உங்கள் குழந்தை டாக்டரை பார்த்து பயப்படுகிறதா?

சிறு குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து செல்லும் போது அவர்கள் அழாமல் இருக்க என்ன செய்யலாம் என அறிய இங்கே படியுங்கள்.

உங்கள் குழந்தை டாக்டரை பார்த்து பயப்படுகிறதா?

இரண்டு வயதான குழந்தைளை வேக்‌சின் போட அல்லது உடல்நல காரணங்களுக்காவும் நாம் அடிக்கடி மருத்துவரிடம் அழைத்து செல்வது போல் இருக்கிறது. இந்த வயதான சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.  எனவே நாம் நினைப்பதை விட அதிகமாகவே மருத்துவரை சந்திப்பது போல் சூழ்நிலை அமைகிறது. அந்த நேரங்களில் பெரும்பாலான குழந்தைகள் அழுது ஊரை கூட்டி விடுகின்றனர். இதை எப்படி சமாளிக்க என அறிய இங்கே படியுங்கள்.

மருத்துவர்கள் பற்றிய பயம் பெரும்பாலும் 2 வயது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இதற்கு முன்பு டாக்டரை பார்த்து நன்றாக சிரித்த குழந்தைகள் கூட இப்போது அழத் தொடங்கலாம்.

குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் போது தங்களுக்கு முன்னால் இருக்கும் விஷயங்களை தாண்டி கற்பனை செய்யும் திறன் உருவாகுகிறது. எனவே எல்லா வகையான கற்பனைகளும் அவர்களுக்கு ஏற்படுகிறது. அதையொட்டிய பயங்களும், சந்தோஷங்களும் இந்த வயதில் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த கால அனுபவங்களை (தடுப்பூசி வலி போன்றவைகள்) அவர்கள் நினைவில் கொள்ளும் திறனும் இந்த வயதில் இருக்கிறது. இதனால் தான் அவர்கள் மருத்துவர்களை பார்த்து பயப்படுகிறார்கள்.

இதை சமாளிக்க சில வழிகள்:

குழந்தைள் விளையாட்டு சாமானான டாக்டர் கிட்டை அவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். அதிலுள்ள பொம்மை ஸ்டெதாஸ்கோப், தெர்மோமீட்டர் போன்ற பல  விளையாட்டு சாமான்களை கொண்டு, அவர்கள் டாக்டராக கற்பனை செய்து கொண்டு விளையாட வாய்ப்பு கொடுங்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு பொம்மையை நோயாளி போல்  உருவாக்கி, டாக்டரிடம் கூட்டி கொண்டு போனால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். 

இது மட்டுமல்ல உங்கள் குழந்தையை நீங்கள், உங்கள் மடியில் வைத்துக் கொண்டு, ஊசி போடுவது போல் விளையாடுங்கள். ஊசி வலிக்காது என எப்போதும் பொய் சொல்ல கூடாது. அதே போல் உங்கள் குழந்தையிடம், "உங்களுக்கு ஊசி கிடையாது" போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். 

இப்படி செய்தால் உடனடியாக டாக்டரை பற்றிய பயம் நீங்காது. ஆனால் நாளடைவில் கண்டிப்பாக நல்ல மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் வளர்ப்பில் பொறுமையே உங்களின் சிறந்த நண்பன்!