துரியன் பழத்தின் 7 வித ஆரோக்கிய நன்மைகள்

துரியோ என்னும் மரபணு வகையைச் சேர்ந்த ஒரு பழம் துரியன் பழம்.

துரியன் பழத்தின் 7 வித ஆரோக்கிய நன்மைகள்

துரியன் பழத்தின் வாசனை பலருக்கும் பிடிக்காது என்றாலும் சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும். இந்த துரியன் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நாம் இந்தப் பதிவில் காணவிருக்கிறோம்.

1. செரிமான மண்டலத்திற்கு உதவும் துரியன் பழம் :
துரியன் பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு நார்ச்சத்து உள்ளது. நார்சத்து குடல் அலைகளை ஊக்குவித்து இரைப்பை நீர் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் காரணமாக செரிமானம் எளிதாக நடைபெறுகிறது. இதனால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. இதனால் பெருங்குடல் புற்றுநோய் போன்ற அபாய நிலைகள் வராமல் உடல் பாதுகாக்கப்படுகிறது. ஒரு கப் துரியன் பழத்தில் 9 கிராம் அளவு உணவு நார்ச்சத்து உள்ளது.

2. மற்ற உணவுகளைக் காட்டிலும் க்ளைகமிக் குறியீடு குறைவாக இருக்கும் ஒரு பழம்:
ஒரு உணவு மற்றும் பானம் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் வலிமையைப் பொறுத்து அதன் க்ளைகமிக் குறியீடு எண் மதிப்பிடப்படுகிறது. க்ளைகமிக் குறியீட்டு எண் அதிகமாக இருக்கும் வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்றவை எளிதாக உடைக்கப்பட்டு , சாப்பிட்டபின், இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு அதிகரிக்கும் நிலை உண்டாகிறது , பின்பு உடனடியாக இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. அதே நேரம், துரியன் பழம், உடலுக்குள் மெதுவாக உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலப்பதால் , இனிப்புத் தேடல் மற்றும் பசியுணர்வு தடுக்கப்படுகிறது.

3. ஆரோக்கியமான நிலையில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த துரியன் பழம் உதவுகிறது:
துரியன் பழத்தில் பொட்டாசியம் மிக அதிக அளவு உள்ளது . மற்றும் சோடியம் மிகக் குறைந்த அளவு உள்ளது. இதனால் ஹைப்பர் டென்ஷன் அபாயம் குறைக்கப்படுகிறது. ஒரு துரியன் பழத்தில் 1060 மிகி அளவு பொட்டாசியம் உள்ளது. ஆனால் இதில் உள்ள சோடியம் அளவு வெறும் 4.9 மிகி அளவு மட்டுமே. இரத்தக் குழாய் தளர்ச்சி பெற உதவி  , இதன்மூலம் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க முடிகிறது.

4. ஒவ்வொரு தனி நபரும் தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவுகிறது 
வைட்டமின் சி யின் தினசரி உட்கொள்ளல் அளவில் 80 % ஒரு கப் துரியன் உட்கொள்வதால் பூர்த்தி அடைகிறது. வைட்டமின் சி என்பது இயற்கையான முறையில் தண்ணீரில் கரையக் கூடிய வலிமையான அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று பாதிப்பை உண்டாக்கும் கிருமிகள் மற்றும் புற்று நோய் உண்டாகக் காரணமாக விளங்கும் ப்ரீ ரேடிகல் போன்றவற்றை எதிர்த்து போராட உடலுக்கு வலிமை அளிக்கிறது.

5. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் துரியன் பழம் :
ஒரு நாளுக்குத் தேவையான அளவு பொட்டாசியம் உட்கொள்ளல் அளவான 4700மிகி அளவு பெறப்படவில்லை என்றாலும், ஓரளவிற்கு பொட்டாசியம் சத்தால் ஏற்படும் நன்மைகள் அதிகரிக்கப்படுவதாக தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேர்வு முடிவுகள் கூறுகின்றன. 

6. அன்டி ஆக்சிடென்ட் பாதுகாப்பிற்கு உதவி புரியும் துரியன் பழம் :
ஒரு கப் துரியன் பழத்தில் 39% மங்கனீஸ் உள்ளது. இந்த கனிமம் அன்டி ஆக்சிடென்ட் பாதுகாப்பில் முக்கியமாகக் கருதப்படும் சில என்சைம்களின் அத்தியாவசிய இணைப்பாகும். ஊன்குருத்துகளுக்குள் உற்பத்தியாகும் ப்ரீ ரேடிகல்களை அழிக்கும் சில என்சைம்களுக்கு மாங்கனீஸ் தேவைப்படுகிறது.

7. அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்க உதவும் துரியன் பழம் :
துரியன் பழத்தில் உள்ள பொட்டாசியம், போலேட் போன்ற கூறுகள்  மற்றும் இதர பல்வேறு அன்டி ஆக்சிடென்ட் போன்றவை நரம்பியல் தொடர்பான நன்மைகள் தருவதாக அறியப்படுகிறது. அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி உண்டாவதைத் தடுக்கும் ஆற்றல் போலேட் சத்துக்கு உண்டு என்பது அனைவரும் அறிந்தது. மூளைக்கு அதிக இரத்த ஓட்டத்தைத் தருவது பொட்டாசியம். இதனால் அறிவாற்றல் அதிகரித்து, கவனம் அதிகரித்து, நரம்பு செயல்பாடுகள் ஊக்குவிக்கபப்டுகின்றன.

கூடுதலாக, துரியன் பழத்தில் வைடமின் பி 6 குறிப்பிட்ட அளவு உள்ளது. வைட்டமின் பி 6 குறைபாடு காரணமாக மனச்சோர்வு மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படலாம். ஆனால் இதனை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. வைட்டமின் பி 6 ஒரு நாளில் 100 மிகி அளவு மட்டுமே பெரியவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.