அடடா! பன்னீரில் இவ்வளவு நன்மைகளா?

பன்னீரின் நன்மைகள் பற்றி அறிய இங்கே படியுங்கள்.

அடடா! பன்னீரில் இவ்வளவு நன்மைகளா?

பன்னீர் என அழைக்கப்படும் காட்டேஜ் சீஸ் இனிப்பு மற்றும் அமில சுவையுடன் கூடிய ஒரு வகையான சீஸ் தான். தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் இது மிகவும் பிரபலமானது. மற்ற சீஸ்களை போலல்லாமல், பன்னீர் உருகாது . மேலும் இதை துருவி கூட பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால் பன்னீரை பச்சையாக கூட சாப்பிடலாம்.

தயாரிக்கும் முறை:

பாலை சூடாக்கி, வினிகர், லெமன் சாறு போன்ற அமில உணவுகளைப் பயன்படுத்தி பன்னீர் தயாரிக்கப்படுகிறது. பாலை தயிராக்க பயன்படுத்தப்படும் இந்த அமிலம் தான் பன்னீரின் சுவையை தீர்மானிக்கிறது.

பன்னீரின் நன்மைகள் :

எலும்புகளுக்கு நல்லது:

பன்னீரில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகள் மற்றும் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.

செரிமானத்திற்கு நல்லது:

பன்னீரில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ், செரிமான அமைப்பின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். மலச்சிக்கல் பிரச்சனைக்கும் பன்னீர் நல்லது.

நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும்:

வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் பன்னீரில் உள்ளன.

அறிவாற்றல் வளர்ச்சிக்கு பன்னீர்:

பன்னீரில் ஒமேகா-3 உள்ளது, இது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு நல்லது. மேலும் இது நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது.

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது:

பன்னீரில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் இருப்பதால், இது மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

உடல் எடை குறைப்பு :

பன்னீரில் ஆரோக்கியமான கொழுப்புகள், மற்றும் அதிக புரதம் உள்ளது . இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் எளிதில் ஜீரணமாகும், எனவே எடை இழப்புக்கு பனீர் நல்லது.

அழகிற்கு பன்னீர் :

பன்னீரில் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதுமட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது.

  நீரிழிவு நோய்க்கு நல்லது:

பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை எடுப்பதில்லை. ஆனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மெக்னீசியம் இருப்பதால் பன்னீர் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.