முருகன் வேல் பெற்ற நாளில் வழிபாடு செய்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா

தைப்பூசத்தன்று முருகனை நினைத்தாலும், முருகன் கோயிலுக்கு சென்றாலும் நாம் வேண்டும் அனைத்தும் நிறைவேறும் என்பதற்கு சான்று அங்கு வரும் பக்தர்களின் கூட்டமும், அவர்கள் மேற்கொள்ளும் வழிபாட்டு முறையும் அதனால் கிடைக்கும் பலன்களை இக் கட்டுரையில் காணலாம்.

முருகன் வேல் பெற்ற நாளில் வழிபாடு செய்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா
முருகன் வேல் பெற்ற நாளில் வழிபாடு செய்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா

 முருகன் வேல் பெற்ற நாளில் வழிபாடு செய்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா

தமிழ் கடவுளான முருகனை வழிபாடு செய்ய உகந்த நாள் தைப்பூசத் திருநாளே. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று பூசம் நட்சத்திரத்திரம் கொண்ட  நாளையே தைப்பூசம் நாள் என்று கூறுவார்கள்.இந்நாள் முருகனுக்கு மட்டும் உகந்த நாளில்லை, சிவனுக்கும் உகந்த நாள் தான். தைப்பூசத்தன்று முருகனை நினைத்தாலும், முருகன் கோயிலுக்கு சென்றாலும் நாம் வேண்டும் அனைத்தும் நிறைவேறும் என்பதற்கு சான்று அங்கு வரும் பக்தர்களின் கூட்டமும், அவர்கள் மேற்கொள்ளும் வழிபாட்டு முறையும் அதனால் கிடைக்கும் பலன்களை இக் கட்டுரையில் காணலாம்.

உலகத்தைக் காப்பாற்றும் தேவர்களையே தாரகாசுரன் மற்றும் அவனுடைய மூன்று சகோதர்களிடமும் இருந்து காப்பாற்ற சிவனின் நெற்றிக்கண்ணில்  தோன்றி, கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து பல வித்தைகளிலும் தேர்ந்தவருமான நம் எம்பெருமான் முருகனை  அனைவரும் தேர்வு செய்தார்கள். இந்த அரக்கர்களை அழிப்பதற்காக சிவன் 11ஆயுதங்களை கொடுத்தார், பார்வதி வேலை பழனியில் தைப்பூசத்தன்று தான் முருகனிடம் கொடுத்தார். இந்த வேலை கொண்டு தான் அரக்கர்களோடு போர் புரிந்து அவர்களை அழித்து தேவர்களையும்,முனிவர்களையும் காப்பாற்றினார். தேவர்களையே காப்பாற்றிய வேலாயுதத்தால் சாமானிய மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாதா! . வேலின் துணை கொண்டு தீயதை அழித்து நல்லது வென்றது.

இந்த நாளில் நாம் என்ன செய்ய  வேண்டும்:

  • சுத்தமாக குளித்துவிட்டு திருநீற்றுப்பட்டையை நெற்றியில் போட வேண்டும்.
  •  நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 
  • வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி,  சக்கரை பொங்கலை பிரசாதமாகப் படைத்து பூஜை செய்ய வேண்டும். 
  • சைவ உணவையே உண்ண வேண்டும். 
  • இருவேளை பால் மற்றும் பழத்தை சாப்பிட்டு  கோயிலுக்கு சென்ற பிறகு தான் உணவை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். 
  • முருகனின் பாடல்களை பாட வேண்டும். அப்படி முடியாதவர்கள் முருகனின் நாமத்தை உச்சரித்தாலே போதும். 
  • இந்த நன்னாளில் உணவில்லாதவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 
  • முருகன் கோயிலில் உள்ள வேலையும் வணங்க வேண்டும்.

இந்நாளில் வழிபடும் முறையினால் கிடைக்கும் பலன்கள்:

  • பால்குடம் எடுத்து சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்தால் நம் வாழ்க்கை ஒளிமயமாகும், நம் தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். 
  • பன்னீரில் அபிஷேகம் செய்தால் நம் வாழ்க்கைக்கு வெற்றியும், செழிமையும் கிடைக்கும். 
  • மஞ்சளில் அபிஷேகம் செய்தால்  நம்  துன்பங்களையும், பிரச்சனைகளையும் போக்கும்.
  •  பூக்களால் அபிஷேகம் செய்தால்  நம் வாழ்க்கையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். 
  • தயிரால் அபிஷேகம் செய்தால் நம் நோய்களை   போக்கும். 
  • திருநீற்றால் அபிஷேகம் செய்தால் நமக்கு அந்த ஆண்டவனின் அருள் கிடைக்கும். 
  • அழகு குத்துவதால் ஏற்படும் இரத்த கசிவினால் நம்   பாவங்கள் அனைத்தும் போய்விடும். 
  • காவடியை தூக்கி சென்று  இறைவன் திருவடியில் வைப்பது என்பது நம் பாவங்களை சுமந்து இறைவன் திருவடியில் வைப்பதற்கு சமம் இதனால் நமக்கு  முக்தி கிடைக்கும். 
  •  முருகனின் பாடலை பாடும் போதும் அவருடைய நாமத்தை கூறும்போது நம் மனதிற்கும், உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும். 
  • மார்கழி மாசத்தில் விரதத்தை ஆரம்பித்துவிட்டு தைப்பூசத்தில் விரதத்தை முடித்துக்  கொண்டால் நமக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். 
  • இந்த  நாளில் அன்னதானம் செய்தால் நம் தலைமுறையினரை மட்டுமல்ல நமக்கு பிறகு வரும் அடுத்த ஏழு தலைமுறையினருக்கு  ஆண்டவனின் அருள் பூரணமாகக் கிடைக்கும். 
  • இந்த நாளில் முருகன் வேலை வணங்கினால் தீய சக்தியை நம்மிடம்  அண்டவிடாமல் நம்மை காக்கும்.
  •  இந்த நாளில் முருகன் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் சென்றால் நாம் வேண்டும் அனைத்தும் நிறைவேறும் மற்றும் புண்ணியம் கிடைக்கும். 
  • இந்த நாளில் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டிலேயே  இருந்து முருகனை மனதார நினைத்தாலும் அவர்களுக்கும் நல்ல பலன்கள்  கிடைக்கும்.

முருகன் திருநாமம் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது என்பதற்கு பல வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த விழாவை சிறப்பாக  கொண்டாடி வருவதே ஆகும். நம் தமிழ்நாட்டில் மட்டும் இந்த  தைப்பூச திருவிழாவை கொண்டாட வில்லை,   சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, மொரிஷியஸ், ஸ்ரீலங்கா இன்னும் பல வெளிநாடுகளில் முருகன் அருளால் அவர்களுக்கு கிடைத்த பலன்களாலும், நம் நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தைப்பூசத் திருவிழாவை விமர்சையாக  கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு சிறப்பான விஷயம் மட்டுமல்ல மகிழ்ச்சியான விஷயமும் ஆகும்.