குத்தூசி மருத்துவம்

Politics • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக உடலில் ஊசிகளைச் செருகுவதற்கான மற்றும் கையாளுவதற்கான செயல்முறை ஆகும். குத்தூசி மருத்துவம்: வலி நிவாரணத்துக்கு, சிகிச்சைசார் உணர்வகற்றலைத் தூண்டுவதற்கு மற்றும் நோய்தீர்க்கும் நோக்கத்திற்காக நயமான ஊசிகளை வைத்து உடலில் உள்ள புறத்திய நரம்புகள் நெடுகிலும் குறிப்பிட்ட பகுதிகளில் துளையிடும் சீன நடைமுறை ஆகும். உடலில் பல ஊசிகளைச் செலுத்தும் முறைக்கு சீன அக்குபங்சர் என்றும், ஒரே ஒரு ஊசியைச் செலுத்தும் அல்லது கை விரலால் தொடும் அக்குபங்சர் முறைக்கு மரபுமுறை அல்லது இந்திய அக்குபங்சர் என்றும் அழைக்கப்படுகிறது. குத்தூசி மருத்துவத்தின் ஆரம்பகால எழுத்துப்பதிவு சீன உரைநடை ஷிஜி (史記, ஆங்கிலம்: Records of the Grand Historian ) ஆகும். அதன் வரலாற்றின் விரிவாக்கம் இரண்டாம் நூற்றாண்டு BCE மருத்துவ உரைநடையான ஹுவாங்டி நெய்ஜிங் கில் (黃帝內經, ஆங்கிலம்: Yellow Emperor's Inner Canon ) இருந்தது. குத்தூசி மருத்துவத்தின் மாறுபட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கின்றன மற்றும் கற்பிக்கப்படுகின்றன. குத்தூசி மருத்துவமானது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இயக்கத்தில் உள்ள அறிவியல் சார் ஆராய்ச்சியின் பொருளாக இருக்கிறது. ஆனால் இது வழக்கமான மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் சிகிச்சை மருத்துவர்களுக்கு இடையில் சர்ச்சைக்குரியதாக நீடித்திருக்கிறது. குத்தூசி மருத்துவம் சிகிச்சையின் துளையிடல் இயல்பின் காரணமாக முறையான அறிவியல் சார் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை உருவாக்குவது சிரமமானதாக இருக்கிறது. இந்த சிகிச்சையை மருந்துப்போலி விளைவு மூலமாக பெருமளவில் விவரிக்க இயலும் என குத்தூசி மருத்துவத்தின் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட சில அறிஞர்களின் மதிப்பீடுகள் முடிவு செய்திருக்கின்றன. அதே சமயம் மற்றவர்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளில் சிகிச்சையின் சில உச்சவினையை வலியுறுத்துகின்றனர். ஒரு குத்தூசி மருத்துவம் நிபுணர் உலக சுகாதார நிறுவனத்துக்காக குத்தூசி மருத்துவத்தின் சிகிச்சை சார்ந்த சோதனைகளின் மதிப்பீட்டை வெளியிட்டார். அதில் பல நிலைகளுக்கான சிகிச்சையில் இது பயன் மிக்கதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கை துல்லியமாக இல்லாமலும், தவறான வழி கூறுவதாக உள்ளதாகவும் மருத்துவ அறிஞர்களால் பொதுவாக விமர்சிக்கப்பட்டது. மாற்று மருத்துவ உரைகள் சிறப்பு குத்தூசி மருத்துவம் நுட்பங்கள் நரம்பிய நிலைகளுக்கான சிகிச்சைக்கும் வலி நிவாரணத்திற்கும் பயன் மிக்கதாக இருக்கலாம் என அறிவித்திருக்கின்றன. ஆனால் அது போன்ற அறிவிப்புகள் அறிவியல் அறிஞர்களால் மோசமான ஆராய்ச்சி முறையைப் பயன்படுத்தி ஆய்வுகளில் ஒருதலைச்சார்பு மற்றும் நம்பிக்கை கொண்டிருந்ததன் காரணமாக விமர்சிக்கப்பட்டது. நேசனல் சென்டர் ஃபார் காம்ப்ளிமெண்டரி அண்ட் ஆல்டர்னேட் மெடிசினின் (National Center for Complementary and Alternative Medicine) (NCCAM) அறிக்கைகள், அமெரிக்க மருத்துவச் சங்கம் (American Medical Association) (AMA) மற்றும் பல்வேறு அரசாங்க அறிக்கைகள் குத்தூசி மருத்துவத்தின் பலாபலன் (அல்லது அதில் உள்ள குறைப்பாடு) குறித்து ஆய்வு செய்து கருத்து தெரிவித்திருக்கின்றன. நன்கு பயிற்சி பெற்ற நிபுணர் மூலமாக நுண்ணுயிரற்ற ஊசிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குத்தூசி மருத்துவம் சிகிச்சை பாதுகாப்பானது எனப் பொதுவான உடன்பாடு இருக்கிறது. மேலும் இது குறித்து தொடர்ந்து ஆய்வு தேவையாக இருக்கிறது
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like