தேனீ அல்லது குளவி கடிக்கான எளிய சிகிச்சை முறைகள்

பொதுவாக தேனீ மற்றும் குளவிகள் தமது கொடுக்கை, தம்மைத் தற்காத்துக் கொள்ளும் பாதுகாப்பு வளையமாகக் கொண்டு செயல்படுகின்றன.

தேனீ அல்லது குளவி கடிக்கான எளிய சிகிச்சை  முறைகள்

வெயில் காலம் வந்துவிட்டால், மக்கள்  வீட்டில் இருக்கும் நேரத்தை விட வெளியில் அதிகமாக சுற்றித் திரிவார்கள். பீச், பார்க் , மொட்டை மாடி, தோட்டம் போன்ற இடங்களில் நல்ல காற்று கிடைக்கும் மற்றும் வெப்பம் குறைவாக இருக்கும் சூழலும் இருப்பதால் பொதுவாக மக்கள் கூட்டத்தை இந்த இடங்களில் இப்போது அதிகமாகக் காண முடியும். இப்படி பார்க், பீச் என்று உலவும்போது, தேனீ மற்றும் குளவிகளைக் காணமுடியும். இந்த காலங்களில் இந்த பூச்சிகள் சுறுசுறுப்பாக இயங்குவதால் நம்மை அவை சில நேரங்களில் கடிக்கும் வாய்ப்பு உண்டு. தேனீ அல்லது குளவி கடி என்பது ஒரு வலி மிகுந்த அனுபவம்.

பூச்சிகள் மனிதனைக் கடிப்பதால் அல்லது கொட்டுவதால் பலவித அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த கொடுக்கில் விஷம் இருப்பதால் இதனைக் கொண்டு நம்மைக் கடிப்பதால் நமது உடலில் பல எதிர்வினைகள் உண்டாகின்றன. தற்காலிக வலி அல்லது  அசௌகரியம் முதல் சில வகை தீவிர ஒவ்வாமை வினைகள் வரை இவற்றால் உண்டாவதாக அறியப்படுகிறது.

குளவி அல்லது தேனீ கொட்டியவுடன் அந்த இடத்தில் உடனடியாக ஒரு வித எரிச்சலுடன் கூடிய வலி, கொட்டிய இடத்தின் மத்தியில் வெள்ளை நிற திட்டு, அதனைச் சுற்றி சிவந்த நிறம் உண்டாவது, மற்றும் அந்த இடம் வீக்கம் அடைவது போன்ற சிறிய அறிகுறிகள் தோன்றும். இத்தகைய சிறிய லேசான அறிகுறிகள் அடுத்த இரண்டு நாட்களில் மறைந்துவிடும். அடுத்த நிலையில் மிதமான பாதிப்பு கொண்டவர்களுக்கு ஐந்து முதல் பத்து நாட்களுக்குள் சீராகிவிடும். தேனீ அல்லது குளவி போன்றவற்றிற்கு ஒவ்வாமை கொண்டவர்களுக்கு மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தேனீக்கள் அல்லது குளவிகள் கொட்டியவர்களுக்கு இந்த நிலை சற்று தீவிரமடையலாம். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை உடனடியாக எடுத்துக் கொள்வது நல்லது.

லேசான அல்லது மிதமான பாதிப்பு கொண்டவர்களுக்கு வலி, வீக்கம் , அரிப்பு மற்றும் சிவப்பு நிறம் ஆகியவை குறைவதற்கு சில எளிய சிகிச்சை முறைகள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். 

இந்த பதிவில் குளவி மற்றும் தேனீ கடித்ததற்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க 10 சிறந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன்பெறுங்கள்.

 1. சருமத்தில் இருந்து கொடுக்கை நீக்கி விடுங்கள் :
தேனீ அல்லது குளவி கொடுக்கால் உங்கள் உடலில் கொட்டியவுடன் , முதல் வேலையாக அந்த கொடுக்கை உங்கள் உடலில் இருந்து நீக்கி விடுங்கள். இல்லையேல் அடுத்த சில நொடிகளில் அந்த விஷம் உங்கள் உடலில் பரவ நேரிடும்.

