இட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது இந்த இட்லி மாவினால் செய்யப்படும் தின்பண்டங்கள்.

இட்லி மாவில்  சுவையான தின்பண்டங்களா?

தின்பண்டங்கள் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. இட்லி மாவில் கார்போஹைட்ரேட், புரதம் உள்ளதால் அதில் செய்யப்படும் தின்பண்டங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது இந்த இட்லி மாவினால் செய்யப்படும் தின்பண்டங்கள்.வீட்டிலே செய்வதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாத  நான்கு வகையான சுவையான தின்பண்டங்களை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

இட்லி மாவு போண்டா:

 தேவையான பொருட்கள்:

 இட்லி மாவு - 1 கப் 

அரிசி மாவு - ½ கப் 

 பெரிய வெங்காயம் -  ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

கருவேப்பிலை, கொத்தமல்லி

சீரகம் - ½  ஸ்பூன் 

மிளகு - ¼  ஸ்பூன்

உப்பு 

எண்ணெய் 

 செய்முறை:

1 கப் புளிக்காத இட்லி மாவு,½ கப்அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பிலை, கொத்தமல்லி, ½  ஸ்பூன் சீரகம், ¼  ஸ்பூன் மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து  வைத்துக் கொள்ளவும், ஒரு  வாணலியை அடுப்பில் வைத்து  பொரிப்பதற்கு ஏற்ற அளவு எண்ணெயை ஊற்றவும் எண்ணெய் சூடான பிறகு அதில் இந்த மாவை சிறிதுசிறிதாக போட்டு பொன்னிறமாக வரும் போது பொரித்து எடுத்தால் சுவையான இட்லி மாவு போண்டா ரெடி.

காரப்பனியாரம்:

தேவையான பொருட்கள்:

 இட்லி மாவு - 1 கப் 

அரிசி மாவு அல்லது கோதுமை மாவு - 1 ஸ்பூன் 

 வெங்காயம் -  ஒன்று

 பச்சை மிளகாய் - ஒன்று

கருவேப்பிலை, கொத்தமல்லி 

சீரகம் - ½  ஸ்பூன் 

மிளகு - ¼  ஸ்பூன்

உப்பு

எண்ணெய் 

 செய்முறை:

1 கப் புளிக்காத இட்லி மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, ½  ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக  கலந்து மாவை ஊற்றும் பதத்தில் வைத்துக் கொள்ளவும்,   அடுப்பில் பணியார கல்லை வைத்து சிறிது நேரம் கல் சூடான பிறகு  அடுப்பை மிதமான தீயில்  வைக்க வேண்டும் இந்த பணியாரக் கல்லில் உள்ள ஒவ்வொரு குழியிலும் எண்ணெயை தடவிய பிறகே இந்த மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி  லேசாக எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் போது எடுத்தால் சுவையான இட்லி மாவு காரப்பணியாரம் ரெடி. 

இனிப்பு பணியாரம்:

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு -  1 கப்

 கோதுமை அல்லது மைதா மாவு - 1 ஸ்பூன்

ரவை அல்லது அரிசி மாவு - 1 ஸ்பூன்

வெல்லம் -  ¼ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

ஏலக்காய் பொடி - ¼ஸ்பூன் 

வாழைப்பழம் - ஒன்று

செய்முறை:

1 கப் இட்லி மாவு,1 ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவு,1 ஸ்பூன் அரிசி மாவு அல்லது ரவை, பொடித்த வெல்லம் ஏலப்பொடி, வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும், இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து 10நிமிடம் ஊற வைக்கவும். இதில் வெல்லம் முழுமையாக கரைந்து இருக்கவேண்டும் விருப்பப்பட்டால் திராட்சை, முந்திரி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம் அடுப்பில் பணியார கல்லை வைத்து சிறிது நேரம் கல் சூடான பிறகு  அடுப்பை மிதமான தீயில்  வைக்க வேண்டும் இந்த பணியாரக் கல்லில் உள்ள ஒவ்வொரு குழியிலும் நெய் அல்லது எண்ணெய் தடவிய பிறகே இந்த மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி லேசாக எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் போது எடுத்தால் சுவையான இட்லி மாவு இனிப்பு பணியாரம் ரெடி. 

தேன்மிட்டாய்:

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 1 கப்

சமையல் சோடா - ¼ ஸ்பூன்

ஏலக்காய் பொடி - ¼ ஸ்பூன்

கேசரி பவுடர் - ¼ ஸ்பூன் 

சக்கரை - 1கப்

தண்ணீர் - ¾ கப்

செய்முறை:

1 கப் புளிக்காத இட்லி மாவு, ¼ ஸ்பூன் சமையல் சோடா, ¼ ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1 கப் சக்கரையை போட்டு, ¾  கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் அடுப்பில் வைத்தால்  பாகு தயாராகிவிடும் பிறகு அடுப்பை அனைத்துவிட்டு பாகில் ¼ ஸ்பூன் ஏலக்காய் பொடி, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால் பாகு கெட்டியாகாமல் இருக்கும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றவும் எண்ணெய் சூடான பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும் பிறகு இந்த மாவை எண்ணெயில் சிறிது சிறிதாக ஊற்றி பொன்னிறமாக வரும் போது பொரித்ததை எடுத்து சூடானசர்க்கரைப் பாகில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் சுவையான  இட்லி மாவு தேன் மிட்டாய் ரெடி.