சமச்சீர் உணவு

சமச்சீர் உணவு என்பது நம் உடலுக்கு ஊட்டச்சத்தையும், சக்தியையும் அளிக்கிறது.

சமச்சீர் உணவு

சமச்சீர் உணவு  

 சமச்சீர் உணவு என்பது நம் உடலுக்கு ஊட்டச்சத்தையும், சக்தியையும் அளிக்கிறது.  உணவில் உள்ள முக்கியமான ஊட்டச் சத்துக்களும்,  தாதுக்களும் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவி புரிகிறது.நாம் நம் பிள்ளைகளுக்கு இந்த சமச்சீர் உணவை ஊக்குவிக்கும் வகையில் அதன் முக்கியத்துவத்தையும், பலன்களையும் உணர்த்த வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப நாம் என்ன தான் கல்வி,  செல்வம் முதலியவற்றை பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும்.

  நாம் அன்றாட வாழ்வில்  புரதங்கள்,  தாதுக்கள்,  கார்போஹைட்ரேட்கள்,  வைட்டமின்கள்,  கொழுப்புகள்,  நார் சத்துக்கள் இவை அனைத்தையும்  சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால், அது நமக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும்   தருகிறது.சமச்சீர் உணவு நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று. இது நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது என்று விஞ்ஞானிகளும் அறிவுறுத்துகின்றனர். உடல் பயிற்சியோடு சமச்சீர் உணவையும் எடுத்தால் தான் நாம் ஃபிட்டாக இருக்க முடியும் . 

      உணவு உண்ணும் முறை:

  •  சமச்சீர் உணவில் உள்ள நன்மைகள்  நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் இவைகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒருவேளை இதில் சில சத்துக்களை  அதிகமாகவும், சில  சத்துகளை குறைவாகவும் எடுத்துக் கொண்டால் அது சமச்சீர் உணவு ஆகாது, 'அளவிற்கு மிஞ்சினால்  அமிர்தமும் நஞ்சு' என்ற நம் முன்னோர்களின்  அறிவுரையின்படி ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவையான சத்தை தேவையான அளவிற்கு  ஏற்ப எடுத்துக்கொண்டால்  நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.
  •  நம் வாழ்க்கைக்கு சமச்சீர் உணவு எவ்வளவு முக்கியமோ அதுபோல தண்ணீரை  குறைந்தது இரண்டு அல்லது மூன்று லிட்டர் பருக வேண்டும்,  ஏனென்றால் நம் உடலில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. நம் உடல் வளர்ச்சி பெறுவதற்கு தண்ணீர்  மிகவும் அவசியமான ஒன்று.
  • எப்பொழுதும் உணவை உட் கொள்ளும் போது அப்படியே விழுங்க கூடாது,  மெதுவாக உண்ண  வேண்டும். இதனால்  எளிதில் நமக்கு செரிமானமாகி, நம் உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு  வழிவகுக்கிறது.
  • அதிகமாக உணவை உட்கொள்ள கூடாது. நமக்கு எவ்வளவு தேவையோ அந்தளவிற்கு எடுத்து கொண்டால் நாம் ஆரோகியமாக நீண்ட நாள் வாழலாம்.
  • சமச்சீர் உணவில் முக்கியமான  கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, உவர்ப்பு ஆகும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால்  நம் உடலுக்கு நல்லது.

  எந்தெந்த உணவுகளை தவிர்க்கலாம்:

காபி,  டீ, ஆல்கஹால், குளிர்பானங்கள் மற்றும் சில மது வகைகளை குடிக்காமல் இருத்தல் சாலச்சிறந்தது. இது நம் உடல்நலனை கெடுப்பதோடு,  மனதையும் கெடுத்து விடும்.

 ஜங்க் உணவுகள் ,  ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் ஆகியவற்றை  தவிர்க்கலாம்.  இதில் சுவைக்காக  நிறைய மசாலா பொருட்கள் சேர்ப்பதோடு சரியாக  உணவை  வேகவைக்காமல் இருப்பதால் நம் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவையும் , பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட உணவையும் தவிர்ப்பது நல்லது. உணவு பதப்படுத்தும் போது பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் போதும் அது கெட்டுப்போகாமல் இருக்க  சில  இரசாயன பொருள்களை சேர்ப்பார்கள்.  அது  பல நோய்களை உண்டாக்கி நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

எவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்:

 எல்லா வகையான காய்களையும், கனிகளையும்  உணவில் சேர்த்துக்கொள்வதால்  நமக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது தவிர கீரை, தானியங்கள் இளநீர், பதநீர், தேன், பால்,  வெல்லம் இன்னும் பலவகையான  இயற்கை உணவுகளை நாம் உண்ணும்  போது நமக்கு பல நன்மைகள் கிட்டும்.

 சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள், முதலில் நாம் உடலை நன்றாக வைத்திருந்தால் தான் எந்த செயலையும் செய்ய முடியும் என்று அர்த்தம்.  நாம் தினமும் சமச்சீர் உணவோடு,  தேவையான அளவு தண்ணீரை குடிப்பதுடன், உணவை  நன்றாக மென்று மெதுவாக உண்ணுவதால் நல்ல செரிமானம் கிடைக்கும். இவை அனைத்தும் உடல் உறுப்புகளை சரியாக வேலை செய்ய வைத்து நம் உடலை ஆரோக்கியமாக நீண்ட காலம்  வாழ வழிவகுக்கும்.