சிவனின் ஆனந்த தாண்டவம் நமசிவாய எனும் திருமந்திரத்தை எவ்வாறு உணர்த்துகிறது?

ஆனந்தமயமாகிய இறைவனுடைய திருக்கூத்தை ஐந்தெழுத்து நிலையிலிருந்தே காணலாம் என்று திருமூலர் கூறுகின்றார்.

சிவனின் ஆனந்த தாண்டவம் நமசிவாய எனும் திருமந்திரத்தை எவ்வாறு  உணர்த்துகிறது?

சிவனின் ஆனந்த தாண்டவம் நமசிவாய எனும் திருமந்திரத்தை எவ்வாறு  உணர்த்துகிறது?

ஆனந்த தாண்டவ கோலத்தில் பஞ்சகிருத்தியம் எனப்படும் ஐந்து வகைச் செயல்பாடுகளைத் தொடர்புபடுத்துகிறது என்று நாட்டிய சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனந்தமயமாகிய இறைவனுடைய திருக்கூத்தை ஐந்தெழுத்து நிலையிலிருந்தே காணலாம் என்று திருமூலர் கூறுகின்றார். இதற்கு பொருள் நடராஜர் சிதம்பரத்தில் ஆடி கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் ஐந்தெழுத்து திருமந்திரமான "நமசிவாய"  தத்துவத்தை உணர்த்துகிறது என்பதாகும்.

                நமசிவாய 

                       ந

வலப்புற மேற் கரத்தில் அவர் பிடித்திருக்கும் உடுக்கையின் சப்தத்தில் ‘ந’ எனும் எழுத்தும்,

  • சித்தியோச முகமும்,
  • மேற்கு திசையும்,
  • பிருத்வி ( பூமி) எனும் பூதமும்,
  • படைத்தல் தொழில் புரியும் பிரம்மாவும்,
  • கிரியா சக்தியும் 

                          

அருள் புரியும் வலப்புற கீழ் கரத்தில் ‘ம’ எனும் எழுத்தும்,

  • தத்புருஷ முகமும்,
  • கிழக்கு திசையும்,
  • வாயு (காற்று) எனும் பூதமும்,
  • காத்தல் தொழில் புரியும் விஷ்ணுவும்,
  • ஞான சக்தியும்

                             சி

இடப்புறம் மேற் கரத்தில் வைத்திருக்கும் அக்னியில் ‘சி’ எனும் எழுத்தும்,

  • அகோர முகமும்,
  • தெற்கு திசையும்,
  • தேயு (நெருப்பு) எனும் பூதமும்,
  • அழித்தல் தொழில் புரியும் ருத்ரனும்,
  • இச்சா சக்தியும்  

                             வா 

முயலகன் மீது ஊன்றிய வலது பாதத்தில் ‘வா’ எனும் எழுத்தும்,

  • வாமதேவ முகமும்,
  • வடக்கு திசையும்,
  • அப்பு (நீர்) எனும் பூதமும்,
  • மறைத்தல் தொழில் புரியும் சதாசிவனும்,
  • ஆதிசக்தியும் 

                             

இடது கரம் சுட்டிக் காட்டும் தூக்கிய குஞ்சித பாதத்தில் (இடது பாதத்தில்) ‘ய’ எனும் எழுத்தும்,

  • ஈசான முகமும்,
  • உச்சிதிசையும்,
  • ஆகாயம்(வானம்) எனும் பூதமும்,
  • மோட்சத்தை அருளும் மகேஸ்வரனும்,
  • பராசக்தியும் 

மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து முகங்கள், ஐந்து திசைகள், ஐந்து பூதங்கள், ஐந்தொழில்கள், ஐந்து சக்திபேதங்கள் ஆகியவை ஆகாயத் தலமான சிதம்பரத்தில் நடராஜர் ஆடி கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவத்தில் ஒருங்கே உள்ளடங்கியுள்ளன. இவை அனைத்தும் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உணர்த்துகிறது.