ஆஸ்கார் வாங்கிய நாட்டு நாட்டு பாடல் பற்றிய சில தகவல்கள்!

உலக அளவில் பல அவார்டுகளை வாங்கிய நாட்டு நாட்டு பாடல், இன்று மதிப்பு மிக்க ஆஸ்கார் அவார்டை வாங்கி சாதனை படைத்துள்ளது.

ஆஸ்கார் வாங்கிய நாட்டு நாட்டு பாடல் பற்றிய சில தகவல்கள்!

பல பக்கங்களில் இருந்தும் வாழ்த்து மழையில் நனைந்து வரும் ஆர் ஆர் ஆர் பட குழுவினர், இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பார்கள். ஆஸ்கார் அவார்டை கையில் ஏந்தி அவர்கள் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த பாடல் வெளிவந்த உடனே மக்களால் கொண்டாடப்பட்டது. அதன் பிரத்யேக நடன வடிவமைப்பு, வரிகள், இசை, காட்சிகளின் பிரம்மாண்டம் என பல அம்சங்களில் மக்களால் நேசிக்கப்பட்டது. இப்போது ஆஸ்கார் அவார்டை வாங்கி , மேலும் இந்திய திரைப்பட உலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய டோலிவுட் படமான ஆர்.ஆர்.ஆர் படத்தின் இந்த பிளாக்பஸ்டர் பாடல் உலகம் முழுவதும் இப்போது சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த எனர்ஜியான பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்று உள்ளது. இதனால் அகாடமி விருதை வென்ற முதல் இந்தியராகவும், முதல் தெலுங்கு பாடலாகவும் நாட்டு நாட்டு பாடல் வரலாறு படைத்துள்ளது.

உலகம் முழுவதையும் உலுக்கிய இந்த நாட்டு நாட்டு பாடலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே தந்துள்ளோம். படித்து பார்த்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாடலாசிரியர் சந்திரபோஸ் , 90% பாடல் வரிகளை அரை நாளுக்குள் எழுதி முடித்தார். ஆனால் மீதமுள்ள கடைசி பகுதியை முடிக்க அவருக்கு 19 மாதங்களுக்கு மேல் ஆனதாம்.

 

இதன் இசையமைப்பாளர் கீரவாணி 20க்கும் மேற்பட்ட ட்யூன்களைக் கொண்டு எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் கொடுத்து உள்ளார். அதில் எதை தேர்வு செய்ய என்று குழப்பம் வந்த போது வாக்களிக்கும் செயல்முறையின் அடிப்படையில் தற்போதைய பதிப்பை இறுதி செய்தனர். RRR குழுவில் உள்ள பெரும்பாலானோர், படத்தில் நாம் பார்த்த தற்போதைய பதிப்பிற்கு தான் வாக்களித்துள்ளனர். 

இப்பாடல் வரும் ஹூக் ஸ்டெப்பிற்காக நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் கொக்கி சுமார் 110 ஸ்டெப்களை , எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் ஆடி காண்பித்துள்ளார். நாம் ரசித்த இந்த ஹூக் ஸ்டெபை ராஜமௌலி இறுதி செய்தார். 

 ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் 350 க்கும் மேற்பட்ட நடிகர்களுடன் இந்த முழு பாடலையும் படமாக்க 15 நாட்கள் எடுத்தது. அவர்களில் சிலர் தொழில்முறை நடனக் கலைஞர்கள்.

 

பாடலில் நாம் பார்த்த அரண்மனை, கியேவில் உள்ள உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான மரின்ஸ்கி அரண்மனை.

 

எதிலும் நேர்த்தியை விரும்பும் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை குறைந்த பட்சம் 18 முறை ஹூக் ஸ்டெப் செய்ய வைத்துள்ளார். 

ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா பாடிய இந்த நாட்டு நாட்டு பாடல், ஆஸ்கார் அவார்ட் மட்டுமல்லாமல் கோல்டன் குளோப் விருது, விமர்சகர்களின் சாய்ஸ் விருது, HCA விருது மற்றும் ஹூஸ்டன் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை வென்றது.