தொண்டை பிரச்சனைக்கான நிவாரணம்

தொண்டையிலுள்ள மூன்று பகுதிகளும் நமக்கு முக்கியமானவை. எனவே எவ்வாறு இந்த தொண்டை பிரச்சனைக்கு நிவாரணம் பெறலாம் என்பதுதான் இக்கட்டுரை.

தொண்டை பிரச்சனைக்கான நிவாரணம்

தொண்டை பிரச்சனைக்கான நிவாரணம்:

தொண்டை கழுத்திற்கு முன் பக்கமாக இருக்கும்  உணவுக் குழாயையும், வாயையும் இணைக்கும் பகுதி. இதில் உள்ள உணவு குழாய் மூலம் உணவு நம் உடலுக்குள் செல்கிறது , மூச்சு குழாய்  மூலம் நாம் சுவாசிக்கிறோம் மற்றும் குரல்வளை மூலம் நாம் பேசுகின்றோம். மூச்சை இழுக்கும் போது , குரல்வளை மூடி உணவையும், தண்ணீரையும்  உள்ளே வராமல் தடுக்கிறது. இதிலுள்ள மூன்று பகுதிகளும் நமக்கு முக்கியமானவை. எனவே எவ்வாறு  இந்த தொண்டை  பிரச்சனைக்கு  நிவாரணம் பெறலாம் என்பதுதான் இக்கட்டுரை.

 நிவாரணம்:

1. தொண்டை நோய்: மாதுளம் பூச்சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து  சாப்பிட தொண்டை நோய் அகலும்.

2. தொண்டைப்புண்:  வேப்பம்பூவை கொதித்த நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். 

  • இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து கொப்பளித்துவர தொண்டைப்புண் குணமாகும்.
  • .கிராம்பை தணலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும்.

3.  தொண்டை கட்டு குணமாக: பச்சை மா  இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடிக்கவும்,  தொண்டைக்கட்டு குணமாகும்.

  • மாவிலையை சாற்றையும், தேனையும் நீரில் கலந்து   அருந்தி வர  தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.

4.    தொண்டை கரகரப்பு குணமாக:  சுக்கு, வால்மிளகு, திப்பிலி இவை அனைத்தையும் வருத்து  பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும் .

  • பூவரசன் வேரையும், பட்டையையும் சேர்த்து கஷாயம் செய்து  கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

5. தொண்டை சதை வளர்ச்சி:தொண்டை சதை வளர்ச்சி குறைய வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 கிராம் வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணெயை எடுத்து வாயில் விட்டு சில நிமிடங்கள் வாய் முழுவதும் வைத்துக்கொண்டு பின் கொப்பளிக்கவும் . 10 தினங்கள் கொப்பளிக்க உங்களுக்கு நல்ல பலன்  கிடைக்கும்.

6. டான்சில்ஸ்  கோளாறு:    துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டைவரை கொப்பளித்து வர நல்ல பலன்  தெரியும். 

தொண்டையிலுள்ள மூன்று பகுதிகளும் நமக்கு முக்கியமானவை.எந்த பக்க  விளைவும் இல்லாத எளிதில் கிடைக்கும் இந்த பொருட்களை  கொண்டே நம் தொண்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.