ராஜபோக வாழ்வை அள்ளித் தரும் சுக்கிர தசை

சுக்கிரன் தசை நடக்கும் போது சுக்கிரன் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானையும் வழிபட்டு வந்தால் சகல பிரச்சனைகள் தீரும் மற்றும் ஐஸ்வர்யம் பெருகும்.

ராஜபோக வாழ்வை அள்ளித் தரும் சுக்கிர தசை

ராஜபோக வாழ்வை அள்ளித் தரும்  சுக்கிர மகாதசை

களத்திரகாரகனான சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி ஆவார். ஒருவர்  திடீர் என்று பணக்காரர்  ஆகும்போது  அவருக்கு சுக்கிர தசை அடித்திருக்கு என்று பொதுவாக கூறுவார்கள், ஏன்னென்றால் சுக்கிரன் தசை ஒருவருக்கு ராஜபோக வாழ்வை அள்ளி தரும் என்பதால். சுக்கிர தசை மற்றும் பரிகாரங்களை பற்றி பார்ப்போம். 

சுக்கிரன் மகாதசை(20வருடங்கள்) 

சுக்கிரன் தசை சுக்கிரன் புத்தி- 3 வருடங்கள் 4 மாதங்கள். இது நல்ல காலம். 

சுக்கிரன் தசை சூரியன் புத்தி- 1வருடம். இது கெட்ட காலம். 

சுக்கிரன் தசை சந்திரன் புத்தி- 1வருடம் 8 மாதங்கள். இது கெட்ட காலம். 

சுக்கிரன் தசை செவ்வாய் புத்தி- 1வருடம் 2மாதங்கள். இது கெட்ட காலம். 

சுக்கிரன் தசை ராகு புத்தி- 3வருடம். இத கெட்ட காலம். 

சுக்கிரன் தசை குரு புத்தி- 2 வருடங்கள் 8 மாதங்கள். இது நல்ல காலம். 

சுக்கிரன் தசை சனி புத்தி- 3 வருடங்கள் 2 மாதங்கள். இது நல்ல காலம். 

சுக்கிரன் தசை புதன் புத்தி- 2 வருடங்கள் 10 மாதங்கள். இத நல்ல காலம். 

சுக்கிரன் தசை கேது புத்தி- 1 வருடம் 2 மாதங்கள். இது கெட்ட காலம். 

சுக்கிரன் சாதகமாக இருந்தால்

ஞானம், மரியாதை, புகழ், ஆன்மீகத்தில் ஈடுபாடு முயற்சிகளில் வெற்றி போன்றவை அதிகரிக்கும், நோய்கள் குணமாகும், பிறருக்கு உதவும் மனப்பான்மை ஏற்படும், திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்,  கலை மற்றும் இசையில் திறன் அதிகரிக்கும், செல்வம், ஆடம்பரம், வாகனங்கள் சொத்து போன்றவை கூடும். காதலில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் நன்றாக அமைந்தால் அதிர்ஷ்டமும் நலமும் பெருகும்.

சுக்கிரன் பாதகமாக இருந்தால் துரோகம், அவதூறுகள் போன்றவை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தை விட்டு விலக நேரிடும். குழந்தை பேறுக்கான திறன் குறையும், சிறுநீரகம், கண் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் முயற்சிகளில் தோல்வி ஏற்படும், நிதி நெருக்கடி, மரியாதை இழப்பு மற்றும் அடிக்கடி கோபம் ஏற்படும், பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினை, பெண்பால் விருப்பம், காதல் தோல்விகள் ஏற்படும். 

சுக்கிரன் காயத்ரி மந்திரம்:

ஓம் அச்வத்வஜாய வித்மஹே

தனூர் அஸ்தாய தீமஹி

தன்னோ சுக்ர ப்ரசோதயத்

சுக்கிரன் தசை நடக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள சுக்கிரன் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானையும் வழிபட்டு வந்தால் சகல பிரச்சனைகள் தீரும் மற்றும் ஐஸ்வர்யம் பெருகும்.