வாழ்க்கையில் மங்கலம் உண்டாக்கும் குரு தசை

குருதசை நடக்கும் போது குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

வாழ்க்கையில் மங்கலம் உண்டாக்கும் குரு தசை

வாழ்க்கையில் மங்கலம் உண்டாக்கும்  குரு மகாதசை

மங்கலகாரகனான குருவை போல் நற்பலன்கள் கொடுப்பாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு நற்பலன்களை அதிகமாக கொடுப்பார். குரு தசையின் பொது பலன்களை பற்றியும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம்.

குரு மகாதசை (16 வருடங்கள்)  

குரு தசை குரு புத்தி- 2 வருடம் 1மாதங்கள்18 நாட்கள். இது நல்ல காலம்.   

குரு தசை சனி புத்தி-2வருடம் 6மாதங்கள்12 நாட்கள். இது நல்ல காலம்.   

குரு தசை புதன் புத்தி- 2 வருடம் 3 மாதங்கள் 6 நாட்கள். இது நல்ல காலம்.   

குரு தசை கேது புத்தி- 11 மாதங்கள் 6 நாட்கள். இது கெட்ட காலம்.   

குரு தசை சுக்கிரன் புத்தி- 2 வருடம் 8 மாதங்கள். இது நல்ல காலம்.   

குரு தசை சூரியன் புத்தி- 9 மாதங்கள் 18நாட்கள். இது கெட்ட காலம்.   

குரு தசை சந்திரன் புத்தி- 1 வருடம் 4 மாதங்கள். இது நல்ல காலம்.   

குரு தசை செவ்வாய் புத்தி- 11 மாதங்கள் 6 நாட்கள். இது கெட்ட காலம்.   

குரு தசை ராகு புத்தி- 2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள். இது கெட்ட காலம்.   

குருதசை சாதகமாக இருந்தால்

புகழும், பாராட்டுகளும் கிடைக்கும். கல்வி மேம்படும், வணிக வளர்ச்சி, வேலை மாற்றம், வீடு மாற்றம், போன்றவை ஏற்படும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வர், வழக்கறிஞர், நீதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம், அதிகாரம் கிடைக்கும், பெண்ணுக்கு நல்ல கணவர் கிடைப்பார். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், குழந்தைப் பேறு கிடைக்கும், யாகம் மற்றும் ஹோமம் நடத்துவீர்கள்.

குரு தசை பாதகமாக இருந்தால்

வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கும், ஆரோக்கியம் கெடும், விமர்சனங்கள் வந்து சேரும், சட்ட விசயங்களில் தோல்வி, வெளிநாட்டு நிலத்தில் பிரச்சனை போன்றவை ஏற்படும், அறிவியல் கண்டுபிடிப்பு, தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்காது. கடவுளின் மீதும், உலகத்தில் உள்ளவர்கள் மீதும் அவ நம்பிக்கை ஏற்படும். நீரிழிவு, ஆஸ்துமா,எடை அதிகரிப்பு போன்ற நோய்கள் வரும். பணப் பிரச்சனைகள் மற்றும் மோசமான விளைவுகளினால் செல்வமும், சொத்தும் இழக்க நேரிடும். செல்லும் இடத்தில் எல்லாம் துரதிர்ஷ்டம் துரத்தும். 

குரு காயத்ரி மந்திரம்:

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குருப் ப்ரசோதயாத்

குருதசை நடக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.