இந்த பொருத்தங்கள் இருந்தால் திருணம் செய்யலாம் !

5 முக்கியமான பொருத்தத்தில் ஒன்று பொருந்தவில்லை என்றாலும் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.

இந்த பொருத்தங்கள் இருந்தால் திருணம்  செய்யலாம் !

முக்கியமான திருமண பொருத்தங்கள்

திருமணப் பொருத்தம் 10 என்றாலும் அதில் மிக முக்கியமாக 5 பொருத்தங்கள் இருக்க வேண்டும். இந்த 5 திருமண பொருத்தங்களை  பற்றி விரிவாக காணலாம் வாருங்கள். 

5 முக்கிய திருமண பொருத்தங்கள்:

  • தினப் பொருத்தம்:  

இந்த பொருத்தம் இருந்தால் ஆயுள் ஆரோக்கியம் விருத்தியடையும். 

பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆணுடைய நட்சத்திரம் 2,4,6,8,9,

11, 13,15, 18, 20, 24,26 ஆக இருந்தால் அது நல்ல பலனை தரும். அதுவே 3,5,7,12,14,16,21,23,25 ஆக இருந்தால் அது கெட்ட பலனை தரும்.

ஒரே ராசியாக இருக்கலாம், ஆனால் ஒரே நட்சத்திரமாக இருக்கக் கூடாது, ஒருவேளை நட்சத்திர பாதம் மாறி இருந்தால் உத்தமம். 

எந்த நட்சத்திரம் ஏக நட்சதிரங்களாக இருந்தால் பொருந்தும்:

ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உண்டு.

பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் செய்யலாம்.

  • கணப் பொருத்தம்: 

இந்த பொருத்தம் இருந்தால் மங்கலம் உண்டாகும். கணங்கள் முன்று  வகையாக பிரிக்கப்படுகிறது. அவை தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கணங்களை குறிக்கும். 

தேவ கணம் நட்சத்திரங்கள் :

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

மனுஷ கணம் நட்சத்திரங்கள்:

 பரணி, ரோகினி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி. 

ராட்சஸ கணம் நட்சத்திரங்கள்: 

கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம். 

பெண் மற்றும் ஆண் ஒரே

கணத்தில் அமைவது விசேஷம். தேவ, மனுஷ கணம் கொண்ட பெண் எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார். ராட்சஸ கணத்தில் பிறந்த பெண் மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக மாட்டார்.

  • யோனி பொருத்தம்: 

இந்த பொருத்தம் இருந்தால் கணவன் மனைவிக்கிடையே தாம்பத்தியம் ருசிக்கும், ஒற்றுமை மேம்படும்.

நட்சத்திரத்திற்கு உரிய மிருகம்

அஸ்வினி, சதயம் - குதிரை 

பரணி, ரேவதி- யானை

கார்த்திகை, பூசம்- ஆடு

ரோகினி, மிருகசீரிஷம் - பாம்பு திருவாதிரை, மூலம்- நாய்

புனர்பூசம், ஆயில்யம்- பூனை

மகம், பூரம் - எலி 

உத்திரம், உத்திரட்டாதி - பசு

அஸ்தம், ஸ்வாதி - எருமை

 சித்திரை, விசாகம் - புலி

அனுஷம், கேட்டை - மான்

 பூராடம், திருவோணம் - குரங்கு உத்திராடம் - கீரி

அவிட்டம், பூரட்டாதி - சிங்கம் 

பகை மிருகங்கள்:

குதிரைக்கு எருமை பகை, யானைக்கு சிங்கம் பகை, 

ஆடுக்கு குரங்கு பகை, 

பாம்புக்கு எலி பகை,

பசுவுக்கு குதிரை பகை,

எலிக்கு பூனை பகை,

கிரிக்கு பாம்பு பகை,

மானுக்கு நாய் பகை,

ஆண் மற்றும் பெண் பகை மிருகங்களாக இருந்தால் யோனி பொருத்தமில்லை, மற்றவை ஒன்றுக்கொன்று இணைந்தால் யோனி பொருத்தம் உண்டு.

  • ராசி பொருத்தம்: 

இந்த பொருத்தம் இருந்தால் வம்ச விருத்தி அடையும். பெண் ராசியில் இருந்து ஆண் ராசி 1,2,3,4,5,6 மற்றும் 8 ஆக இருந்தால் பொருத்தம் இல்லை. பெண் ராசியில் இருந்து ஆண் ராசி 7,8,9,10,11,12 ஆக இருந்தால்   பொருத்தம் உண்டு. ஆனால் 7வது ராசியாக கும்பம், சிம்மம், கடகம் மற்றும் மகரம் பொருந்தாது. ஒரே ராசியாக இருந்தால் பொருந்தும். 

சிறப்பான ராசி  பொருத்தம்:

மேஷ ராசி- மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சகம், மகரம் மற்றும் துலாம். 

ரிஷப ராசி- கடகம், கன்னி, மீனம் மற்றும் மகரம்.

மிதுன ராசி- மேஷம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் மகரம். 

கடக ராசி- ரிஷபம், சிம்மம், மகரம் மற்றும் மீனம்.

சிம்ம ராசி- கும்பம், மேஷம் துலாம், விருச்சகம் மற்றும் தனுசு.

கன்னி ராசி- ரிஷபம், கடகம், துலாம் மற்றும் மகரம்.

துலாம் ராசி- மேஷம், சிம்மம், கன்னி, தனுசு மற்றும் மகரம்.

விருச்சக ராசி- கடகம், சிம்மம், கன்னி, மீனம் மற்றும் ரிஷபம்.

தனுசு ராசி- மிதுனம், சிம்மம், மேஷம், துலாம் மற்றும் கும்பம்.

மகர ராசி- கடகம், ரிஷபம், கன்னி, மீனம் மற்றும் விருச்சகம். 

கும்ப ராசி- சிம்மம், மேஷம் மிதுனம், கன்னி மற்றும் துலாம். 

மீன ராசி- கன்னி, ரிஷபம், கடகம், துலாம் மற்றும் விருச்சகம்.

  • ரஜ்ஜூம் பொருத்தம்:

இந்த பொருத்தம் இருந்தால் பெண்ணுக்கு தீர்க்கசுமங்கலி பாக்கியம் உண்டாகும். 

சிரசுரஜ்ஜு , கண்ட ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, ஊரு ரஜ்ஜு,  பாத ரஜ்ஜு என ஐந்து வகை ரஜ்ஜுக்கள் உள்ளன. 

சிரசு ரஜ்ஜு (தலை) - கணவனை பாதிக்கும்.

கண்ட ரஜ்ஜு (கழுத்து)  - மனைவியை பாதிக்கும்.

உதர ரஜ்ஜு (வயிறு) - குழந்தைகளை பாதிக்கும் அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காது.

ஊரு ரஜ்ஜு (தொடை) - சொத்துகள் மற்றும் செல்வங்களை இழக்க நேரிடும்.

பாத ரஜ்ஜு(கால்) - கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் இருந்தால் பொருத்தம் இருக்கும்.

இந்த 5 பொருத்தத்தில் ஒன்று பொருந்தவில்லை என்றாலும் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. இதில் மிக மிக முக்கியமாக ரஜ்ஜு மற்றும் யோனி பொருத்தம் பொருந்தி இருக்க வேண்டும்.