மருதாணியே தேவையில்லை 5 நிமிடத்தில் உங்கள் கைகளில் போட்ட மெஹந்தி டிசைன் செக்கசெவேலுனு சிவந்திருக்கும்

இயற்கையாக செய்யும் இந்த மெஹந்தியால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை, எல்லாக் காலங்களிலும் பயன்படுத்தலாம்.

மருதாணியே தேவையில்லை 5 நிமிடத்தில் உங்கள் கைகளில் போட்ட மெஹந்தி டிசைன் செக்கசெவேலுனு சிவந்திருக்கும்

மருதாணியே தேவையில்லை 5 நிமிடத்தில் உங்கள் கைகளில் போட்ட மெஹந்தி டிசைன் செக்கசெவேலுனு சிவந்திருக்கும்

சுப நிகழ்ச்சிகள், பண்டிகைகள் மற்றும் திருவிழா போன்ற கொண்டாடங்களின் போது ஏன் பெண்கள் மருதாணி போட்டு இருக்கிறார்கள் அழகுக்காக என்றாலும் மங்கலத்தை குறிக்கும் என்பதற்காக தான். மருதாணியே தேவையில்லை 5 நிமிடத்தில் உங்கள் கைகள் அல்லது கால்களில் போட்ட மெஹந்தி டிசைன் செக்கசெவேலுனு சிவந்திருக்க வேண்டுமா. அப்போது கீழே குறிப்பிட்டுள்ள தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வெல்லம் - 3 ஸ்பூன்

சீரகம் -1 ஸ்பூன் 

மூன்று ஸ்பூன் வெல்லத்தை ஒரு ஸ்பூன் சீரகத்துடன் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். தகர டப்பாவை (பால் பவுடர் டப்பா அல்லது பெயிண்ட் டப்பாவை) எடுத்துக் கொள்ளவும். இந்த டப்பாவின் நடுவில் ஒரு அகல் விளக்கை வைக்கவும். பிறகு டப்பாவின் ஓரமாக கலந்து வைத்திருக்கும் வெல்லம் மற்றும் சீரக கலவையை அகல் விளக்கை சுற்றி போட வேண்டும். அந்த அகல் விளக்கின் மேல் ஒரு சிறிய கிண்ணத்தை வைக்கவும். பின்னர் டப்பாவின் மேல் காற்று வெளியே போகாதவாறு வேறு ஒரு பாத்திரத்தை ¼ பங்கு தண்ணீரை நிரப்பி வைத்து விடுங்கள். இந்த டப்பாவை அடுப்பில் வைத்து மேலே உள்ள பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கொதிக்கும் போது அடுப்பை அணைத்து விடவும். டப்பா ஆறியவுடன் திறந்து பார்த்தால் அதில் வைத்திருக்கும் கிண்ணத்தில் தண்ணீராக இருக்கும் அந்த தண்ணீரில் சிவப்பு குங்குமம் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை குச்சி அல்லது பட்ஸை வைத்து மருதாணி டிசைனை போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கை கழுவினால் உங்கள் கையிலுள்ள டிசைன் அழகாக செக்கசெவேலுனு சிவந்திருக்கும்.

பயன்கள்

  1. இது எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
  2. மருதாணி இல்லாமலே உங்கள் கைகளை அலங்கரிக்கலாம்.
  3. இது மருதாணி போல் குளிர்ச்சியானது கிடையாது. அதனால் மழைக்காலம், குளிர்காலம் போன்ற காலங்களிலும் பயன்படுத்தலாம்.
  4. காய்ச்சல் மற்றும் சளி பிடித்திருக்கும் போதும் இதைப் பயன்படுத்தலாம்.
  5. பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. 

பொதுவாக பெண்களுக்கு அலங்காரம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மருதாணி என்றால் எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது. இனி எந்த பயமும் இன்றி இந்த முறையைப் பயன்படுத்தி உங்கள் கைகளில் விதவிதமான டிசைன்களை போட்டு மகிழுங்கள்.