பெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்

பெண்கள் தங்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிய உரிமை கோரி பல போராட்டங்களை நடத்தினர்கள்.அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.  இதுவே மகளிர்தினம் தோன்றுவதற்கான காரணமாக இருந்தது. இக்கட்டுரையில் மகளிர்தினம் தோன்றுவதற்கான சில முக்கிய நிகழ்வுகளையும், பெண்களின்  ஆற்றல்களையும் பார்ப்போம். 

பெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்

பெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்

பெண்ணின் பெருமையை உலகிற்கு  பறைசாற்றும்  விதமாக  ஆண்டுதோறும் மார்ச்-8  ஆம் நாள் மகளிர் தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாள் மட்டுமல்ல அவர்களுக்கு மதிப்பையும், ஊக்கத்தையும்,  அன்பையும்  அளிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிய உரிமை கோரி பல போராட்டங்களை நடத்தினர்கள்.அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.  இதுவே மகளிர்தினம் தோன்றுவதற்கான காரணமாக இருந்தது. இக்கட்டுரையில் மகளிர்தினம் தோன்றுவதற்கான சில முக்கிய நிகழ்வுகளையும், பெண்களின்  ஆற்றல்களையும் பார்ப்போம். 

மகளிர்தினம் தோன்றுவதற்கான முக்கிய நிகழ்வுகள்:

  • 1908ஆம் ஆண்டில் நெசவுத்தொழில்  செய்யும் பெண்களால் நடந்த போராட்டம்: 1908 ஆம் ஆண்டில் நெசவு தொழில் செய்யும் பல்லாயிரக்கணக்கான பெண்கள்  ஒன்றுகூடி நியூயார்க் நகரில்  பெண்களுக்கான  உரிமையான சம ஊதியம், சம உரிமை, சம வேலை நேரம் போன்றவற்றிர்காக நடத்தப்பட்ட போராட்டம். இந்த நிகழ்வே மகளிர் தினம் தோன்றுவதற்கு  ஒரு வித்தாக அமைந்தது. 
  • 28 பிப்ரவரி 1909 ஆண்டில் அமெரிக்காவில் முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது: 1909 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இந்த நாளை அமேரிக்க சோசியலிஸ்ட் கட்சி 1908இல் நெசவு தொழில் செய்யும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் நடத்திய போராட்டத்தை கவுரவ படுத்தும் விதமாக 28 பிப்ரவரியை மகளிர் தினமாக கொண்டாடினார்கள்.
  • ஆகஸ்ட் 1910 ஆம் ஆண்டில் கோபன்ஹேகன் நடந்த சர்வதேச மகளிர் மாநாடு: 1910-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச மகளிர்  மாநாடு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் நடந்தது. அதில் கலந்து கொண்ட 17 நாடுகளிலிருந்து வந்திருந்த  பிரதிநிதிகளுக்கு முன்பாக ஜெர்மனியின் சோஷலிஸ்ட் ஜனநாயக கட்சியின்  தலைவி கிளாரா ஜெட்கின்  பெண்களின் உரிமைகளைப் பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை மகளிர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.  
  • 19 மார்ச் 1911 ஆம் ஆண்டில் நடந்த பெண்கள் உரிமைகளுக்கான பேரணி: அடுத்த  வருடமே  மார்ச் 19ஆம் தேதி ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து இருக்கும் பல லட்சம் மக்கள்  பெண்களுக்கு சம உரிமை, வாக்குரிமை, பொருளாதாரம் மற்றும் கல்வி உரிமை வேண்டும் என்று  பேரணியில் கலந்துகொண்டு எழுத்துப்பூர்வமாக கையெப்பமிட்டனர். இந்த நாளே மகளிர் தினமாக அங்கு குறிப்பிடப்பட்டது.
  • 1913 ஆம் ஆண்டில் நடந்த முதல் ரஷ்ய புரட்சி: 1908ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த  முதல் பெண்கள் புரட்சி  ஒரு வித்தாக அமைந்தது ரஷ்ய புரட்சி தோன்றுவதற்கு. ரஷ்ய புரட்சியில்,  ரஷ்ய பெண்கள் முதல் உலகப்போருக்கு தங்களின் எதிர்ப்பையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தி  பேரணியாக  சென்ற தினம்  கடைசி ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 1913 ஆம் ஆண்டு.
  • 1914 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நடந்த போராட்டம்:  ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து 1914ஆம் ஆண்டில் மார்ச் 8ஆம் தேதி   ஐரோப்பாவில்  பெண்கள் வாக்குரிமை வேண்டி பேரணியாக  நடந்து சென்றார்கள்.
  • 1917ஆம் ஆண்டில்  நடந்த ரஷ்ய புரட்சி:1917 ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் நடைபெற்று  கொண்டிருந்தபோது ரஷ்ய பெண்கள் போரை எதிர்த்து ( ரொட்டி மற்றும் அமைதி) வேண்டும் என்று  பிப்ரவரியில் கடைசி நான்கு நாட்கள் போராட்டம் செய்தார்கள். இந்த போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை. இது கிரிகோரியன் காலண்டரில் மார்ச் 8ஆம் தேதியாகும். இந்த நான்கு நாட்கள் போராடியதற்கான வெற்றிதான். இந்த நிகழ்வு நடந்து முடிந்த சில நாட்களிலேயே சோவியத் யூனியன் தங்கள் நாட்டில் உள்ள பெண்களுக்கு  முதன்முதலாக வாக்குரிமை அளித்தது. அதில் இருந்து ரஷ்யா ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதியில் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தார்கள்.
  • 1977 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாக அறிவித்தனர்: பல நாடுகளில் இந்த மகளிர் தினத்தை ஒவ்வொரு நாள் கொண்டாடிவந்தனர்.1977ஆம் ஆண்டில் நடந்த  ஐக்கிய நாடுகள் அவையில்  பெண்களின் உரிமை மற்றும் அமைதிக்காக மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தனர். 

