உங்களுக்கு தைராய்டு இருக்கிறதா?

உங்களுக்கு தைராய்டு இருக்கிறதா? இல்லையா என்று நீங்கள் வீட்டிலேயே சின்னதாக பரிசோதித்து கொள்ளலாம்.

உங்களுக்கு தைராய்டு இருக்கிறதா?

உங்களுக்கு தைராய்டு இருக்கிறதா? இல்லையா என்று நீங்கள் வீட்டிலேயே சின்னதாக பரிசோதித்து கொள்ளலாம். கழுத்து சோதனைஎன்று அழைக்கப்படும் இதை செய்வதன் மூலம் உங்கள் தைராய்டு சுரப்பியில் ஏதேனும் கட்டிகள் அல்லது மாற்றங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

பொதுவாக, தைராய்டு நோயை அடையாளம் காண இந்த கழுத்து சோதனை, மிகவும் துல்லியமானது இல்லை. இது சிறிய முன்னோட்டமே தவிர, மருத்துவமனையில் காண்பிப்பதற்கு ஈடு இல்லை. எனவே உடல் நிலை சம்பந்தப்பட்ட உங்கள் சிறிய சிறிய சந்தேகங்களை கூட மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.

1. கண்ணாடியின் முன் நிற்கவும்

 உங்கள் கழுத்தை நீங்கள் முழுவதும் காணும் வகையில் கண்ணாடியின் முன் நிற்கவும். உங்கள் கழுத்தில் ஏதேனும் தாவணி, டை, நகைகள் போன்ற ஏதாவது இருந்தால் அகற்றிவிடுங்கள்.

 2. கழுத்தை மெதுவாக உயர்த்தவும்

 உங்கள் தாடை மேல்நோக்கி இருக்குமாறு, உங்கள் கழுத்தை மெதுவாக உயர்த்தவும்.

  3. ஒரு மடக்கு தண்ணீர் குடியுங்கள்

 உங்கள் கழுத்தை மேலே உயர்த்தியவாறே ஒரு சிப் தண்ணீரை குடியுங்கள் . இதனால் உங்கள் குரல்வளை முன்னோக்கி நகரும். இது உங்கள் தைராய்டு சுரப்பியின் வடிவத்தை தெளிவாக காண அனுமதிக்கும், ஏதேனும் வித்தியாசம் இருந்தால் காட்டும். தைராய்டு சுரப்பி என்பது கழுத்தின் கீழ் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய, பட்டாம்பூச்சி வடிவ உறுப்பு ஆகும். இது உங்கள் கிளாவிக்கிள் (காலர் ஃபோன்) மற்றும் உங்கள் குரல்வளைக்கு (வாய்ஸ் பாக்ஸ்) கீழே அமைந்துள்ளது.

4. உன்னிப்பாக கவனியுங்கள்

 நீங்கள் தண்ணீரை விழுங்கும்போது ஏதேனும் தடிப்புகள், கட்டிகள், புரோட்ரஷன்கள் போன்று ஏதேனும் கழுத்தின் மையத்தை விட்டு  விலகி தெரிகிறதா என்று பாருங்கள். இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்து பார்த்தால் அதாவது, மற்றொரு வாய் தண்ணீரை விழுங்கி, உங்கள் கழுத்தில் உள்ள கட்டமைப்புகளை சில முறை உன்னிப்பாக கவனியுங்கள்.

தைராய்டு முடிச்சுகள் பொதுவாக வட்டமாக புடைப்புகள் போல் தோற்றமளிக்கும். உங்கள் விரல் வைத்து பார்த்தால் இந்த தைராய்டு முடிச்சு உருண்டு வருவதை உணர முடியும் அல்லது நீங்கள் தண்ணீர் குடிக்கும் போது அது நகர்வதைக் காணலாம். காயிட்டர் (வீக்கம்) என்பது கழுத்தின் ஒரு பக்கத்திலோ, அல்லது இரு பக்கத்திலோ காணப்படலாம்.

 

5. கட்டிகள் இருக்கிறதா என்று பாருங்கள்

 உங்கள் தைராய்டு சுரப்பியைச் சுற்றியுள்ள பகுதியை மெதுவாகத் தொட்டு பார்த்து,ஏதேனும் விரிவாக்கம், புடைப்புகள் இருக்கிறதா என பாருங்கள்.

 தைராய்டையும் மற்றும் உங்கள் கழுத்தின் மற்ற பகுதிகளையும்  வேறுபடுத்தி பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் உங்கள் கழுத்தின் நடுப்பகுதியில் உங்கள் விரலை வைத்து கீழ் நோக்கி இறக்கவும். நீங்கள் உணரும் முதல் கடினமான பகுதி தைராய்டு குருத்தெலும்பு ஆகும். உங்கள் விரலை கீழ்நோக்கி நகர்த்தும்போது, அடுத்ததாக நீங்கள் கிரிகாய்டு வளையம் என்று அழைக்கப்படும் மற்றொரு குருத்தெலும்புகளை உணர்வீர்கள், இது மூச்சுக்குழாயை (விண்ட்பைப்) சுற்றி வருகிறது. இதற்கு கீழே உள்ள இரண்டு பகுதிகள் தைராய்டு இஸ்த்மஸ் (இரண்டு மடல்களையும் இணைக்கும் திசு) ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உங்கள் தைராய்டு சுரப்பிகள் உள்ளன.

6. மருத்துவரைப் அணுகவும்

 நீங்கள் ஏதேனும் கட்டிகள் அல்லது புடைப்புகளை கண்டால், நீங்கள் நிச்சயமாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். பல பிரச்சனைகளை பார்வையாலோ அல்லது உங்கள் விரல்களாலோ கண்டறிவது கடினம். 

உங்கள் தைராய்டு இயல்பாக இருப்பது போல் தோற்றமளித்தாலும், மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதும், தைராய்டு நோயின் அறிகுறிகள் இருந்தால் அதைபற்றி ஆலோசிப்பதும் முக்கியம்.

தைராய்டு சுரப்பி பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால் சுமார் 15 மில்லியன் அமெரிக்கர்கள் தற்போது தைராய்டு சிக்கல்களைக் கொண்டுள்ளனர்.

நமது தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருக்கிறதா, அதன் செயல்பாடு சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது நமது ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் முக்கியம்.