தடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு

தடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு . ஆச்சர்யமாக உள்ளதா?தொடர்ந்து படியுங்கள்!

தடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு

தந்தை மகன் கூட்டணி - என்ன சொல்ல வராங்க??
நம் நாட்டில் தினம் ஒரு கூட்டணியை பார்க்கிறோம். ஆனால் இந்த கூட்டணி புதுசா என்ன சொல்றாங்க என்று பார்க்கிறீர்களா? 

வடக்கு டகோட்டா பல்கலைக்கழகத்தில் கினோஸியலஜி மற்றும் பொது சுகாதார கல்வி துறை பேராசிரியராக இருந்த கிராண்ட் டோம்கின்சன், சேக்ரட் ஹார்ட் ஸ்கூலில்  படிக்கும் தனது  இளைய மகனான ஜோர்டானுடன் ஒரு  ஆராய்ச்சி மேற்கொண்டார்.

ஆய்வுக் கட்டுரை, "எண்களின் விகிதம் (2 டி: 4 டி) மற்றும் இளம் வயதினர்  கொண்ட தசை வலிமை" சமீபத்தில் ஜர்னல் ஆஃப் ஹ்யுமன் டெவெலப்மென்ட் என்ற பத்திரிகையில்   வெளியிடப்பட்டது. ஆள்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள வித்தியாசத்தை கொண்டு  தசைகளின் வலிமையை கண்டுபிடிக்கலாம்  என்பது அந்த ஆய்வின் செய்தி. 

"எண்களின் விகிதம்" என்று அழைக்கப்படும் இரண்டாவது ("ஆட்காட்டி ") விரலின் நீளம் மற்றும் நான்காவது ("மோதிர விரல் ") விரலின் நீளம் - சிறுவர்களில் தசை வலிமைக்கு சாதகமானதாக உள்ளது.(ஆட்காட்டி விரல் நீளம்/மோதிர விரல் நீளம்)

"உன் கை விரல்களை சோதிக்கவும்" என்று கிரான்ட் டோம்கின்சன் கூறினார்.எந்த விரல் நீளமாக உள்ளது . உங்கள் ஆட்காட்டி விரலா அல்லது மோதிர விரலா ?

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல்  நீளமாக உள்ளது என்று பதில் கூறினான் அவர் மகன். பெண்களுக்கு இரண்டு விரலுமே சரி சமமான அளவில் இருக்கும்.

கருவாக இருக்கும் போதே இந்த விரல்களின் நீளம் நிர்ணயிக்கப்படுவதாக மறைமுக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. டெஸ்டோஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனின் உற்பத்தியே  இந்த நீளத்தை நிர்ணயிக்கிறது. இந்த ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கும்போது விரலின் நீளங்களும் அதிகமாகின்றன.ஆகையால் இந்த எண்களின் விகிதம் குறைகிறது.

"டெஸ்டோஸ்டிரோன் என்பது விளையாட்டு, தடகள மற்றும் உடற்பயிற்சி சோதனை செயல்திறனை மேம்படுத்துகின்ற இயற்கை ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும். பொதுவாக, சிறிய இலக்க விகிதங்களைக் கொண்டவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள்.

சிறிய இலக்க விகிதங்களைக் கொண்ட ஆண் பிள்ளைகள், அவர்கள் வயதை காட்டிலும் அதிக  வலிமை உடையவர்களாக இருந்தனர் என்று டோம்கின்சன் கூறுகிறார்.

விளையாட்டு மற்றும் தடகள போட்டிக்கு தசை வலிமை முக்கியமாக இருக்க வேண்டும். இந்த ஆய்வின் மூலம் உங்கள் இலக்க  விகிதத்தை  கண்டறிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தேவையான வலிமையை அடைய முயற்சிக்கலாம்.

நல்ல  ஆரோக்கியமான  உடல் நலத்திற்கும் தசை வலிமை முக்கியமானது. குறைவான  இலக்க விகிதம் நல்ல உடல் நலனை பெற்று தரும் என்று டோம்கின்சன் கூறுகிறார்.

பெண்களுக்கும் குறைந்த இலக்க விகிதம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சிறந்த கூடை பந்து வீராங்கனைகளாக இருப்பர் என்று  டோம்கின்சனின் மாணவர் கண்டுபிடித்துள்ளார்.