வாழ்க்கையை பொற்காலமாக மாற்றும் புதன் தசை

புதன்தசை நடக்கும் போது புதன் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், பெருமாள் மற்றும் புதனையும் வழிபட்டு வந்தால் பொன்னான காலமாக மாறும்.

வாழ்க்கையை பொற்காலமாக மாற்றும் புதன் தசை

வாழ்க்கையை பொற்காலமாக மாற்றும் புதன் மகாதசை

புத்திகாரகனான புதன் அறிவு, சாதுரியம் மற்றும் நல்ல வாய்பைகளை கொடுத்து ஒருவரின் வாழ்க்கையை பொற்காலமாக மாற்றுவார். அதனால் தான் பொன் (குரு) கிடைத்தாலும், புதன்( கல்வி) கிடைக்காது என்று சொன்னார்கள், ஏனென்றால் பொன் அழிந்துவிடும். ஆனால் கல்வியறிவு எப்போதும் அழியாமல் நிலைத்து நின்று நம்மை காக்கும். புதன்தசையின் பொது பலன்களை பற்றியும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம்.

புதன் மகாதசை(17 வருடங்கள்) 

புதன் தசை புதன் புத்தி- 2வருடம் 4 மாதங்கள் 27 நாட்கள். இது நல்ல காலம்.

புதன் தசை கேது புத்தி- 11 மாதங்கள் 27 நாட்கள்.இது கெட்ட காலம்.  

புதன் தசை சுக்கிரன் புத்தி- 2 வருடம் 10 மாதங்கள்.இது நல்ல காலம்.

புதன் தசை சூரியன் புத்தி- 10 மாதங்கள் 6 நாட்கள்.இது கெட்ட காலம்.

புதன் தசை சந்திரன் புத்தி- 1 வருடம் 5 மாதங்கள். இது கெட்ட காலம்.

புதன் தசை செவ்வாய் புத்தி- 11 மாதங்கள் 27நாட்கள். இது கெட்ட காலம்.

புதன் தசை ராகு புத்தி- 2வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள். இது கெட்ட காலம்.

புதன் தசை குரு புத்தி- 2வருடம்3 மாதங்கள் 6 நாட்கள்.இது நல்ல காலம்.

புதன் தசை சனி புத்தி- 2 வருடம் 8 மாதங்கள் 9 நாட்கள். இது கெட்ட காலம்.

புதன் தசை சாதகமாக இருந்தால்

படைப்பு மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளில் வெற்றியை கொடுக்கும், கலை, இசை, கல்வி, அறிவு, ஜோதிடம், கணிதம், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்க வைக்கும், தாய் மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், புத்திர பாக்கியம் உண்டாகும், குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும், பண்புள்ளவர்களாக மாற்றும், தொழிலில் முன்னேற்றம் மற்றும் புகழ் கிடைக்கும், அறிஞர்கள் மற்றும் பெரியோர் மத்தியில் மரியாதை கிடைக்கும், பண வரவு அதிகரிக்கும், வாழ்க்கை மேம்பாடும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். 

புதன் பாதகமாக இருந்தால்.

கடினமாக உழைத்தாலும் அங்கீகாரம் கிடைக்காது, மந்த புத்தி, பதற்றம், மனச்சோர்வு மற்றும் அதிக மன அழுத்தம் ஏற்படும், தொழிலில் தடைகள், மனோவியாதி மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும், புத்திர கண்டம், உயிர் கண்டம், பெரியோர்களின் சாபம், அறிஞர்களின் விமர்சனம், பழி சொற்கள் போன்றவை வந்து சேரும், குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படுவர், எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.

புத காயத்ரி மந்திரம்:

ஓம் கஜத் வஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தந்நோ புதப் ப்ரசோதயாத்

புதன்தசை நடக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள புதன் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும், பெருமாள் மற்றும் புதனையும் வழிபட்டு வந்தால் பொன்னான காலமாக மாறும்.