இசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்

ஒரு இசையை கேட்பதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலத்தில் முன்னேற்றம் கிடைக்கிறது என்று உடல்மூலக்கூறுகள் பற்றிய ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.

இசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்

இசை மனித உடலின் ஹார்மோன் மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடு ஆகியவற்றை நேரடியாக பாதிக்கிறது. இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மற்றும் இசையை கேட்பவர்கள் ஏராளமான நன்மைகளை பெறுவர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 

இசையினால் கிடைக்கும் பலன்களை இப்போது பாப்போம்.

1. இசை இன்பத்தை அதிகரிக்கிறது:
இந்த விஷயத்தை நாம் அனைவரும்  அறிவோம். நல்லஇசை நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். உடனடியாக உங்கள் உணர்ச்சிக்கு ஒரு உச்சம் வேண்டும் என்று நினைப்பவர்கள் , தனக்கு பிடித்த இசையை ஒரு 15 நிமிடங்கள் கேட்டால் அவர் உணர்ச்சியின் உச்சத்தை தொட்டிருப்பார். இது ஏனென்றால் , பிடித்த இசையை கேட்கும்போது, ஒருவரது மூளை டோபமைன் என்ற கூறை வெளியிடுகிறது. இது ஒரு நரம்பியகடத்தி.இதன் மூலம்  சந்தோசம், உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. 

2. ஓடும் திறனை அதிகரிக்கும்:
ஓட்ட பந்தயத்தில் ஊக்கமளிக்கும் வேகமான அல்லது மெதுவான பாடல்களை கேட்பவர்கள் வேகமாக ஓடுகிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.  அவர்கள்  வேகமாக செயல்பட  இசை ஒரு உந்து சக்தியாக இருப்பதாக கூறுகிறார். 

3. மன அழுத்தத்தை குறைக்கிறது: 
இசை ஹார்மோன்களில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. நமக்கு பிடித்த இசையை நாம்  கேட்கும்போது உடலில் ஹார்மோன் கார்டிசோல் அளவை இது குறைகின்றது . இதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது.  மன அழுத்தம் 60% நோய்களுக்கு காரணமாய் இருக்கிறது. ஆகவே குறைந்த மன அழுத்தம் அதிக நலனை கொடுக்கிறது.

பல்வேறு இசை கருவிகளை வாசிப்பவர்களும், பாடுபவர்களும் ஒரு குழுவில், இசையை அதிகம் கேட்காதவர் மற்றொரு குழுவில்  பிரிக்கப்பட்டு அவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை பரிசோதித்தனர். அவைகளில் முதல் குழுவை சேர்ந்தவர்களின் நோயெதிர்ப்பு சக்தி வியப்பூட்டும் வகையில் அதிகரித்துக் காணப்பட்டது. ஆகையால், மன அழுத்தம் அதிகமாகும் வேளையில்  , சிறிது இசையை கேளுங்கள்.

4. இசை தூக்கத்தை மேம்படுத்தும் :
இன்று பலர் தூக்கமின்மை   எனும் இன்சோம்னியா வால் பாதிக்கப்படுகின்றனர். தூங்க செல்லும் 1 மணி நேரம் முன், ஏதேனும் ஒரு மனதை வருடும் இசை கேட்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. 

5. மனச்சோர்வை குறைக்கிறது:
இசை நமது ஹார்மோன்களில்  நேரடி விளைவை ஏற்படுத்துவதால் , இது மனச்சோர்வை போக்க இயற்கையாகவே உதவுகிறது. சில ராகங்கள் மூளையில் செரோட்டின் மற்றும் டோபமின்களை வெளியேற்றுகிறது. இதனால் மகிழ்ச்சி மற்றும்  நல் வாழ்வை ஏற்படுத்தும் உணர்வுகள் உண்டாகின்றன .

அதிகமாக கிளாசிக்கல் மற்றும்  மனதை வருடும் இசையை   கேட்பதனால் மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோர்  எண்ணிக்கை குறைகிறது மற்றும் அவர்கள் மனநிலை நேர்மறையாக மாறுகிறது  என்று ஆய்வுகள் கூறுகிறது . 

6.குறைவாக சாப்பிட உதவுகிறது:
ஆய்வுகளின் படி,மென்மையான வெளிச்சத்தில் இசையை கேட்டபடி உணவு உட்கொள்ளும்போது குறைந்த அளவு உணவு மட்டுமே உண்ண முடிகிறது என்று கூறுகின்றனர். 

7.டிரைவிங் போது இசை உங்கள் மனநிலை உயர்த்தும்:
வாகனங்களை  செலுத்தும் போது நல்ல இசை கேட்பது நமது மனதை லேசாக்குகிறது.இதன் மூலம் நாம் பாதுகாப்பாகவும், நல்ல முறையிலும் நமது பயணத்தை தொடர முடிகிறது.

8.இசை பேச்சு திறனை அதிகரிக்கிறது :
4-6 வயது வரை உள்ள 90% குழந்தைகள்  இசை கற்க ஆரம்பித்த பிறகுதான் அவர்கள் பேச்சு திறன் அதிகரித்திருக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது .இதில் ரிதம், பிட்ச், மெல்லிசை மற்றும் குரலைப் பற்றி கற்றுக்கொண்டனர். இசைப் பயிற்சி ஒரு "பரிமாற்ற விளைவை" கொண்டிருந்தது, அது வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய குழந்தைகளின் திறனை அதிகப்படுத்தியது, இன்னும் கூடுதலானது அவர்களுக்கு வார்த்தைகளின் அர்த்தங்களும் விளங்குகிறது.

மற்றொரு ஆய்வில் வாய்மொழி நினைவக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில்  இசை பயிற்சி பெற்ற குழுவே இசை பயிற்சி பெறாத குழுவை வென்றது என்பது ஒரு சிறப்பான தகவல்.

9.அறிவாற்றல் பெருகுகிறது:
இசையை ஒரு பாடமாக எடுக்கும் போது குழந்தைகளின் அறிவாற்றல் பெருகுகிறது  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் . 6 வயது சிறுவர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களுக்கு கீபோர்டு மற்றும் வாய்மொழி  இசை 36 வாரங்களுக்கு கற்று  தரப்பட்டது. முடிவுகள் இந்த குழந்தைகளின்  IQ இல் கணிசமாக  அதிகரிப்பு மற்றும் இசைக்கு தொடர்பில்லாத பிற செயற்பாடுகளை எடுத்துக் கொண்ட குழந்தைகளை விட  தரமான கல்வி சோதனை முடிவுகளைக் காட்டியது. பாடல் குழு மிகவும் அதிக  முன்னேற்றம் காட்டியது.

மேலே குறிப்பிட்ட விவரங்களை தாண்டி இன்னும் பல அற்புதங்களை இசையின் மூலம் அடைய முடியும்.

இசையை ர(பு)சித்து வாழ்க்கையை ருசிப்போம்!