நீரிழிவிற்கான உணவு அட்டவணை

இந்த நாட்டு உணவுகள் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்

நீரிழிவிற்கான உணவு அட்டவணை

உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நோய் நீரிழிவு. இன்றைய வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நீரிழிவு நோயாளி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நீரிழிவு பாதிப்பைக் குறித்த நேரத்திற்குள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள  வேண்டும். இல்லையேல் இதனால் பல அபாயங்கள் ஏற்படக்கூடும். நீரிழிவு காரணமாக உடலின் பல்வேறு பகுதிகள் பாதிக்கக்கூடும். நீரிழிவைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் இருந்தாலும், அது மட்டும் போதுமானதல்ல. உங்கள் தினசரி உணவில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முடியும்.

உலகம் முழுவதும் பேரழிவு பாதிப்பை உண்டாக்கும் ஒரு நோயாக நீரிழிவு இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவால் இறக்க நேரிடுகிறது. நீரிழிவு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக இரத்த சர்க்கரையில் உண்டாகும் உயர்வு நீரிழிவு என்று அறியப்படுகிறது. உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாமல் இருக்கும்போது அல்லது உற்பத்தியான இன்சுலினுக்கு உடல் சரியான முறையில் எதிர்வினை புரியாதபோது இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. இந்த சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் அவர்கள் எடுத்துக்  கொள்ளும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உயர் நார்ச்சத்து உள்ள  உணவுகள் இரத்த சர்கக்ரையைக் குறைக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகள் இந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.  நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்கும் சில உணவு பற்றிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம் .

முள்ளங்கி :

முள்ளங்கியில் நார்க்கத்த்து மிகவும் அதிகம். மேலும் இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளி என்றால் முள்ளங்கி கொண்டு சால்ட், பரோட்டா  , சாம்பார் போன்றவற்றை உட்கொள்ளலாம். முள்ளங்கியில் எலுமிச்சை சாறு , சிறிதளவு உப்பு , மற்றும் சில காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து சாலட் போல் உண்பதால் அதன் நன்மைகள் உங்களுக்கு அப்படியே கிடைக்கின்றன.

பாகற்காய் :

பாகற்காய் கசப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கசப்பாக இருக்கும் மருந்து  விரைவில் உடலை குணப்படுத்துவது போல் பாகற்காயும் உடலுக்கு நன்மை அளிக்கிறது. பலருக்கும் அதன் கசப்பு தன்மை காரணமாக பாகற்காயை பிடிக்காமல் இருந்தாலும், எடை இழப்பில் சிறந்த முறையில் உதவும் பாகற்காய், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பாலிபெப்டைடு - பி அல்லது பி-இன்சுலின் என்னும் கூறு பாகற்காயில் உள்ளது. இதனால் நீரிழிவு கட்டுப்படுகிறது. 

கேழ்வரகு :

கோதுமையில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது . அதனால் நீரிழிவு நோயாளிகள் அதன் அளவைக் குறைப்பது நல்லது. கோதுமைக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகைப்  பயன்படுத்தலாம்.. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ராகி என்று அறியப்படும் கேழ்வரகில் நார்ச்சத்து , கால்சியம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் இதன் ஊட்டசத்து மிக அதிகம். நீரிழிவு நோயாளிகள் ராகி தோசை அல்லது ராகி பரோட்டா செய்து சாப்பிடலாம்.

நெளிகோதுமை(Buckwheat):

விரத காலத்து உணவாக அறியப்படுவது இந்த நெளிகோதுமை. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய உணவாக இது கருதப்படுகிறது. குறைந்த க்ளைகோமிக் குறியீடு கொண்ட இந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது.