குப்பை மேட்டில் உள்ளவரையும் கோபுரத்தில் ஏற்றும் ராகு தசை

ராகுதசை நடக்கும் போது ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், ராகு காலத்தில் துர்கைக்கு விளக்கு போட வேண்டும், காளி மற்றும் ராகுவை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் அகலும்.

குப்பை மேட்டில் உள்ளவரையும் கோபுரத்தில் ஏற்றும் ராகு தசை

குப்பை மேட்டில் உள்ளவரையும் கோபுரத்தில் ஏற்றும் ராகு மகாதசை

கர்மகிரகமான ராகு குப்பை மேட்டில் உள்ளவரையும் கோபுரத்தில் ஏற்றும், கோபுரத்தில் உள்ளவரையும் குப்பை மேட்டிற்கு கொண்டு வரும் வலிமையுடைய கிரகம். ஒருவரின் பூர்வ புண்ணியத்தை வைத்தே கர்மகாரகனான ராகு பலன்களை கொடுப்பார். ராகு தசை பொது பலன்களை பற்றியும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம்.

ராகு மகாதசை(18 வருடங்கள்) 

ராகு தசை ராகு புத்தி- 2வருடம் 8 மாதங்கள் 12 நாட்கள். இது கெட்ட காலம்.

ராகு தசை குரு புத்தி- 2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள். இது நல்ல காலம்.

ராகு தசை சனி புத்தி- 2 வருடம் 10 மாதங்கள் 6 நாட்கள். இது கெட்ட காலம்.

ராகு தசை புதன் புத்தி- 2 வருடம் 6 மாதங்கள் 18நாட்கள். இது நல்ல காலம்.

ராகு தசை கேது புத்தி-1 வருடம் 18 நாட்கள். இது கெட்ட காலம்.

ராகு தசை சுக்கிரன் புத்தி- 3 வருடம். இது நல்ல காலம்.

ராகு தசை சூரியன் புத்தி- 10 மாதங்கள் 24 நாட்கள். இது கெட்ட காலம்.

ராகு தசை சந்திரன் புத்தி- 1 வருடம் 6 மாதங்கள். இது கெட்ட காலம்.

ராகு தசை செவ்வாய் புத்தி- 1 வருடம் 18 நாட்கள். இது கெட்ட காலம்.

ராகு தசை சாதகமாக இருந்தால்

நல்ல கல்வி, உடல் மற்றும் மன ஆரோக்கியம், தொழிலில் வெற்றி, அரசு ஆதரவு, வெளிநாட்டு பயணம், நல்ல பழக்கம் ஆகியவற்றைத் கொடுக்கும், செல்வம் பெருகும், சுகபோக வாழ்க்கையை கொடுக்கும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வைக்கும், அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ராகு தசை பாதகமாக இருந்தால் 

மிக மோசமான மனோவியாதி ஏற்படும், வாழ்க்கையில் மிக மோசமான நிலை உருவாகும், பதவி செல்வம் மற்றும் வீடு இழப்பு ஏற்படும், மன வேதனை மற்றும் மன குழப்பத்தை கொடுக்கும், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தொந்தரவு தரும், மதுவிற்கு அடிமையாக்கும், தீய பழக்கத்தை ஏற்படுத்தும், வழக்குகளை சந்திக்க நேரிடும், துரதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ராகு காயத்ரி மந்திரம் :

நாக த்வஜாய வித்மஹே!

பத்ம ஹஸ்தாய தீமஹி!

தந்நோ ராகு ப்ரசோதயாத்!

ராகுதசை நடக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், ராகு காலத்தில் துர்கைக்கு விளக்கு போட வேண்டும், காளி மற்றும் ராகுவை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் அகலும்.