பிறந்த தேதியை வைத்து ராசியை எப்படி கண்டுபிடிப்பது

பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடத்தை வைத்துக் கொண்டு ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரம் எப்படி கணிக்கப்படுகின்றன.

பிறந்த தேதியை வைத்து ராசியை எப்படி கண்டுபிடிப்பது

பிறந்த தேதியை வைத்து ராசியை எப்படி கண்டுபிடிப்பது?

பண்டைய நூல்களின்படி, முனிவர்கள் வானத்தை 12 பகுதிகளாகப் பிரித்துள்ளனர், அதை நாம் 12 வெவ்வேறு ராசிகள் என்று அழைக்கிறோம் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். பிறந்த தேதியை வைத்து ராசியை கண்டுபிடிப்பது எப்படி என்று இப்போது பார்ப்போம். 

ராசி :

பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடத்தை வைத்துக் கொண்டு ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரம் கணிக்கப்படுகின்றன.

மொத்தம் 27 நட்சத்திரங்கள் அதில் 108 பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 4 பாதங்களாக பிரித்து ஒவ்வொரு ராசி வீடுகளிலும் தலா 9 பாதங்களாக பிரிக்கப்பட்டு 12 ராசி வீடுகளில் உள்ளன. சந்திரன் ஒரு நாளுக்கு ஒரு நட்சத்திரத்தில் இருக்கும். அதேபோல் 27 நாளும் 27 நட்சத்திரத்தில் பயணம் செய்துக்கொண்டே இருக்கிறது.

பிறந்த ராசி  என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் உள்ள வீட்டை தான் ராசி வீடு என்றும் அந்த நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர். சந்திரன் என்பது உடல்நிலை மற்றும் மன நிலையை குறிக்கும். அதனால் தான் சந்திரனை தாய் கிரகம் என்று கூறுகிறார்கள். 

எந்தெந்த நட்சத்திரம்  எந்த ராசியில் உள்ளது என்பதை இப்போது காண்போம்

மேஷம் - அசுவினி 1,2,3,4 பாதம், பரணி 1,2,3,4 பாதம், கிருத்திகை 1 ஆம் பாதம். 

ரிஷபம் - கிருத்திகை 2,3,4 பாதம், ரோகிணி 1,2,3,4 பாதம், மிருகசிரீஷம் 1,2 பாதம். 

மிதுனம் - மிருகசிரீஷம் 3,4 பாதம், திருவாதிரை 1,2,3,4 பாதம், புனர்பூசம் 1,2,3பாதம். 

கடகம் - புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம் 1,2,3,4 பாதம், ஆயில்யம் 1,2,3,4 பாதம். 

சிம்மம் - மகம் 1,2,3,4 பாதம், பூரம் 1,2,3,4 பாதம் , உத்திரம் 1-ஆம் பாதம். 

கன்னி - உத்திரம் 2,3,4,பாதம் , அஸ்தம் 1,2,3,4 பாதம், சித்திரை 1,2 பாதம்.

துலாம் - சித்திரை 3,4பாதம், சுவாதி 1,2,3,4 பாதம், விசாகம் 1,2, 3பாதம்.  

விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் , அனுஷம் 1,2,3,4 பாதம், கேட்டை 1,2,3,4 பாதம். 

தனுசு - முலம் 1,2,3,4பாதம், பூராடம் 1,2,3,4பாதம் , உத்திராடம் 1-ஆம் பாதம். 

மகரம் - உத்திராடம் 2,3,4 பாதம், திருவோணம் 1,2,3,4பாதம், அவிட்டம் 1,2பாதம்.

கும்பம் - அவிட்டம் 3,4பாதம், சதயம் 1,2,3,4பாதம், பூரட்டாதி 1,2,3 பாதம்.

மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி 1,2,3,4 பாதம், ரேவதி 1,2,3,4 பாதம்.

குழந்தையின் பிறந்த தேதி மற்றும் சரியான நேரத்தை குறித்து கொண்டு. அன்றைய தேதியை நாட்காட்டி அல்லது பஞ்சாங்கத்தை பார்த்தாலே அன்றைய நட்சத்திரம் தெரிந்துவிடும். அந்த நட்சத்திரத்தை வைத்து ராசியை கண்டுபிடித்துவிடலாம். ஒருவர் என்ன ராசி என்பதை முதலில் அறிந்தால் தான் அவரின் ஜாதகத்தை கணிக்க முடியும்.