நார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்

நார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு சீராக செரிமானம் ஆக அதில் நார்ச்சத்து அவசியம் இருக்க வேண்டும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்

வெவ்வேறு என்சைம்களுடன் இந்த நார்ச்சத்து இணைந்து வைட்டமின், புரதம் போன்ற  சிக்கலான கலவைகள் கொண்ட நமது உணவின் சீரான செரிமானத்தை சாத்தியமாக்குகிறது. சீரான செரிமானத்துடன் நமது வயிற்று பகுதி செயல்படுவதால், நமது உடலில் எந்த ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை. நார்ச்சத்துள்ள உணவுகள் தசை வலிமைக்கு உதவுகின்றன. நமது தினசரி உணவில், ஒரு குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து இருக்கும். சில நேரம் அந்த அளவு தேவைக்கு குறைவாக இருக்கலாம். இதனை சரி செய்ய, சில நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவுகளில் இயற்கையாகவே நார்ச்சத்து அதிகம் இருக்கும். ஆகவே இதனை செரிமானம் செய்வதும் சுலபம். அத்தகைய நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பட்டியலை நாம் இந்த பதிவில் காண்போம்.

தொடர்ந்து படித்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம், வாருங்கள்!

பெர்ரி :
ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது பெர்ரி பழங்கள் ஆகும். ப்ளாக்பெர்ரி, ப்ளு பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. 
அடர்த்தியான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. அந்த வகையில் இந்த பெர்ரி பழங்கள் மிகவும் ஆரோக்கியமான பழங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. நறுமணம் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் வைட்டமின் போன்ற அன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தவையாக பெர்ரி பழங்கள் உள்ளன. பெர்ரி பழங்கள் இனிப்பு சுவையைக் கொண்டவை ஆகும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் தொட முடியாத அளவிற்கு ஒரு பழம் அல்ல. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும் இதனை எடுத்துக் கொள்ளலாம். பெர்ரி பழங்கள் ஒருவரை மனதளவில் கூர்மையாக வைக்கிறது. மேலும் பெர்ரி பழங்களில் உள்ள நார்ச்சத்து, வயிற்றை நிரப்பி, பசி எடுக்காத நிலையை உண்டாக்குகிறது. இந்த தன்மை, உணவு கட்டுப்பாட்டில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அவகாடோ :

அவகாடோவில் நார்ச்சத்து , இரத்த சர்க்கரை அளவைக் கட்டுபடுத்த உதவுகிறது. அவகாடோவில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் இன்சுலின் எதிர்ப்பை மாற்றுவதில் உதவியாக உள்ளது. பிறப்பு கோளாறுகள் மற்றும் வாத அபாயங்களை அவகாடோ தடுக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்க்கும் அன்டி ஆக்சிடென்ட் , அவகாடோவில் உள்ளது. ஹெபடிடிஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்படும் கல்லீரல் சேதத்தை குறைக்கிறது அவகாடோ.

ஓட்ஸ் :
ஆரோக்கியமான எடை பராமரிப்பிற்கு நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் உதவுகிறது. காலை உணவுகளில், பசியைப் போக்கி, வயிறு நிரம்பும் உணர்வைத் தரும் சிறந்த உணவாக ஓட்ஸ் விளங்குகிறது. ஒட்சில் உள்ள பீட்டா க்ளுகான் என்னும் பொருள், LDL கொலஸ் ட்ரால் அளவைக் குறைக்கிறது. 3 கிராம் அளவிற்கு சமமான ஓட்ஸ் தினமும் எடுத்துக் கொள்வதால், 10-20% கொலஸ் ட்ரால் உடலில் இருந்து குறைக்கப்படுகிறது. ஒரு கிண்ணம் அளவு ஓட்ஸ், 3 கிராம் அளவை சமன் செய்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் ஓட்ஸ் உதவுகிறது.

பேரிச்சை :
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மிகக் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் , கொலஸ்ட்ராலை விடுவித்து, எடை குறைப்பை ஏற்படுத்துகிறது. டயட் பற்றி அதிக கவனம் கொள்பவர்களுக்கு ஏற்ப, எடையை சம நிலையில் வைக்க உதவுகிறது. ப்ரெஷ் பேரிச்சம் பழம், மிகவும் மென்மையாக மற்றும் எளிதில் செரிமானம் ஆகும் விதத்தில் இருக்கும். நாட்பட்ட மலச்சிக்கலைப் போக்கக் கூடிய ஒரு மலமிளக்கியாக பேரிச்சை செயல்படுகிறது. தினமும் இரவில் பேரிச்சம் பழத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் அந்த நீருடன் அதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் குறைகிறது.

பயறு வகைகள் :
பயறு, பட்டாணி போன்றவை பருப்பு குடும்பத்தைச் சார்ந்தவையாகும். பயறு வகைகளில்  இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பயறு உணவை சாப்பிடுவதால், இரத்தம் , உணவை உறிஞ்சும் நேரம் குறைக்கப்படுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. நார்ச்சத்து, வைட்டமின், மினரல், மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் பயறு வகையில் உள்ளன.

பேரிக்காய் :
நீரிழிவு நோயாளிகளின் சிறந்த தேர்வாக பேரிக்காய் உள்ளது. இதில் க்ளைகமிக் குறியீடு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பேரிக்காயில்  உள்ள கார்போ சத்து, இரத்தத்தால் மிகவும் மெதுவாக உறிஞ்சப்படுவதால், க்ளுகோஸ் மற்றும் சர்க்கரை அளவு பராமரிக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இனிப்பு சுவையும் இந்த பழத்தில் உண்டு. பேரிக்காயில் போலிக் அமிலம் அதிகம் இருப்பதால், குழந்தை பிறப்பில் உள்ள கோளாறுகள் தடுக்கப்படுகின்றன. பால் மறக்கச் செய்யும் குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து , உணவு எளிதாக பெருங்குடலில் பயணிக்கவும் பெருங்குடல் பாதிப்பைத் தடுக்கவும் உதவுவதால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

அத்திப் பழம் :
அத்திப் பழத்தில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து , ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. 3 அத்திப்பழத்தில் 5 கிராம் அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து மிகவும் அடர்த்தியானது. அதனால், இது ஆரோக்கியமான குடல் செயல்பாட்டை தந்து, மலச்சிக்கலைத் தடுக்கிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. ஒழுங்கற்ற மாற்றும் ஆரோக்கியமற்ற குடல் இயக்கங்களை போக்குகிறது. அத்திப்பழம் உடல் எடையைக் குறைக்க உதவுவதால் உடல் பருமன் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் பாலுடன் சேர்த்து இதனை உண்பதால் இதன் அதிக கலோரி அளவு எடை அதிகரிப்பையும் உண்டாக்கலாம்.

வெண்டைக்காய் :
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் செரிமான சம்பந்தமான நன்மைகளுக்கு இதனை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன.  நீரிழிவைத் தடுக்க வெண்டக்காய் பெரிதும் உதவுகிறது. வெண்டைக்காயில் இருக்கும் நார்ச்சத்து பல நோய்களை குணப்படுத்துகிறது.