BACK TO TOP

Paradesi @ Newyork: கொண்டையில் மறைத்து வந்த புத்தரின் புனிதப்பல் !!!!!!

எங்களுடைய கார் மெதுவாக மலைப்பகுதிகளில் ஏறி முன்னேறியது. முனை சந்திப்பில் ஒரு மாபெரும் புத்தர் சிலை இருந்தது.

"என்ன இது எதுவும் முக்கிய இடமா அம்ரி ?"

“இல்லை சார் இங்கெல்லாம் நிறைய இடங்களில் புத்தர் சிலை இருக்கும்”.



ஊருக்கு வெளியே இருப்பதால் எல்லைக்காவல் புத்தராக இருக்குமா என்று நினைத்தேன் ( ?). உருவ வழிபாடு இல்லாமல் முக்திக்கு வேறு ஒரு வழியைச் சொன்ன புத்தரையே சிலையாக வடித்துக் கும்பிடுகிறார்களே என்று நினைத்தபடியே கடந்தேன். புத்தர் தங்க நிற வண்ணத்தில் பளபளவென்று இருந்தார். இந்து மதத்தில் கூட ஆதி வேதங்களில் இல்லாத உருவ வழிபாடு இடையில் செருகப்பட்டது. இஸ்லாம் சமயத்தில் தர்காக்கள் அமைத்து இறந்தவர்களை வழிபட ஆரம்பித்தார்கள். ஏன் உருவ வழிபாட்டை முற்றிலும் எதிர்க்கும் பத்துக் கட்டளைகளைக் (Ten Commandments) கொண்ட கிறித்துவ மதத்திலும் தும்பைவிட்டு வாலைப்பிடித்த கதையாக அன்னை மேரியை கடவுளாக்கியதோடு இயேசுவின் சீடர்களையும் சிலையமைத்து வணங்க ஆரம்பித்ததை என்னவென்று சொல்வது?

Comments

Who Upvoted this Story