கவிதை: உடம்புப் புழுதி

கவிதை: உடம்புப் புழுதி

வாழ்ந்தாக வேண்டும்
முடிவெடுத்த அன்று...
என் வயிற்றுப் பசியை போக்க,
அவனின் உடம்பிற்கு உணவளிக்க வேண்டும்...
என் சிற்ப உடலை அடைய,
அந்த அற்ப மனிதனுக்கு தான் எத்தனை ஆசை...
அது எப்படி?
இறைவன் அவனுக்கு மட்டும் எல்லாம் கொடுத்து
எனக்கு பசியை மட்டும் கொடுக்கும் வினோதம்...
இனி நான் திரு விளக்கு அல்ல,
தெரு விலக்கு!
என் மலர் உடல் மறைக்க நல் ஆடை வேண்டி,
அவன் முன் உதிரும் என் ஆடை...
இரவு எனக்கு விடியலானது,
நான் அவனுக்கு படையலானேன்...
அவன் என் மீது படிகிறான்
என் கற்பு மெல்ல மடிகிறது...
உடல் இறுக்கத்தை மீறிய மன இறுக்கத்தில் பீரிட்ட நான்,
மனதுக்குள் மௌனமாய் கேட்டேன்,
உடைகள் கலைத்து உடம்புப் புழுதியில்
உன்னைக் கரைக்கும் மனிதா,
என் கற்பின் விலை ஆயிரம் ரூபாய்,
உனது கற்பின் விலை.?

- கிருபா. சரவணன்