1. உங்கள் நகக்கண் அல்லது ட்வீசர் பயன்படுத்தி கொடுக்கு கொட்டிய இடத்தில் இருந்து கொடுக்கை நீக்கலாம்.
2. கொட்டிய இடத்தில் கிருமிநாசினி சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி நன்றாகக் கழுவவும்.
3. நன்றாக துடைத்துவிட்டு, சிறிது அன்டிசெப்டிக் மருந்து தடவலாம். அரிப்பு மற்றும் வீக்கம் குறைய கலமைன் லோஷன் தடவலாம்.

குறிப்பு:
கொடுக்கை கிள்ளி வெளியில் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையென்றால் அதிக நஞ்சு சருமதிற்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது.
 
 2. ஐஸ் பயன்படுத்தவும்:
அடுத்த நிலையாக, அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் மற்ற பல்வேறு அறிகுறிகளிலிருந்து  உடனடி நிவாரணம் கிடைக்கும்.
குளிர் வெப்பநிலை, கடிபட்ட இடத்தில் அழற்சிக் கூறுகள் பரவுவதைத் தாமதப்படுத்தும். மேலும் ஐஸ் ஒத்தடம் தருவதால் வலி மற்றும் வீக்கம் குறையும்.

1. ஒரு மெல்லிய துணியில் சில ஐஸ் கட்டிகளைப் போட்டு நன்றாகக் கட்டிக் கொள்ளவும்.
2. அந்த ஐஸ் கட்டி பையை பாதிக்கப்பட்ட இடத்தில் 10-15 நிமிடங்கள் ஒத்தடம் போல் வைத்து எடுக்கவும்.
3. வலி மற்றும் வீக்கம் குறையும் வரை சில மணி நேரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றவும்.

குறிப்பு:
துணியில் வைத்து கட்டாமல், நேரடியாக ஐஸ் கட்டியை உடலில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டாம். இதனால் தேனீ கொட்டிய தோல் பகுதி உறைந்துவிடும்.

 3. பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா அமிலம் நிறைந்த பொருள் என்பதால் அமில விஷம் சமநிலையை அடைய இது உதவுகிறது, இதனால், வலி, அரிப்பு  மற்றும் வீக்கம் எளிதில் குணமாகிறது.

1. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
2. இந்த பேஸ்டை தேனீ கொட்டிய இடத்தில தடவி 5-10 நிமிடம் அப்படியே விடவும்.
3. பிறகு வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தைக் கழுவவும்.
4. அடுத்த சில மணிநேரத்தில் மறுமுறை இதனைச் செய்வதால் அசௌகரியம் சற்று குறையலாம்.

 4.விட்ச் ஹஸல் :
தேனீ மற்றும் குளவி கொட்டியதற்கு மற்றும் ஒரு சிறந்த தீர்வு விட்ச் ஹஸல். இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நீக்கும் பண்பு காரணமாக, அரிப்பு, வலி மற்றும் வீக்கம் விரைந்து குணமாகிறது.

1. தேனீ கொட்டிய இடத்தில் சிறிதளவு விட்ச் ஹஸல் (குறிப்பாக பிரிட்ஜில் குளிரூட்டப்பட்ட) எடுத்து தடவுவது நல்லது. பின்பு தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டாம். அதுவாக மறையும் வரை அப்படியே விடலாம்.
2. தேவைப்பட்ட நேரத்தில் இதனை செய்யலாம்.

 5. ஆப்பிள் சிடர் வினிகர் :
ஆப்பிள் சிட வினிகரும் பேக்கிங் சோடா போல் அமிலத்தை சமன் செய்ய உதவுகிறது. இதனால் வலி மறைந்து, எரிச்சல் மற்றும் வீக்கம் குறைகிறது.
 
1. பதனிடப்படாத , வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்து அதில் சிறிதளவு பஞ்சை நனைத்து எடுக்கவும்.
2. வீக்கத்தின் மீது அந்த பஞ்சை 5-10 நிமிடம் வைக்கவும்.
3. வலி அதிகரிக்கும்போது அவ்வப்போது இதனை பின்பற்றவும்.

குறிப்பு: ஆப்பிள் சிடர் வினிகர் இல்லை என்றால், வெள்ளை வினிகரும் பயன்படுத்தலாம்.

 6. தேன்:
தேனீ கொட்டியதற்கு தேன் மற்றுமொரு சிறந்த தீர்வாகும். தேன், நஞ்சை நீர்த்து போக உதவுகிறது, மற்றும் இதன் கிருமி எதிர்ப்பு தன்மை , தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தேனின் இதமான தன்மை, பாதிப்பு உண்டாக்கும் மற்றும் அறிகுறிகளை விரைவாகப் போக்க உதவுகிறது.
 
