12 அற்புத நன்மைகள் அடங்கிய நெல்லிக்காய் முரப்பா

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் மருத்துவமனை செல்லும் வேலை நமக்கு கிடையாது என்பது மட்டும் முற்றிலும் உண்மை" என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். சிம்ரன் சைனி கூறுகிறார். 

12 அற்புத நன்மைகள் அடங்கிய நெல்லிக்காய் முரப்பா

"ஒரு பழம் பல நன்மைகள்" என்று கூறினால் அது நெல்லிக்காய்க்கு மிகச் சரியாக பொருந்தும். ஆயுர்வேதத்தில் இந்த மந்திர பொருளான நெல்லிக்கனிக்கு ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு. இளம் பச்சை நிறத்தில் உள்ள இந்த பழம் ஒரு வித்தியாசமான சுவையைக் கொண்டது. உடலின் நோயெதிர்ப்பு சக்த்தியை அதிகரிப்பதில் இந்த நெல்லிக்கனிக்கு நிகர் வேறெந்த ஒரு பொருளும் இல்லை. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது இந்த நெல்லிக்கனி. இந்திய வீடுகளில் இது ஒரு கட்டாய உணவுப் பொருளாக இருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. பாலிபினால், வைடமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது நெல்லிக்கனி. முரப்பா என்னும் ஒரு உணவுப்பொருள் தயாரிப்பில் நெல்லிக்கனி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இது இனிப்பும் காரமும் கொண்ட ஒரு உணவு தயாரிப்பு. நெல்லிக்காயை பதப்படுத்தி தயாரிக்கும் இந்த முறையால் பல காலம் நெல்லிக்காய் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.

நெல்லிக்காய் முரப்பா:
நெல்லிக்காய் முரப்பா செய்வதற்கு பல வழிகள் உள்ளன. நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு, பிறகு காரம் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பாகில் கலப்பது இந்த முரப்பாவை தயாரிக்கும் எளிய முறையாகும்.
சிலர், நெல்லிகாயை முதலில் ஆவியில் வேக வைத்து பின்பு, சர்க்கரை பாகில் ஊற வைத்தும் இதனை தயாரிப்பர். 

நெல்லிக்காய் முரப்பாவின் 12 வித அற்புத நன்மைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

1. செரிமான நன்மைகள்:

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நெல்லிகாயை, செரிமானம் மற்றும் வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் இரைப்பை சவ்வு அழற்சி போன்ற பாதிப்புகளைப் போக்க மருத்துவர்கள் நெல்லிகாயை பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை மற்றும் தேனுடன் இதனை பயன்படுத்துவதால் மலச்சிக்கல் தீர்க்கப்படுகிறது. உங்கள் வயிறு பகுதி ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் வயிற்றில் உண்டாகும் சிறு தொல்லைகள் தான். 

2. கனிமங்களின் முக்கிய ஆதாரம்:
குரோமியம், ஜின்க், தாமிரம், இரும்பு மற்றும் இதர கனிமங்களின் ஆதாரமாக விளங்குவது நெல்லிக்காய். உடலின் நோயெதிர்ப்பு சக்த்தியை நெல்லிக்காய் அதிகரிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் குரோமியம் குறிப்பாக இரத்தத்தில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, மேலும் இதய பாதிப்புகள் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது என்று ஹார்வர்ட் சுகாதார பதிப்புகள் கூறுகின்றன.

3. கீல்வாதம்:
மூட்டுகளில் உண்டாகும் அழற்சியைப் போக்க சிறந்த முறையில் உதவுவது நெல்லிக்காய். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி போன்றவற்றிற்கு நிவாரணம் கிடைக்கிறது. முரப்பா வடிவில் ஒரு நாளைக்கு இரண்டு முறை பச்சையாக நெல்லிகாயை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை நேரத்தில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் சீரான செரிமானம் மற்றும் மூட்டு வலி நிவாரணம் போன்றவை கிடைக்கும்.

4. கர்ப்பகாலத்தில் உதவுகிறது:
கர்ப்ப காலம் முழுவதும்  தாய்மார்கள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம். தாய் மற்றும் சேய் ஆகியவருக்கும்  சிறந்த ஆரோக்கியத்தைத் தரக் கூடியதாக நெல்லிக்காய் இருக்கிறது. ஹார்மோன் மாறுபாடு காரணமாக தாய் மார்கள் முடி உதிர்விற்கும் நெல்லிக்காய் உட்கொள்ளல் சிறந்த தீர்வைத் தருகிறது.

5. அல்சரைத் தடுக்கிறது:
நெல்லிக்காயில் புண் எதிர்ப்பு தன்மை மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அல்சர் என்னும் வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிகாய் முரப்பாவை எடுத்துக் கொள்ளலாம். நெல்லிகாய் சாற்றை தண்ணீருடன் கலந்து ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்பளிக்கலாம். இதனால் வலி மிகுந்த வாய்ப்புண் குணமாகும்.

