இயற்கையான முறையில் ஆஸ்துமாவை குணப்படுத்த உதவும் சில உணவுகள்

ஆராய்ச்சியின்படி, குழந்தை பருவம் முதல் அதிக பழங்களை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு குறைவாக உள்ளதாக நாம் அறிந்து கொள்கிறோம்.

இயற்கையான முறையில் ஆஸ்துமாவை குணப்படுத்த உதவும் சில உணவுகள்

நவீன காலத்தில் தோன்றிய நோயெதிர்ப்பு குறைபாடு தொடர்பான நோய்களுள் ஆஸ்துமாவும் ஒன்றாகும். ஒவ்வாமை தொடர்பான ஒரு நோயாகவும் ஆஸ்துமா உள்ளது. சில வகை உணவுகள் இந்த ஒவ்வாமையை முற்றிலும் தடுக்கக் கூடியதாக உள்ளது. பொதுவாக பழங்களில் வைட்டமின் சத்து அதிகமாக உள்ளது. இவை ஒவ்வாமையை குறைக்கும் தன்மை கொண்டவை ஆகும். ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட சில பழங்கள் உண்டு. இவற்றை வாங்கி தொடர்ச்சியாக உட்கொள்வதால் ஆஸ்துமா முற்றிலும் கட்டுப்படுகிறது. குறிப்பாக ஆஸ்துமா சிகிச்சையில் உணவு கட்டுப்பட்டு திட்டம் என்பது மிகவும் அவசியம் ஆகும். தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே போல், ஒரு ஆரோக்கியமான உணவு முறையும் மனிதனை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு அம்சமாகும்.  அந்த வகையில், இயற்கையான முறையில் ஆஸ்துமாவைப் போக்க சில உணவுகள் நமக்கு உதவுகின்றன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

தேன் :

தேனீக்கள் ஒவ்வொரு தாவரத்தில் இருக்கும் மகரந்தத்தில் இருந்து தேனை சேகரிக்கின்றன. இந்த தேனை தினசரி ஒரு குறைந்த அளவு எடுத்துக் கொள்வதாலும், இந்த மகரந்தத்தை எடுத்துக் கொள்வதாலும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் ஊக்குவிக்கப்பட்டு , ஒவ்வாமை குறைகிறது.

கீரை :
கீரையில் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இது ஆஸ்துமாவின் அறிகுறியை குறைக்க உதவும் ஒரு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்திலும், திசுக்களிலும் மக்னீசியம் அளவு குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. இதனால் தொடர்ந்து மக்னீசியம் அதிகம் உள்ள உணவை நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா பாதிப்பு நாளடைவில் தடுக்கப்படுகிறது. கீரையில் உள்ள வைட்டமின் பி சத்து, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் ஆஸ்துமாவை குறைக்க உதவுகிறது.

இஞ்சி :
முழு உடலையும் ஊடுருவக்கூடிய அழற்சி எதிர்ப்பு ஊட்டச்சத்துக்களால் நிரப்பப்பட்ட இஞ்சி மற்றொரு சக்தி வாய்ந்த ஆஸ்துமா எதிர்ப்பு மூலிகை ஆகும்,  பெனட்ரைல் போன்ற ஆண்டிஹிஸ்டமைன் போதைப்பொருட்களைவிட காற்றுப்பாதைகளை சுத்தப்படுத்துவதற்கும் வீக்கத்தை நிறுத்துவதற்கும் இந்த இஞ்சி பெரிதும் உதவுகிறது. மேலும் இஞ்சியை உட்கொள்வதால் வேறு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது இதன் சிறப்பாகும். இதனால் உங்கள் தினசரி உணவு மற்றும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதால் உங்கள் ஆஸ்துமா குணமடைகிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.


