இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரோல் அளவு அதிகரித்து இதயம் சரியாக இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். முக்கிய உறுப்பான இதயத்திற்கு  நாம் ஆரோக்கியமற்ற உணவுகளின் மூலம் பளுவையும் அழுத்தத்தையும் கொடுக்கிறோம். அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால் 18-24 வயது உள்ள இளைஞர்களுக்கும்  உயர் இரத்த அழுத்தம், மனச்சோர்வு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவற்றில் ஏதெனும் ஒரு பாதிப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

20-30வயதில் லேசான உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும் நாளடைவில் தமனியில் அடைப்பு ஏற்படும் பாதிப்பு இருக்கிறது. ஆரோக்கியமான உணவு முறையை சிறு வயது முதல் பின்பற்றுவதே இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும். இதய  ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை இப்போது கீழே கொடுத்திருக்கிறோம். இந்த தொகுப்பை படித்து தெரிந்து இதய ஆரோக்கியத்தை சீராக வைத்து கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

கொழுப்பு மீன்:
சால்மன், கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் இதய  நலனை மேம்படுத்துகிறது. இதய தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் சீர்கேடுகளை தவிர்க்கின்றன. தமனியில் கொழுப்பு படிவதை  குறைக்கின்றன. ஒரு வாரத்தில் 2-3 முறை இந்த மீன்களை உணவில் சேர்த்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும். மாரடைப்பு நோய்க்கு இந்த வகை மீன்கள் சிறந்த தீர்வாகும்.
 
ஓட்ஸ்:
ஓட்ஸ் நார்ச்சத்து மிகுந்த ஒரு உணவு. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் தன்மை ஓட்ஸுக்கு உண்டு. இதனால் செரிமானம் சீராகிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .  இதயத்திற்கு ஏற்ற உணவாகவும்  ஓட்ஸ்  கருதப்படுகிறது.

பிளுபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் :
இரத்த நாளங்களை தளர்த்துவதற்கும், உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் இந்த இரண்டு வகை பழங்களும் சிறந்த வகையில்  உதவுகின்றன.

டார்க் சாக்லெட் :
டார்க் சாக்லேட்டில் 60-70% கொக்கோ உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைக்க உதவுகிறது. இரத்தம் உறைநிலையை அடைவதையும் , வீக்கத்தையும் இவை தடுக்கின்றன.

நட்ஸ்:
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுகின்றன. நட்ஸில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைகின்றன.

ஆலிவ் எண்ணெய்:
ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய்யை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து சர்க்கரை அளவை சீராக்க உதவுகின்றது .

ரெட் ஒயின் :
இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை  குறைத்து இதயத்திற்கு பாதுகாப்பு தருவதில் ரெட் ஒயின் சிறந்தது. உடலில் நச்சுக்களை வெளியேற்றி எடை குறைப்பு செய்கிறது. நல்ல பலன்கள் கொடுத்தாலும், இதனை மிதமான அளவு எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. இதய ஆரோக்கியத்திற்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

க்ரீன் டீ :
கொலஸ்ட்ரால் உருவாக்கத்தை தடுக்க தினமும் 1 கப் க்ரீன் டீ பருகுவது ஒரு நல்ல தீர்வாகும். உடலில் வளர் சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது.

ப்ராக்கோலி மற்றும் கீரை:
வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக இருக்கும் ப்ராக்கோலி மற்றும் கீரைகள் இதயத்தை சீராக செயலாற்ற உதவுகின்றன . இதன் மூலம் இரத்த அழுத்தம் சமன்  அடைகிறது. இவற்றில் உள்ள அதிகமான நார்ச்சத்து இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன.

அவகேடோ:
அவகேடோ உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து தமணிகளை சுத்தம் செய்கின்றன. ஆரோக்கியமான மற்றும் நல்ல கொழுப்புகள் அவகேடோவில் நிறைந்துள்ளது.

சீரான இதய  செயல்பாட்டிற்கு இந்த உணவுகளை நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம்.