பெண்களின்  ஆற்றல்:

  • உடல் உறுதி கொண்ட ஆண்களை விட  மனவுறுதி கொண்ட பெண்ணே சிறந்தவள். 
  • தோல்வியில் துவண்டு போகும் ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தைக் கொடுத்து  வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்பவளும் அவளே. 
  •  எதையும்  எளிதில் புரிந்து கொள்ளும்  ஆற்றல் அவர்களுக்கே உண்டு. 
  • ஆணின் கல்வி அவனை மட்டும் தான் உயர்த்தும் ஆனால் ஒரு பெண்ணின் கல்வி ஒரு சமுதாயத்தையே உயர்த்தும் அளவிற்கு ஆற்றல் மிக்கது. 
  • எந்த சூழலையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் ஆற்றல் அவர்களுக்கே உண்டு.

பெண்களிடம் உள்ள ஆற்றல்களே  அவர்களை போராடவைத்து வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறது. ஆண்களைவிட பெண்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பலதுறைகளில் சாதித்துக் காட்டிவருகிறார்கள்.  பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் தினத்தன்று பல கலை நிகழ்ச்சிகளும், பரிசு வழங்கும் விழாவும் நடைபெற்று வருவதால் அது அவர்களின் சாதனைகளை போற்றுவதோடு, இதை பார்க்கும் மற்ற பெண்களுக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும். பெண்ணே- உன்னைப் பற்றி நீ அறியும்போது உனக்கே புரியும் நீ சாதிக்க மட்டும் பிறந்தவள் அல்ல பிறரை சாதிக்க வைக்கவும் பிறந்தவள் என்று. உலகில் வாழும் அனைத்து மகளிருக்கும் நம் குரல் வாயிலாக மகளிர் தின வாழ்த்துக்கள்.