கொக்கோ டீயின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் 

கொக்கோ டீ - இந்த டீயைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

கொக்கோ டீயின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் 

பல நூற்றாண்டுகளாக தென் அமெரிக்க மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வகை டீ இந்த கொக்கோ டீ. இனுலின் , அல்கலைடு, தாவர ஊட்டச்சத்துகள் போன்ற கூறுகள் இந்த டீயில் அதிகமாக உள்ளன. ஆகவே இந்த தேநீர் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றன. கொக்கோ இலைகளில் , வைட்டமின் ஏ, சி, ஈ, பி 2 மற்றும் பி 6 அதிகம் உள்ளது. பல நன்மைகள் கொண்ட கொக்கோ தேநீர் சில பக்க விளைவுகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.
 
கொக்கோ டீயின் நன்மைகள்:

உயர நோய்களை குணமாக்குகின்றன:
உயர நோய் என்பது அதிகமான உயரத்தில் இருக்கும் ஆக்சிஜென் குறைப்பாடு அல்லது மற்ற காரணங்களினால் உண்டாகும் ஒரு நோய். தென் அமெரிக்காவில் பல காலங்களாக இந்த நோயில் இருந்து நிவாரணம் பெற கொக்கோ தேநீரை பயன்படுத்தி வருகின்றனர். குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுக் கோளாறு போன்றவை இந்த உயர நோயின் சில அறிகுறியாகும். கொக்கோ தேநீரில்  வைடமின் பி மற்றும் அல்கலைடு இருப்பதால் இந்த தேநீர் உயர நோயை போக்கும் ஆற்றலுடன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த தேநீரை எடுத்துக் கொள்வதால் ஆக்சிஜன் அளவு மேம்பட்டு, உயரங்களில் இருக்கும்போது இரத்த ஓட்டம் சீராகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது:
கொக்கோ இலைகளில் இனுலின் என்னும் கூறு உள்ளது. இது தூண்டல் விளைவை உண்டாக்குகிறது. இந்த கூறு, உடலில் உள்ள ஆற்றல் அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது மனோபாவத்தை மேம்படுத்துகிறது. காபிக்கு இருக்கும் தூண்டல் விளைவுகளை ஒத்தது இந்த தேநீரில் உள்ள விளைவுகள் . ஆனால் காபியில் இருக்கும் காபின் இந்த கொக்கோ தேநீரில் இல்லை. மேலும், இது செயல்படும் செல்லுலார் வழிமுறைகள் வேறுபட்டவை.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
கொக்கோ தேநீரில் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இந்த வைடமின்களுக்கு அன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதன் விளைவாக, உங்கள் உடல், இரத்த ஓட்டத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்துப் போராட மற்றும் அழிக்க முடியும். இந்த கூறுகள் உடலில் நச்சுகளை உண்டாக்கி பல்வேறு நோய்களை பரப்பும் தன்மை உடையதாக உள்ளன.

இதய நோய் பாதிப்பு அபாயம் குறைகிறது:
கொக்கோ தேநீரில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் நாம் அறிகிறோம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இந்த ஊட்டச்சத்துகள் மற்றும் இதன் அன்டி ஆக்சிடென்ட் பண்புகள் பல்வேறு வகையான இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

எடை குறைப்பிற்கு உதவுகிறது:
கொக்கோ தேநீரில் குறிப்பிட்ட வகை அல்கலைடு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவை, எடை குறைப்பதற்கான சக்தியுடன் நல்ல தீர்வை அளிப்பதாக கூறப்படுகின்றது. இந்த ஆல்கலாய்டுகள் லிபோலிசிஸ் அதிகரிப்பதில் ஒரு பங்கு வகிக்கின்றன. லிபோலிஸிஸ் என்பது உங்கள் உடலில் கொழுப்பு அமிலங்களைத் திரட்டி நொறுக்குவதற்கும் , சக்தியை உற்பத்தி செய்வதற்கும் ஆகும். இந்த தேநீர் குடிப்பதன் மூலம் கொழுப்பை எரிக்க உங்கள் உடலின் இயல்பான திறனை அதிகரிக்கலாம். இதன் மூலம் உங்கள் உடலின் கொழுப்பு அளவைக் குறைக்கலாம்.

அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது:
கொக்கோ தேநீரில் உள்ள அல்கலைடு மற்றும் வைட்டமின்கள் , அஜீரணத்திற்கு நல்ல தீர்வைத் தருகின்றன. நீங்கள் இரைப்பை குடல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த மூலிகை தேநீர் பருகுவதால் , உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் தென் அமெரிக்காவில் உள்ளவர்கள், அஜீரணம் தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு இந்த தேநீரை ஒரு இயற்க்கை தீர்வாக பயன்படுத்துகின்றனர்.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துகின்றது :
கொக்கோ இலைகள் இரும்பு சத்து, ரிபோப்லவின் மற்றும் கல்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துகளுடன் வைடமின் ஏ இணைந்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது. இதனால் வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது .நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும், உடல் பருமனைப் போக்கவும் இந்த செயல்பாடு முக்கிய பங்காற்றுகிறது.

கொக்கோ தேநீரின் பக்க விளைவுகள் :
கொக்கோ தேநீர் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்ற கேள்வி அடுத்தது எழும். கோகைன் இல்லாத கொக்கோ தேநீர், கோகைன் இல்லாத கொக்கோ இலைகள் முற்றிலும் பாதுகாப்பானது. மிதமான அளவில் எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு எதிர்மறை விளைவுகளும் ஏற்படாது. கொக்கோ இலைகளில் கோகைன் தயாரிப்பதும், கொக்கோ தேநீர் தயாரிப்பதும் முற்றிலும் வித்தியாசமான முறைகளாகும். கொக்கோ தேநீர் பருக திட்டமிடுபவர்கள் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

கருச்சிதைவு ஏற்படலாம்:
கர்ப்பிணி பெண்கள் கொக்கோ தேநீர் உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த இலைகளில் கோகைன் இருப்பதால் பிறப்பு கோளாறுகள் அல்லது கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்:
கொக்கோ சிலருக்கு உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கலாம். ஹைபர் டென்ஷன் உள்ளவர்கள் இந்த தேநீரை பருக வேண்டாம். வாதம் வரும் அபாயம் உள்ளவர்கள், ஏற்கனவே வாதம் பாதிக்கப்பட்டவர்கள், இந்த தேநீரை பருக வேண்டாம். கொக்கோ தேநீரில் உள்ள கோகோயின் மூளையில் உடைந்த இரத்தக் குழாயிலிருந்து இறக்கும் அபாயத்தை உயர்த்தலாம்.

ஆஸ்துமா அதிகரிக்கலாம்:
ஆஸ்துமா நோயாளிகள் இந்த டீயை பருகாமல் தவிர்ப்பது நல்லது. கொக்கோ இலைகளில் மிகக் குறைந்த அளவு கோகைன் இருந்தாலும் ஆஸ்துமா  நோய் பாதிப்பை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. நீங்கள் ஆஸ்துமா பாதிப்பில் உள்ளவர் என்றால், கொக்கோ டீயை பருக வேண்டாம்.

இதய நோயை இன்னும் மோசமாக்குகிறது :
இதய நோய் உள்ளவர்களுக்கு கொக்கோ தேநீர் கொடுக்காமல் இருப்பது நல்லது. கோகைன் இருப்பது தான் இதற்கும் காரணம். இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள், கொக்கோ தேநீர் பருகுவதால் அவர்கள் நிலைமை மோசமடைவதற்கான வாய்ப்புகள் உண்டு அல்லது அவர்கள் சிக்கல் இன்னும் அதிகமாகலாம்.

கொக்கோ தேநீர் எப்படி தயாரிப்பது:
கொக்கோ இலைகள் கொண்டு கொக்கோ தேநீர் தயாரிக்க முடியும். இலைகள் முழுதாக இருப்பதால் சுவை அதிகமாக இருக்கும். இலைகளை நசுக்கவோ, நறுக்கவோ தேவையில்லை.


கொக்கோ தேநீர் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  • ஒரு ஸ்பூன் கொக்கோ இலைகள்
  • ஒரு கப் தண்ணீர்
  • ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன் (இனிப்பு தேவைபட்டால்)
  • செய்முறை:
  • முதல் படி - தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • இரண்டாம் படி - கொதிக்கும் நீரில் கொக்கோ இலைகளை சேர்க்கவும்.
  • மூன்றாம் படி - அடுத்த 5 நிமிடங்கள் இந்த கலவை நன்றாக கொதிக்கட்டும். நீண்ட நேரம் கொதிக்க வைப்பதால் தேநீர் இன்னும் அடர்த்தியாக மாறும்.
  • நான்காம் படி - இந்த கலவையை வடிகட்டி, தேன் சேர்த்து பருகவும்.

ஆகவே, இந்த பதிவின் மூலம் கொக்கோ தேநீரின் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டோம். இவற்றின் பக்க விளைவுகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொண்டதால், அவற்றை கவனத்தில் கொண்டு, இந்த தேநீரை பருக முயற்சிக்கவும். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த தேநீரை உங்கள் தினசரி உணவில் இணைத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த தேநீர் பருகுவது நல்லது.