மெஸ்ஸியின் ரசிகரா நீங்கள்!!!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பற்றி அறிய இங்கே படியுங்கள்.

மெஸ்ஸியின் ரசிகரா நீங்கள்!!!

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஃபுட்பால் உலக கோப்பையை தன்வசமாக்கிய அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கதையை பற்றி இங்கே பார்க்கலாம். 

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணி:

லியோனல் மெஸ்ஸி 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் பிறந்தார். அவரது தாயார் ஒரு துப்புரவுத் தொழிலாளி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி , எஃகு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

ஃபுட்பால் ஆர்வம்:

மெஸ்ஸி தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விளையாடும் போது தான் கால்பந்து பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தார்;

பாட்டியின் கணிப்பு:

மெஸ்ஸிக்கு 4 வயதாக இருந்தபோது, அவரது பாட்டி செலியா தான், அச்சிறுவயதிலேயே கால்பந்தில் மெஸ்ஸி காட்டிய வித்தைகளை முதன்முதலில் கண்டுபிடித்தார். தனது பேரனிடம் இயற்கையிலேயே உள்ள கால்பந்து திறமையை உணர்ந்து, உள்ளூரில் உள்ள கால்பந்து கிளப்பிற்கு தனது பேரனை பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். "ஒரு நாள், நீ உலகின் சிறந்த கால்பந்து வீரராக இருப்பாய்" என வாழ்த்திய அந்த பாட்டியின் ஆதரவு, மெஸ்ஸிக்கு மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல், மெஸ்ஸிக்கு முதல் ஜோடி கால்பந்து பூட்ஸை வாங்கி கொடுக்கும்படி அவரது பெற்றோரை வற்புறுத்தியதோடு, உள்ளூர் கிளப்பின் அப்போதைய பயிற்சியாளரிடம் தனது பேரனை மேட்ச் அணியில் சேர்க்கும்படி வற்புறுத்தினார். துரதிர்ஷ்டவசமாக, மெஸ்ஸிக்கு 10 வயதாக இருந்தபோது அவரது பாட்டி இறந்து விட்டார்.

உயரம் குறைவான சிறுவன்:

மெஸ்ஸியின் பாட்டியின் மரணத்திற்குப் பிறகு, சக குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, மெஸ்ஸியின் உயரம் மிக குறைவாக இருப்பதை அவரின் பெற்றோர் கண்டுபிடித்தனர். இதனால் கவலையடைந்த பெற்றோர்கள், அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு தான் மெஸ்ஸி, வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டது. அந்த காலத்திலேயே மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் செலவழித்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டால் மட்டுமே அவர் வளரச்சியடைய வாய்ப்பு என்ற இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் தவித்தார்கள். மெஸ்ஸியின் தந்தையால் அவரது சிகிச்சைக்கான செலவை ஏற்க முடியவில்லை, அதன் விளைவாக நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் என்ற கிளப்பின் உதவியை அவர் நாடினார். இருப்பினும், அந்த கிளப்பும் மெஸ்ஸியின் மருத்துவ செலவுகளை முழுமையாக கொடுக்க விரும்பவில்லை. இந்த நேரத்தில் தான், பார்சிலோனா FC கிளப்பின் தொழில்நுட்ப இயக்குநரான சார்லி ரெக்சாச், அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனாவைப் போன்ற திறமைகளைக் கொண்ட மெஸ்ஸியின் கதைகளைக் கேள்விபட்ட போது, அவருக்கு ஒரு நிபந்தனையுடன் உதவ முன்வந்தார். அது என்னவென்றால், மெஸ்ஸி ஸ்பெயினுக்கு குடியேறி, அங்குள்ள அவரது கிளப்புக்காக விளையாடினால், மருத்துவக் கட்டணத்தைச் செலுத்துவதாக கூறினார். இதனால் தான் மெஸ்ஸி தனது தந்தையுடன் ஸ்பெயினுக்கு குடியேறினார்.

ஸ்பெயின் வந்தவுடன், மெஸ்ஸி தனது காலபந்து திறமையை அங்கு வைக்கப்பட்ட ஆரம்ப பரிசோதனையிலேயே வெளிப்படுத்த, பிரமிப்புடன் பார்த்த இயக்குனர் அங்கேயே மெஸ்ஸிக்கு பேப்பர் நாப்கினில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தை வழங்கினார்!அதன் பின் நடத்தது எல்லாமே வரலாறு தான்.

முன்னேற்றம்:

FC பார்சிலோனாவின் அகாடமி வகுப்புகளில், மெஸ்ஸி ஒரு அமைதியான சிறுவனாகவே ஆரம்பத்தில் இருந்தார். பகல்நேரத்தில் பயிற்சி மற்றும் இரவில், அவரது கால்களில் ஹார்மோன்கள் வளர்ச்சிக்கு ஊசி மற்றும் சிகிச்சை பெறுவது என அவர் நாட்கள் நகர்ந்தது. 2003 இல் அவரது, 16 வயதில் ஜோஸ் ஒரு நட்பு ஆட்டத்தின் போது FC பார்சிலோனா அணியுடன் அவர் முதன் முதலில் அறிமுகமானார். அந்த நேரத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டினோவின் நட்பு மற்றும், விளையாட்டில் மெஸ்ஸி வெளிப்படுத்திய அற்புதமான செயல்திறன் என  எல்லாராலும் அவர் கவனிக்கப்பட்டார்.

அபரிதமான வளரச்சி:

பார்சிலோனாவில் மெஸ்ஸியின் வாழ்க்கை பல ஆண்டுகளாக சிறப்பாகவும், முன்னேற்றமாகவும் இருந்தது. 2008-09 சீசனில் பார்சிலோனா க்ளப் மெஸ்ஸியால் பல சாதனைகளை படைத்தது. மேலும் கால்பத்து விளையாட்டின் மதிப்புமிக்க பாலன் டி'ஓர் விருதை மெஸ்ஸி பல முறை வென்றுள்ளார். 22 வயதிலேயே FIFA உலகின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார். மீதமுள்ளவை, எல்லாமே வரலாற்று சாதனைகள் தான்.