பொன்னியின் செல்வன் நாவலில் இதை கவனித்து உள்ளீர்களா?

பொன்னியின் செல்வன் நாவல் பற்றி சில தகவல்களை இங்கு தந்துள்ளோம்.படித்து பார்த்து மகிழுங்கள்.

பொன்னியின் செல்வன் நாவலில் இதை கவனித்து உள்ளீர்களா?

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆனாலும் அப்படத்தின் வரவேற்பு குறைந்த பாடில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் பொன்னியின் செல்வன் நாவலை படித்த அல்லது அதைப்பற்றி கேள்விப்பட்ட மக்கள் அந்த நாவலை திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும்  தான். அப்படிப்பட்ட இந்த நாவல் பற்றி சில தகவல்களை இங்கு தந்துள்ளோம்.படித்து என்ஜாய் பண்ணுங்க.

 

 

ஓவியங்கள்:

 

பொன்னியின் செல்வன் முதன்முதலில் கல்கி இதழில் தொடர்கதையாக வெளிவந்தபோது, ​​கல்கியின் அழகிய எழுத்து நடை , ஆழமான கதை மக்களை எந்தளவுக்கு ஈர்த்ததோ அதே போல்  கலைஞர் மணியம் வரைந்த ஓவியங்களும் மக்களை வெகுவாக கவர்ந்தன. இந்த கதையை  வாசகர்களின் கண் முன்னே உயிர்ப்பித்து காட்டுவது போல் இருந்த அவருடைய ஓவியங்கள் இந்த நாவலின் மற்றுமொரு சிறப்பம்சம். வந்தியத்தேவனின் வீரம், குந்தவையின் கம்பீரம், நந்தினியின் மூச்சடைக்கும் அழகு, பெரிய பழுவேட்டரையரின் பிரமிக்க வைக்கும் ஆளுமை என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும்  மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுமாறு மிகச் சிறப்பாக இருந்தன அவை. ஓவியர்  மணியத்தின் காட்சியமைப்புகள் நாவலின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்களித்தது.  இந்த நாவல் அடுத்தடுத்த பல தொடராக வெளிவந்தபோது, ​​மணியத்தின் சொந்த மகன் மணியம் செல்வன் தனது தந்தை ஆரம்பத்த ஓவியங்களை சிறந்த முறையில் எடுத்துச் சென்றார்.

 

 

தலைமுறைகளை கடந்தது:

1940 களில் பத்திரிகையில் முதன்முதலில் தொடராக வெளிவந்த இந்த நாவல் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஓடியது. கல்கி இதழ் இதுவரை ஏழு முறை இதைத் தொடர்கதையாக மறுபிரசுரம் செய்துள்ளது.  மூன்று வெவ்வேறு தலைமுறையினரைக் கவரும் வகையில், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, ஒரே இதழில் தொடராக வந்த பிரபலமான நாவல் தான் பொன்னியின் செல்வன் 

 

 

முயற்சி:

 

திரைப்பட உலகின் ஜாம்பவான்களான எம்.ஜி.ராமச்சந்திரன் , கமல்ஹாசன், பாரதிராஜா மற்றும் மணிரத்னம் போன்ற பலரும் இந்த நாவலை திரைப்படமாக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால் பட்ஜெட் மற்றும் பல  காரணங்களால் அவர்களால் அது  முடியவில்லை. 

 

 

நாடகம் :

சென்னையைச் சேர்ந்த மேஜிக் லான்டர்ன் என்ற நாடகக் குழு இந்த நாவலை கடந்த இரண்டு வருடங்களாக,   சிறந்த முறையில் அரங்கேற்றி மக்கள் ஆதரவையும் விமர்சனப் பாராட்டையும் பெற்றுள்ளது.

 

நேரம்:

 

கல்கி நாவலை முடிக்க மூன்றரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டார், மேலும் நாவல் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக மூன்று முறை இலங்கைக்கு பயணம் சென்றுள்ளார்

 

கற்பனை:

 

கதைக்களத்தை மிகவும் சுவாரஸ்யமாக்க, கல்கி சில கற்பனைக் கதாபாத்திரங்களைச் சேர்த்துள்ளார்., அதுமட்டுமல்ல,  உண்மையான கதாபாத்திரங்களுக்கு கூட சில கூடுதல் சிறப்பம்சங்களைச் சேர்த்துள்ளார். படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இதன் கதைக்களம் அமைந்துள்ளது.

 

சீரியல்:

மக்கள் தொலைக்காட்சி இந்த நாவலை சீரியல் போன்று எடுக்க முயற்சித்து, பின்னர் பட்ஜெட் சிக்கல்களால் அது தோல்வியில் முடிந்தது. 

ஆங்கில பதிப்பு:

 

இந்த நாவல் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளிவந்துள்ளது.