ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்

அல்லாஹ் ரக்கா ரஹ்மான் ஜனவரி 6, 1967ம் ஆண்டு தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்தார். இந்திய இசை உலகின் முக்கியமான மற்றும் திறமையான இசையமைப்பாளர் மற்றும் பாடகர்  இவர். இவரைப் பற்றி அறியாதவர் மற்றும் இவர் பாடலைகளைக் கேட்காதவர் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு புகழ் பெற்ற ரஹ்மான் அவர்களை பற்றி சில சுவாரசிய குறிப்புகளை நாம் இந்த பதிவில் காணலாம்.

 1. ஏ.ஆர். ரஹ்மானின் உண்மையான பெயர் ஏ.எஸ். திலீப் குமார். அவர் பல திறமைகளைக் கொண்ட ஒரு  திறமையான மனிதர். அவர் ஒரு இசை அமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், பரோபகாரர்.
 2. 1980 இல். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், குழந்தைகளுக்கான நிகழ்ச்சியான “வொண்டர் பலூன்” நிகழ்ச்சியில் அறிமுகமானார். அவர் 13 வயதில் 4 கீபோர்டுகளை வாசித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் புகழ் பெற்றார்.
 3. அவர் தனது பள்ளிப் படிப்பை  முடிக்கவில்லை. 15 வயதில் தனது பள்ளியை விட்டு வெளியேறினார். வருகை குறைவாக இருந்ததால் அவர் பள்ளிப்படிப்பை முடிக்கமுடியவில்லை. இருப்பினும், ஏ.ஆர். ரஹ்மான் கம்ப்யூட்டர் இன்ஜினியராக ஆசைப்பட்டார்.
 4. அவரது பிற அறியப்பட்ட பெயர்கள்,  ஏ.ஆர்.ஆர், இசைப் புயல், மெட்ராஸின் மொஸார்ட் போன்றவையாகும்.
 5. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை கவுரவிக்கும் விதமாக கனடாவின் ஒண்டாரியோவில் மார்க்கம் பகுதியின் ஒரு தெருவிற்கு ‘ஏ.ஆர்.ரஹ்மான் தெரு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 
 6. ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 127 ஹவர்ஸ் , லார்ட் ஆப் வார், மில்லியன் டாலர் ஆர்ம் போன்றவை அவற்றுள் சில படங்களாகும்.
 7. ரஹ்மானின் மகன் அமீன் பிறந்ததும் 6, ஜனவரி. 
 8. 2007 ஆம் ஆண்டில், ‘பிரபலமான இசையில் பங்களித்ததற்காக ஆண்டின் சிறந்த இந்தியர்’ என்ற சாதனையைப் பதிவு செய்ததற்காக அவர் லிம்கா புத்தகப் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டார்.
 9. ஒரு பிலிம்பேர் விருதுக்காக நட்சத்திரங்கள் ஏங்கும் சூழ்நிலையில், அவர் 15 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். 2014 வரை 14 பிலிம்பேர் - தெற்கு விருதுகளையும் வென்றார்.
 10. மொத்தம் 138  முறை விருதுக்கான பரிந்துரைகளில், 125 முறை விருதுகளை வென்றிருக்கிறார். அவர் 2 கிராமி விருதுகள், 2 அகாடமி விருதுகள், 1 பாஃப்டா விருது, 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் விருதையும் வென்றார்.
 11. ஆசியாவில், ஒரே ஆண்டில் 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற  முதல் நபர் இவர். இப்போது வரை  இது ஒரு அற்புதமான சாதனை.
 12. ஏர்டெல் சிக்னேச்சர் டியூன் 150 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட ரிங்டோன் ஆகும். இது ARR ஆல் இயற்றப்பட்டுள்ளது.
 13. 2005 இல், ஏ.ஆர். ரஹ்மானின் ‘ரோஜா’ திரைப்படத்தின் ஒலிப்பதிவு, எல்லா காலத்திலும் கேட்கக்கூடிய  டைம்ஸ்ன் “10 சிறந்த ஒலிப்பதிவுகளில்” ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், அவர் டைம்ஸ்ன் ‘உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில்’ பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இன்றுவரை இந்த புகழ்பெற்ற கவுரவத்தை அடைந்த ஒரே அறிமுக இசையமைப்பாளர் ரஹ்மான் மட்டுமே .
 1. புகழ்பெற்ற பெர்க்லீ இன்ஸ்டிடியூட் ஆப் மியூசிக் உட்பட 5 கவுரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
 2. ரஹ்மான் இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார்.