சூரியகாந்தி விதைகள்!! என்ன என்ன பயன்கள்!

சூரியகாந்தி விதைகளால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் அறிய இங்கே படியுங்கள்.

சூரியகாந்தி விதைகள்!! என்ன என்ன பயன்கள்!

இதுவரை சூரியகாந்தி எண்ணெய்யால் மட்டுமே நன்மை என்று நாம் நினைத்து இருப்போம். ஆனால் சூரியகாந்தி விதைகளால் கூட ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கின்றன.

சூரிய காந்தி விதைகளில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. 

ஊட்டச்சத்துக்கள்:

சூரியகாந்தி விதைகளில் தயாமின் (வைட்டமின் பி 1) உள்ளது, இது உடலில் ஆற்றல் உற்பத்தியை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தசைகளை உருவாக்குதல், இரத்த பரவுதல் மற்றும் உடலில் முக்கிய சமநிலையை மீட்டெடுப்பது போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உங்களுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.

சூரியகாந்தி விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது.

மேலும் இவை இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. 

பெண்களுக்கு நல்லது:

சூரியகாந்தி விதைகளில் உடலின் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்தும் 100 வகையான என்சைம்கள் நிறைந்துள்ளன.

சூரிய காந்தி விதைகளில் உள்ள நொதிகள் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை சமநிலைப்படுத்துகிறது.

இதனால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை மற்றும் தைராய்டு அறிகுறிகளை சரியாக்க உதவுகிறது.

மேலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் அடிக்கடி நிகழும் காலை நோயான வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆரோக்கியம்:

சூரியகாந்தி விதைகளில் காணப்படும் மக்னீசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இவை உடம்பில் இருந்து நச்சுத்தன்மையையும் கொலஸ்ட்ராலையும் களைகிறது.

நமக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

சூரிய காந்தி விதைகளில் உள்ள பல மூலக்கூறுகள் டயாபெட்டீஸ் நோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளன.

சூரியகாந்தி விதைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், இரத்த சர்க்கரையின் அளவை 10 % வரை குறைக்கலாம்.

சூரியகாந்தி விதைகள் மலச்சிக்கலை சரிசெய்யும் .

இந்த விதைகளின் உள்ள நொதிகள் செரிமான சாறுகளின் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் வயிறு மற்றும் குடலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி நமக்கு கொடுக்கிறது.

இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் புற்றுநோய் செல்களின் வீரியத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

எப்படி பயன்படுத்தலாம்?

இந்த விதைகளை நீங்கள் பொரியலில் சேர்த்து வரலாம்

சாலட்டுகளில் சேர்த்து பயன்படுத்தலாம்.

வதக்கிய காய்கறிகளில் சேர்த்து இதை பயன்படுத்தலாம்.

பர்கர் போன்றவற்றில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

சூரியகாந்தி எண்ணெய்களாக பயன்படுத்தலாம்.

ரொட்டி மற்றும் மஃபின்கள் போன்ற வேகவைத்த பொருட்களில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.