சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில வாவ் தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி சில சுவாரசிய தகவல்களை அறிய இங்கே படியுங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில வாவ் தகவல்கள்!

ஆரம்பத்தில், ரஜினிகாந்த் பெங்களூரில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்தார். பின்னர், தனது சினிமா கனவை தொடர மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டுக்குச் சென்றார். அவரது இந்த முடிவுக்கு ரஜினியின் குடும்பத்தினர் ஆதரவு அளிக்கவில்லை. இவருடைய ஆரம்ப கால கஷ்டத்தில் இவரை ஆதரித்தவர், இவருடைய நண்பர் ராஜ் பகதூர் தான்.

ரஜினி இளைஞராக இருக்கும் போது வருமானத்திற்காக, கூலி வேலைகளை கூட செய்துள்ளார்.

ஆரம்பத்தில் ரஜினி மேடை நாடகத்தில் நடிக்கும் போது, இயக்குநர் கே பாலச்சந்தரால் கவனிக்கப்பட்டார். அதன் பின் தான் இவரது வாழ்க்கை மாறத்தொடங்கியது.

கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா நடித்த பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

இதுவரை ரஜினிகாந்த் நடித்த ஒரே பெங்காலி திரைப்படம் பாக்யா தேபாடா என்ற படம் தான்.

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய 3 சூப்பர் ஸ்டார்கள் ஒன்றாக நடித்த ஒரே படம் ஜெராஃப்தார் தான்.

கருப்பு-வெள்ளை, கலர், 3டி மற்றும் மோஷன் கேப்சர் போன்ற பல்வேறு கேமரா தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் பணியாற்றிய முதல் இந்திய நடிகர் ரஜினிகாந்த் தான்.

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம், 2010 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த டாப் 50 படங்களின் IMDb இன் பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படம் IIM-A பல்கழைக்கழகத்தின் திரைப்படங்கள் சம்பந்தமான ஒரு முதுகலைத் படிப்பில் ஒரு ஆய்வுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினியும் ஒருவர். எந்திரன் படத்திற்காக இவரது சம்பளம் 57 கோடி.

ரஜினியின் பிரேத்யேக ஸ்டைலான சிகரெட்டை காற்றில் தூக்கி எறிந்து, பின் உதடுகளால் பிடிப்பதற்கான வழக்கம் அவரது 18 வயதிலேயே தொடங்கியதாம்.

ரஜினியின் ஒவ்வொரு படமும் வெளிவந்த பிறகு, ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஓய்வுக்காக வேறு ஊர்களுக்கு கிளம்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ரஜினியை திட்டுவதற்கும், ஆணையிடுவதற்கும் அதிகாரம் உள்ள ஒரே ஒரு நபர் அவரது வழிகாட்டியான கே .பாலச்சந்தர் மட்டும் தான்.

ரஜினிகாந்த் ட்விட்டரில் முதல் முறையாக மே 5, 2014 அன்று தோன்றினார். அந்த ஒரே நாளிலே சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஜினிகாந்தை ட்விட்டரில் பாலோ செய்ய தொடங்கினர். இது இன்றளவும் ஒரு சாதனையாக கருதப்படகிறது.