பாலிவுட் பிரபலங்களின் ஃபிட்னஸ் ரகசியம் தெரியுமா?

பாலிவுட் பிரபலங்கள் தங்கள் உடல் அமைப்பை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என அறிய தொடர்ந்து படியுங்கள்.

பாலிவுட் பிரபலங்களின் ஃபிட்னஸ் ரகசியம் தெரியுமா?

ஆரோக்கியமாக இருப்பது என்பது ஒவ்வொருவரின் கனவாகும். நம் ஃபிட்னஸ் கோல்களை அடைய, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்கிறோம், தவறாமல் ஜிம்மிற்கு செல்கிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலான மக்களுக்கு தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது எளிதானது அல்ல. எனவே நாம் நமக்கு ஏற்ற, சுலபமாக செய்யக்கூடிய வொர்க்அவுட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். நமக்குப் பிடித்த பாலிவுட் பிரபலங்களிலிருந்து இதற்கான உத்வேகத்தை பார்க்கலாமா?

தீபிகா படுகோன்- பைலேட்ஸ்: 

தீபிகாவுக்கு பைலேட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இதன் பலனை,தீபிகாவின் படமான 'கெஹ்ரையன்' இல் நாம் காணலாம். ஃபிட்டாக இருக்கவும், நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவும் தீபிகா நீண்ட காலமாக பைலேட்ஸ் செய்து வருகிறார். 

சோனம் -நீச்சல்:

உடல் எடையை குறைக்கவும், உடல் அளவை பராமரிக்கவும் நீச்சல் ஒரு சிறந்த வழியாகும். சோனம் கபூர் நீச்சல் பயிற்சி மற்றும் ஹை இண்டென்சிட்டி கார்டியோ பயிற்சிகளை மாற்றி மாற்றி செய்கிறார். உங்கள் உடலைப் பராமரிக்க நீச்சல் ஒரு சிறந்த வழியாகும், நீச்சல் நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கிறது.

நர்கிஸ் ஃபக்ரி  - ஜூம்பா:

ஜூம்பா என்பது நடன பயிற்சியின் ஒரு வகை. ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும், நம் ஃபிட்னஸ் கோல்களை இதனால் அடையலாம். கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பாதவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம், கவலைகள் மறக்க ஜாலியாக நடனமாடலாம். ஜிம்மிற்கு போக முடியாவிட்டால், ஜூம்பா தான் தனக்கு உதவுவதாக நர்கிஸ் கூறியிருக்கிறார். 

ஷில்பா ஷெட்டி  - யோகா:

உ.பி.-பீகார் பெண்ணான ஷில்பா, கச்சிதமான உடற்கட்டுக்கு பெயர் பெற்றவர். இவர் யோகாவை தான் அதிகம் பின்பற்றுகிறார். யோகா சம்பந்தமாக இவர் சிடி கூட வெளியிட்டுள்ளார். கர்ப்பகாலத்தில் ஏறிய எடையை குறைக்க உதவியதாகவும், எப்போதும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் இருக்க உதவுவதாகவும் இவர் யோகாவை கூறுகிறார்.

பிபாஷா பாசு - கார்டியோ:

பிபாஷா தனது கச்சிதமான உடல் அமைப்புக்கு பெயர் பெற்றவர். இதற்காக பிபாஷா செய்யும் கடின உழைப்பு  மிகவும் பாராட்டுக்குரியது. பிபாஷா கார்டியோவை விரும்பி செய்கிறார். நல்ல உடல் அமைப்பில் இருக்க விரும்புபவர்களுக்கு அவர் கார்டியோ செய்வதை தான் ஊக்குவிக்கிறார்.