6. மலச்சிக்கல்:
சுவை மிகுந்த நெல்லிக்காய் முரப்பா, நாட்பட்ட மலச்சிக்கலைத் தீர்க்க உதவுகிறது. ஒரு கிளாஸ் பால் குடித்த பின் நெல்லிக்காய் முரப்பாவை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் உடனடியாக தீர்கிறது. கூடுதலாக, வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியைக் கலந்து பருகுவதால், மலச்சிக்கலில் இருந்து முற்றிலும் நிவாரணம் பெறலாம்.

7. உயர் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது:
நெல்லிக்காய் முரப்பாவில் அதிக அளவு குரோமியம், ஜின்க், தாமிரம் போன்ற உடலுக்கு தேவையான கனிமங்கள் உள்ளன. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிப்பதில் குரோமியத்தின் பங்கு முக்கியமானது. கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதால் இதய கோளாறுகள் தொடர்பான ஆபத்துகள் தடுக்கப்படுகின்றன. உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன் சிறிதளவு தேன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

8. நோயெதிர்ப்பு சக்தி :
வைட்டமின் சி மற்றும் பல்வேறு அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த நெல்லிக்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை புதுப்பித்து  அதன் ஆற்றலை மேம்படுத்துகிறது. சளி, காய்ச்சல் போன்ற தொற்று பாதிப்புகள் மறுமுறை ஏற்படாதவாறு உடலை இயற்கையான முறையில் சரி செய்கிறது. தினமும் இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து பருகுவதால் சளி குறைகிறது. மேலும் இருமலைக் கட்டுப்படுத்துகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் வறட்டு இருமலைப் போக்க, நெல்லிக்காய் பொடியுடன், தேன் சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று  முறை சாப்பிட்டு வரவும்.

9. மாதவிடாய் வலி:
நெல்லிக்காய் முரப்பா, மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது. மேலும், மூன்று மாதம் தொடர்ந்து இதனை அருந்துவதால், வருங்காலத்தில் இந்த வலி முற்றிலும் நின்று விடக் கூடும். சிறு வயது பெண்களுக்கும் மாதவிடாய் வலியைக் குறைக்க நெல்லிக்காய் முரப்பாவை பயன்படுத்தலாம். மாதவிடாய் இரத்தபோக்கு அதிகமாக உள்ள பெண்கள், இரும்பு சத்தை அதிகரிக்க நெல்லிகாயை எடுத்துக் கொள்ளலாம்.

10. இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்றது:
நெல்லிக்காயில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் இரத்தசோகை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படக்கூடிய பெண்களுக்கு இது மிகவும் ஏற்றது.

11. கட்டிகள் மற்றும் தழும்பைப் போக்குகிறது:
ஆறு மாதம் தொடர்ந்து நெல்லிக்காய் முரப்பாவை சாப்பிட்டு வருவதால் உங்கள் சருமத்தில் உள்ள கட்டிகள், தழும்புகள் , திட்டுகள் போன்றவை இயற்கையாக மறையத் துவங்குகின்றன. கொப்பளங்களைப் போக்க தொடர்ந்து ஆறு மாதம் நெல்லிக்காயை சாப்பிட்டு வரவும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உங்கள் முக வசீகரத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.

12. வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை:
நெல்லிக்காய், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்தின் ஆதாரமாக விளங்குவதாகும். வைட்டமின் ஏ கொலோஜென் உற்பத்தியை ஊக்குவித்து சருமத்தை நெகிழ்த்தி இளமையுடன் வைக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் முரப்பாவை உட்கொள்வதால் அதன் சிறந்த பலன்களை நம்மால் முழுவதுமாக அடைய முடியும். கொலோஜென் இறக்கத்தைத் தடுப்பதால், சருமம் இறுக்கமாகி ஆற்றலுடன் இருக்க முடிகிறது.

நெல்லிக்காய் முரப்பா மிகவும் இனிப்பு சுவை கொண்டதால்,  மிதமான அளவு அதாவது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி மற்றும் ஈ யின் ஆதாரமாக இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சர்க்கரை சேர்க்கப்பட்டு பதனப்பொருளாக நெல்லிகாயை பயன்படுத்தும்போது, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். ஆனால் பச்சையாக உட்கொள்வதால் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த இனிப்பக இருக்கும். 

நமது முன்னோர் சரியான ஒரு பொருளை தான் நமக்கு கொடுத்து சென்றிருக்கின்றனர். நெல்லிக்காய் ஒரு அற்புதமான ஒரு உணவுப் பொருள். இதனை நாம் இந்த பதிவின் மூலம் மற்றொரு  முறை உணர்ந்து கொண்டிருக்கிறோம்.