அவகாடோ :
ஆஸ்துமாவை குணப்படுத்தும் உணவுகளில் அதி சிறந்தது அவகாடோ என்னும் வெண்ணெய் பழம் ஆகும். தீங்கு விளைவிக்கும் கூறுகளால் சேதமடைந்த செல்களை பாதுகாக்கவும், மாசுபடிந்த உங்கள் உடலில் உள்ள நச்சுகளைப் போக்கவும், மேலும் உடலில் உண்டான மற்ற தீங்குகளைப் போக்கவும் இந்த வெண்ணெய் பழம் பெரிதும் உதவுகிறது. எல்.க்ளுடதியோன் என்னும் அன்டி ஆக்சிடென்ட் அவகாடோவில் அதிகம் உள்ளது. இது எல்லா அண்டி ஆக்சிடேன்ட்களுக்கும் தலைவனாக பார்க்கப்படுகிறது. இந்த அண்டி ஆக்சிடென்ட் மற்ற அண்டி ஆக்சிடென்ட்கள் செயல்பட உதவுகிறது. மேலும் அழற்சிக்கு முற்றுபுள்ளியை வைக்க உதவுகிறது. சேதமடைந்த குடல் ஆரோக்கியத்தை  சரி செய்கிறது. இதனால் ஆஸ்துமா அதிகரிப்பு தடுக்கப்படுகிறது. நாளடைவில் ஆஸ்துமா குணப்படுத்தப்படுகிறது.

பரட்டைக்கீரை :
காற்று வழிப்பாதையில் சுமூகமான தசைகள் சுருக்கங்களை ஏற்படுத்துவதற்கான கூறுகளைத்  தடுக்க ஒரு தனிப்பட்ட திறனைக் கொண்டுள்ளது இந்த பரட்டைக் கீரை. மேலும் பரட்டைக் கீரையில் பீட்டா கரோடின் அதிகமாக உள்ளது. இந்த ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் பைதோ கெமிக்கல் ஆகும். தற்போது உடலில் உள்ள ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்கவும், வருங்காலத்தில் உருவாக இருக்கும் ஆஸ்துமா அறிகுறிகளைத் தடுக்கவும் திறன் கொண்டது இந்த பரட்டைக் கீரையாகும்.

வாழைப்பழம்:
ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா குணப்படுத்தப்படுகிறது. 2011ம் ஆண்டு லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஆய்வின்படி, தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளும் சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற ஆஸ்துமாவை அதிகரிக்கும் அறிகுறிகள் 34% வரை குறைக்கபப்டுகின்றன என்று கூறப்படுகிறது. வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் ஆஸ்துமா போன்ற சுவாச தொடர்பான தொந்தரவுகள் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வெங்காயம் :
வெங்காயத்தில் ஆஸ்துமாவைப் போக்கும் தன்மை மற்றும் அழற்சியைக் குறைக்கும் தன்மை உள்ளது. ஹிஸ்டமின் வெளியேற்றத்தைத் தடுக்கிறது. மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பைக் குறைக்கிறது. வெங்காயம் புரோஸ்டாக்ளாண்டின்களைக் கொண்டிருக்கும், அவை மூச்சுக்குழாய் பாதைகளைத் தளர்த்தும் மற்றும் அழற்சி மற்றும் எதிர்ப்பு ஒவ்வாமை பண்புகளைக் கொண்டிருக்கும்.

பச்சைப் பால் :
ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்குவதாக எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டது காய்ச்சாத பச்சை பால். ஆகவே இதனை எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா பாதிப்பு முற்றிலும் போக்கப்படுகிறது.

மஞ்சள்:
அழற்சியைக் குறைக்கும் சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுவது மஞ்சள். நுரையீரல் வீக்கம் மற்றும் ஆஸ்துமா தாக்குதலின் போது சுவாசக் குழாய்களை சுருங்கச் செய்வதற்கான பொறுப்பு போன்றவை மஞ்சளின் இந்த சக்திவாய்ந்த ஊட்டச்சத்துகள் முன்னால் காணமல் போகும். மஞ்சள்  இரத்த நாளங்களைத் விரிவாக்க உதவுகிறது மற்றும் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. ஆகவே ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் ஒரு சிறந்த ஆயுதமாக மஞ்சள் உள்ளது என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.