உங்கள் குழந்தை தூக்கக் கோளாறால் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் 7 அறிகுறிகள்

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும்போது பெற்றோர் மிகுந்த வேதனை கொள்கின்றனர்.

உங்கள் குழந்தை தூக்கக் கோளாறால் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் 7 அறிகுறிகள்

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும்போது பெற்றோர் மிகுந்த வேதனை கொள்கின்றனர். பொதுவாக சிலவகை உடல்நலக் குறைபாடு எளிதில் கண்டறியக் கூடியவையாக இருக்கும்போது, சிலவகை பாதிப்புகள் கண்டறியப்படுவதில் சில சிரமங்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குறிப்பிட்ட வகை பாதிப்பு தூக்கக் கோளாறு. தூக்க நிலைகளை உன்னிப்பாக கவனிக்காவிட்டால் தூக்க கோளாறு பாதிப்பை அடையாளம் காண்பது மிகவும் கடினமாகும்.  இது தூங்குவதில் சிக்கல், நள்ளிரவில் எழுந்திருத்தல், படுக்கை ஈரமாக்குதல் போன்றவை இதன் சில அடையாளமாக இருக்கலாம். ஆய்வுகளின்படி, 30% குழந்தைகள் தூக்கக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்! இந்த அறிக்கை நமக்கு அதிர்ச்சியை உண்டாக்கலாம். குழந்தைகளில் தூக்கக் கோளாறுகளை சுட்டிக்காட்டும் இந்த அறிகுறிகளைக் கவனிப்பது உங்களுக்கு மிகவும் அவசியம்.

குழந்தைகளில் தூக்கக் கோளாறுகளின் அறிகுறிகள்: 

1. அதிகப்படியான பகல் நேர  தூக்கம்: 

அதிகப்படியான பகல்நேர தூக்கம் தூக்கக் கோளாறின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். சோர்வு காரணமாக சில நேரங்களில் பகல் நேரத்தில் உறங்குவது பரவாயில்லை, ஆனால் உங்கள் குழந்தை அடிக்கடி  பகல் நேரத்தில் தூங்கினால் அது ஆபத்தானது. உங்கள் குழந்தை பகல் நேரத்தில் பலமுறை தூங்கி எழுந்தால் அது ஒரு கவனிக்க வேண்டிய அறிகுறியாகும்.

2. இரவு நேர கனவுகள்: 

பெரியவர்களாகிய உங்களுக்கு கனவுகள் வருவதைப் போலவே, குழந்தைகளும் கனவு காண்கிறார்கள். கனவு கண்டு உங்கள் குழந்தை திடீரென்று பயந்து எழுந்திருக்கலாம், அதன்பிறகு மீண்டும் தூங்க முடியாமல் போகலாம். அவ்வப்போது குழந்தைகளுக்கு கனவுகள் தோன்றுவது பொதுவானவை, ஆனால் அவை அடிக்கடி வந்தால், அது தூக்கக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். இது உங்கள் குழந்தையின் தூக்கத்தை பாதிக்கலாம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

3. தூக்கமின்மை:

உங்கள் குழந்தைக்கு தூக்கம் வருவதில் சிரமம் இருந்தால் அவர் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் மனஅழுத்தம் ஏற்பட்டு,  அதன் காரணமாக சரியாக உறக்கம் வராமல் இருக்கலாம். அவர்கள் இரவில் நீண்ட நேரம் விழித்துக் கொண்டிருப்பதை கண்டால், அவர்களுடன் பேசுங்கள், அவர்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா என்று கேளுங்கள். அவர்களுடன் இருந்து அவர்களை உறங்க வைக்க முயற்சியுங்கள்.

4. குறட்டை:

குறட்டை தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் நுரையீரலில் அடைப்பு ஏற்படுவதால் குறட்டை ஏற்படலாம். மூக்கடைப்பு, சுவாச நோய்த்தொற்று, விரிவாக்கப்பட்ட டான்சில்ஸ் ஆகியவை குழந்தைகளில் குறட்டைக்கு மிகவும் பொதுவான காரணங்கள். இருப்பினும், அரிதான நிகழ்வுகளில், தினசரி குறட்டை Obstructive Sleep Apnea (O S A ) என்னும் தடைசெய்யும் தூக்க மூச்சுத்திணறல் காரணமாக இருக்கலாம். சுமார் 3% குழந்தைகளுக்கு ஓஎஸ்ஏ உள்ளது என்பது  கண்டறியப்பட்டுள்ளது.

5. இரவு பயங்கரங்கள்:

கனவுகள் மற்றும் இரவு பயங்கரங்கள் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் ஆகும். கனவுகள் குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்பச் செய்யும் போது, இரவு பயங்கரங்கள் குழந்தைகளை ஓரளவிற்கு பயமுறுத்தக்கூடியவையாக இருக்கும். இரவு பயங்கரத்தின் ஒரு பகுதியாக, குழந்தை தூக்கத்தில் இருந்து திடீரென்று எழுந்து அலறுவது அல்லது அழுவது போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யும். இரவு பயங்கரங்களின் போது, அவர்கள் விரைவான சுவாசம், வியர்வை, தசை பதற்றம் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். 5 குழந்தைகளில் ஒருவர் மட்டுமே ஒரு இரவு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படலாம்.

6. படுக்கையில் சிறுநீர் கழிப்பது:

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது ஒரு பொதுவான பிரச்சினை, இது மிகவும் கடுமையான பிரச்சினை அல்ல. ஆனால் உங்கள் குழந்தை வாரத்திற்கு 3-4 தடவைகளுக்கு மேல் படுக்கையை நனைத்தால், அது தூக்கக் கோளாறுக்கு அறிகுறியாக இருக்கலாம்.

7. தூக்கத்தில் நடப்பது:

உங்கள் பிள்ளை நள்ளிரவில் அரை தூக்க நிலையில் நடப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்தால், நீங்கள் அவர்களை கவனிக்க வேண்டும். அவர்கள் நடக்கும்போது ஏதாவது பேசக்கூடும். ஒருமுறை அல்லது இரண்டுமுறை என்றால் பரவாயில்லை, ஆனால் அது அடிக்கடி ஏற்பட்டால், நீங்கள் ஒரு குழந்தை மருத்துவரை அணுக வேண்டும்.