாகும்.

  1. எலும்புகள் உறுதிபெறும்,
  2. கை, கால் சம்பந்தப்பட்ட நோய்களில் குணமாக்கும்,
  3. மூட்டு வலியை போக்கும்,
  4. வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் சரி செய்யும்,
  5. குழந்தைகளின் இருமல் மற்றும் சளியை குணமாக்கும்.
  6. மலச்சிக்கலை போக்கும்,
  7. கர்ப்பப்பை கோளாறை சரி செய்யும்,
  8. சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களை குணமாக்கும்.
  9. பசியை தூண்டும்,

முடக்கத்தான் தோசை: 

குறிப்பு:

முடக்கத்தான் தோசை செய்ய நீண்ட நேரம் ஆகும் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். ஏற்கனவே இருக்கும் தோசை மாவில் இந்த இலையை சேர்த்து அரைப்பதால், நாம் இந்த சத்தான தோசையை 5 நிமிடத்தில் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:

  1. புளித்த தோசை மாவு – 1 கப்
  2. முடக்கத்தான் கீரை – 1 கை பிடி அளவு
  3. உப்பு – தேவையான அளவு
  4. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து அலசிக் கொள்ளவும். மிக்ஸியில் ஒரு கைப்பிடி  முடக்கத்தான் கீரையை 1கப் அரைத்த தோசை மாவுடன்  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன் மாவினை தோசையாக ஊற்றி எண்ணெய் விடவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி வேக விடவும். இப்போது  சுவையான முடக்கத்தான் தோசை தயார். இதை காரச்சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அளாதியாக இருக்கும்.

இக்கட்டுரையை படிப்பதோடு நின்றுவிடாமல் அனைவரும்  இந்த மருத்துவ குணம் கொண்ட கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளோடு வாழலாம்.