இஞ்சி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சில வழிகள்

நீண்ட நாட்கள் இஞ்சி கெடாமல் பாதுகாக்க சில வழிகள்!

இஞ்சி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சில வழிகள்

நம் வீட்டு சமயலறையில் உள்ள மளிகை பொருட்கள் அல்லது காய்கறிகள் அழுகி வீணாகும் போது நமக்கு நிச்சயம் கஷ்டமாக இருக்கும். அதற்கான சரியான காரணம் தெரியாதபோது இன்னும் கஷ்டமாக இருக்கும். இது இஞ்சிக்கும் சேர்த்து தான். இஞ்சியின் வாசனை மற்றும் அதன் சுவை பல்வேறு உணவுகளில் அதன் சுவையை அதிகரிக்க உதவும். இஞ்சியில் மருத்துவ குணங்களும் உண்டு. சில நேரங்களில் இஞ்சி பூசணம் பூக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அப்படி பூசணம் பூத்த இஞ்சியை மேலும் பயன்படுத்த முடியாது.

இஞ்சியை வாங்கும் போது நல்ல பிரெஷ் இஞ்சிகளை வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் இஞ்சியில் தோல் மென்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அதன் வேர்கள் கடினமாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். தோல் சுருக்கமாக இருக்கும் இஞ்சியை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. இது நாட்பட்ட இஞ்சியாக இருக்கலாம். வெள்ளையாக பூசணம் பூத்த அல்லது ஈரமான இஞ்சியையும் வாங்காமல் இருப்பது நல்லது.

இஞ்சி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

எப்போதும் இஞ்சியை ஒரு பேப்பர் பை அல்லது பேப்பர் டவலில் சுற்றி ப்ரிட்ஜில் வைக்கலாம். காற்று அல்லது ஈரப்பதம் புகாதபடி பேப்பரில் சுற்றி வைக்கவும். இப்படி செய்வதால் இஞ்சி நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.

எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமில கரைசல் உள்ள ஜாரில் தோல் உரித்த இஞ்சியை சேமித்து வைக்கலாம். இது ஒரு சிறந்த வழியாகும். ஆனால், இந்த கரைசலில் இஞ்சியை வைப்பதால் அதன் சுவை மற்றும் வாசனையில் வேறுபாடு இருக்கலாம்.

இஞ்சி கேட்டு போகாமல் இருக்க மற்றொரு சிறந்த வழி உண்டு. இஞ்சியை தோல் சீவி, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு ட்ரேயில் போட்டு பிரீசரில் வைத்து பிரீஸ் செய்து கொள்ளவும். இப்படி பிரீஸ் செய்யப்பட்ட இஞ்சியை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். இப்படி பதப்படுத்தப்பட்ட இஞ்சி, அடுத்த இரண்டு மாதங்கள் வரை கேட்டு போகாமல் அதன் சுவையும் மாறாமல் இருக்கும். 

பிரிட்ஜில் வைக்கும் போது இஞ்சியை தோல் சீவி, நறுக்காமல், அப்படியே முழுதாக வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது எடுத்து வேண்டிய அளவை நறுக்கி பயன்படுத்தலாம். இஞ்சி துண்டுகளை ரீ-சீலபில் (resealable) பையில் காற்றை வெளியேற்றி விட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதனால் ஒரு மாதம் வரை இஞ்சி கெடாமல் இருக்கும். 

கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் :

இஞ்சியை தோல் உரித்து, வெட்டி வைத்தபின், சாதாரணமாக வெளியில் வைக்கக் கூடாது. அப்படி உரித்த இஞ்சியை கெட்டு போகாமல் வைத்துக் கொள்ள பிரீசரில் அல்லது பிரிட்ஜில் மட்டுமே வைக்க வேண்டும். 

காற்று அல்லது ஈரப்பதம் புகாமல் இருக்கும் போது பிரிட்ஜிலேயே இஞ்சி மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

பெரிய துண்டு இஞ்சிகளை காற்று புகாத டப்பாவில் வைத்து பிரீசரிலும் வைத்துக் கொள்ளலாம்.

பிரெஷ்ஷான இஞ்சியை பெற எளிய வழி, வீட்டிலேயே இஞ்சி செடியை வளர்ப்பது தான். ஆகவே உங்கள் வீட்டு சமையலறை தோட்டத்தில், இஞ்சியை வளர்க்கத் தொடங்குங்கள்