1. பாதிக்கப்பட்ட இடத்தில், சிறிதளவு, தேன் ஊற்றி தடவி விடவும்.
2. சிறிது நேரத்திற்கு பின் காய்ந்தவுடன், அந்த இடத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு நாளில் சில முறை இதனைப் பின்பற்றலாம்.

குறிப்பு:
தேனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். இந்த முறையை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.

 7. கற்றாழை:
தேனீ மற்றும் குளவி கொட்டியதற்கு கற்றாழை ஒரு முக்கிய தீர்வாகக் கருதப்படுகிறது. கற்றாழையின் அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் இதமளிக்கும் தன்மை, வலியைப் போக்கி, வீக்கம் மற்றும் அரிப்பைக் குறைக்க உதவுகிறது. 

1. ஒரு கற்றாழை இலையை எடுத்து  நன்றாகக் கழுவி, அதனை வெட்டி அதில் இருந்து ஜெல்லை எடுக்கவும்.
2. இந்த ஜெல்லை பாதிக்கபட்ட இடத்தில் தடவவும்.
3. ஒரு நாளில் பலமுறை இதனை செய்து வரவும்.
 
8. பெப்பெர்மின்ட்:
தேனீ மற்றும் குளவி கொட்டியதால் உண்டாகும் தொற்றைப் போக்க இந்த பெப்பெர்மின்ட் பெரிதும் உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணப் பண்பு காரணமாக, வலி குறைந்து, வீக்கம் மற்றும் அழற்சி சீராகிறது.

1. தேனீ அல்லது குளவி கொட்டிய இடத்தில், ஒரு நாளில் பலமுறை, ஒன்று அல்லது இரண்டு துளிகள் பெப்பெர்மின்ட் எண்ணெய்யை நேரடியாக ஊற்றி தடவ வேண்டும். உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் பெப்பெர்மின்ட் எண்ணெய்யுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தடவலாம்.

2. பெப்பெர்மின்ட் இலைகளை எடுத்து வந்து அரைத்து அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவது மற்றொரு வழியாகும். இப்படி செய்யும்போது, அந்த சாறு முற்றிலும் காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பின்பற்றலாம்.

குறிப்பு :
தேனீ மற்றும் குளவி தவிர இதர பூச்சிக் கடிகளுக்கும் பெப்பெர்மின்ட், லாவெண்டர் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் சிறந்த தீர்வைத் தருகின்றன.

9. அஸ்பிரின் :
தேனீ மற்றும் குளவி கொட்டியதால் உட்புகும் நஞ்சை சமன் செய்வதற்கு மற்றொரு சிறந்த தீர்வு அஸ்பிரின். இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை, வலியைக் கட்டுப்படுத்தி, வீக்கத்தைக் குறைக்கிறது.

1. ஒரு அஸ்பிரின் மாத்திரையை எடுத்து பொடித்துக் கொள்ளவும்.
2. மாத்திரையில் சில துளிகள் நீர் விட்டு, ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். 
3. காயத்தின் மீது இந்த பேஸ்டை தடவி, சில நிமிடங்கள் அப்படியே விடவும்.
4. பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
5. இந்த முறையை  ஒரு நாளில் அடிக்கடி பின்பற்றலாம்.

10.  வெள்ளை டூத்பேஸ்ட்
வெள்ளை நிற பற்பசை கூட, தேனீ மற்றும் குளவி கடிக்கு சிறந்த தீர்வைத் தரும். இது உடலின் அமில அளவை சமன்படுத்தி, வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

1. பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு டூத்பேஸ்டை தடவவும்.
2, சில மணி நேரம் அப்படியே விடவும்.
3. பிறகு ஒரு ஈர துணியால் அந்த பேஸ்டை எடுத்து விடவும்.
4. ஒரு நாளில் அவ்வப்போது இந்த முறையை பின்பற்றலாம்.

குறிப்பு:
பல வண்ண நிறம் கொண்ட டூத்பேஸ்ட், ஜெல் டூத் பேஸ்ட், பற்களின் வெண்மையை அதிகரிக்க பயன்படுத்தும் whitening டூத்பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்த  வேண்டாம்.