6 அற்புத நன்மைகளைக் கொண்ட எலேமி எண்ணெய்

எளிமையான எலேமி எண்ணெய் என்ன நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

6 அற்புத நன்மைகளைக் கொண்ட எலேமி எண்ணெய்

எலேமி எண்ணெய் என்ற எண்ணெய்யை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? இந்த தீங்கற்ற எண்ணெய் பல நலன்களைக் கொண்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. தலையை பிளக்கும் அளவிற்கு தலைவலி உள்ளதா? அது மிகவும் கொடுமையானது. சில துளிகள் எலேமி எண்ணெய்யை தடவிப் பாருங்கள். உங்கள் வலி காணமல் போயே  போச்சு ! 

எலேமி எண்ணெய் என்பது என்ன?

எலேமி அத்தியாவசிய எண்ணெய் எலேமி அல்லது 'கேனாரியம் லோசோனிக்' மரத்திலிருந்து வருகிறது. இந்த மரங்கள் பிலிப்பைன்ஸ் மற்றும் பிற அண்டை நாடுகளில் உள்ளன. மரத்தின் பிசினிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு நீராவி வடித்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது மஞ்சள் நிறத்தில் வெளிர் நிறமாகவும், கூர்மையான பைன் மற்றும் எலுமிச்சை மணம் கொண்டதாகவும் உள்ளது. எலேமி , அரோமாதெரபி மற்றும் மாற்று மருத்துவத்தில் பரவலாக பல வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.

எலேமி எண்ணெயின் நன்மைகள் :

வலி நிவாரணி:
இது ஒரு சிறந்த வலி நிவாரணி. இன்று சந்தையில் கிடைக்கும் பல வலி நிவாரணிகளில் கூடுதலாக பல பக்க விளைவுகள் உள்ளன. எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் தன் வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்யும் ஒரு வலி நிவாரணி கிடைப்பது மிகவும் கடினம் அல்லவா? ஆகவே வலி நிவாரணத்திற்கு இனிமேல் நீங்கள் இதனை பயன்படுத்தலாம். சளி, சுளுக்கு, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற இதனைப் பயன்படுத்தலாம். தலைவலி, மூட்டு வலி, தசை வலி, ஒற்றைத்தலைவலி போன்றவற்றிற்கும் இதனைப் பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். 

சளி:
நாம் சிறு குழந்தைகளாய் இருக்கும்போது சளி பிடித்தால் அம்மா நமக்கு இனிப்பாக இருமல் மருந்து கொடுத்திருப்பார்கள். ஞாபகம் இருக்கிறதா? அந்த மருந்துகள் மிகவும் இனிப்பானதாக சுவையானதாக இருக்கும். சற்று குறைவான சுவையுடைய சளி மருந்தை பயன்படுத்தினால் என்ன வாகும்? அது தான் எலேமி எண்ணெய். இது ஒரு சிறந்த சளி மருந்தாக செயல்படும் தன்மை உள்ள எண்ணெயாகும். காற்றுக் குழாய், மூக்கு, நுரையீரல் போன்ற இடங்கில் உள்ள அடைப்பை போக்கி சீரான எளிய சுவாசத்தை இது வழங்குகிறது.

கிருமிநாசினி :
பண்டைய கால எகிப்தியர்கள் , பிணங்களைப் பதப்படுத்த எலேமியை பயன்படுத்தினர். எலேமி ஒரு பயனுள்ள ஆண்டிசெப்டிக் மற்றும்  பூஞ்சை, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றின் காரணமாக உண்டாகும்  மற்ற நுண்ணுயிர் தொற்றுகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை, மற்ற கிருமிநாசினிகளைப் போலல்லாமல், எலேமி  குறைவான ஒட்டும்  தன்மை மற்றும் சிறந்த வாசனை உள்ள ஒரு எண்ணெய். ஆகவே அடுத்த முறை காய்கறி அறியும் போது கைகளில் வெட்டிக் கொண்டால் அதற்கு நீங்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். காயங்கள் மற்றும் நுண் கிருமிகளை போக்க மட்டுமில்லாமல், உடலில்  உள்ள சிறுநீரக பாதை, சிறுநீரகம், பெருங்குடல், சிறுகுடல், வயிறு போன்ற உள்ளுறுப்புகளையும் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது..

ஊக்கி :
இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல், உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு காரணிகளாக இருப்பவை ஊக்கிகள். ஹார்மோன் சுரப்பதற்கும், சீரான செரிமானத்திற்கும், பித்த வெளியேற்றத்திற்கும் மற்ற உடல் செயல்பாடுகளுக்கும் ஊக்கிகளின் உதவி தேவைப்படுகிறது. நரம்பு தூண்டுதலுக்கும் , சுவாசத்தை சீராக்கவும், இரத்த ஓட்டம் மற்றும் மாதவிடாய்யை பராமரிக்கவும், பாலுட்டும் தாய்மார்களுக்கு உதவவும் இந்த ஊக்கிகள் பெரிய வினைகளைப் புரிகின்றன.

டானிக் :
டானிக் என்றவுடன் நமது ஞாபகத்தில் வருவது பழைய கால பாட்டிலில் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு மருந்து. டானிக் என்பது உடலை டோன் செய்ய பயன்படுவதாகும். குழந்தைகளுக்கு நோய்கள் பரவாமல் இருக்க பெற்றோர் அவர்களுக்கு ஒரு ஸ்பூன் நிறைய டானிக்கை கொடுப்பார்கள். இரத்த ஓட்டம், சுவாசம், நரம்பு மற்றும் நாளமில்லா அமைப்புகளின் சுறுசுறுப்பான செயல்பாட்டைத் தவிர்த்து, டானிக்குகள்  உங்கள் உடலை நோய்த்தாக்கங்களுக்கும் மற்ற சிக்கல்களுக்கும் எதிராக பாதுகாக்க உதவுகின்றன.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது :
தீங்கற்ற இந்த எலேமி அத்தியாவசிய எண்ணை பல உடல்நல நன்மைகள் கொண்டது மற்றும் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம் . இந்த எண்ணெய்யின்  ஒரு குறிப்பிடத்தக்க நன்மை இது தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதன் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் வெட்டுக்கள் மற்றும் காயங்கள் போன்றவற்றை விரைவாக குணப்படுத்தி  புதிய செல் வளர்ச்சி அதிகரிக்க உதவும். இந்த குணங்களால் எலேமி எண்ணெய் உங்கள் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எலேமி எண்ணெயின் பயன்கள் :
மேலே பட்டியலிடப்பட்டுள்ள நன்மைகளுக்கு அப்பால், எலேமி எண்ணெய் அரோமாதெரபியில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது . தண்டெலும்பு நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்கள் வலிகளைப் போக்க இந்த எண்ணெய்யை தமது சிகிச்சையில் பயன்படுத்துகின்றனர். பல நூற்றாண்டுகளாக , சரும பாதுகாப்பிற்கு இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்ன வாசகர்களே! இந்த பதிவு உங்களுக்கு நல்ல தகவலைப்  பகிர்ந்துள்ளதா? நீங்கள் இதற்கு முன்பு எலேமி எண்ணெயைப் பயன்படுத்தி இருக்கிறீர்களா? உங்கள் அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.