கர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது நல்லதா ?

கோடை காலத்தில் மக்களை பாதிக்கும் பல்வேறு பாதிப்புகளை குணமாக்குவதில் விளாம் பழம் சிறந்த நன்மை அளிக்கிறது.

கர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது நல்லதா ?

விளாம் பழம் கோடை காலத்தில் கிடைக்கும் ஒரு பழமாகும். இது ஒரு குளிர்ச்சியான பழமாகும். மேலும் செரிமானம் தெடர்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகம்  உள்ளது. வெயில் காலங்களில் இந்த பழத்தின் சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த பழத்தின் மேல் பகுதி ஓடு போல் காட்சியளிக்கும். உள்ளே இருக்கும் விழுதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து சாப்பிடலாம். உடலில் தண்ணீர் அளவு அதிகரிக்கும்போது உண்டாகும் இரத்த இழப்பை  இந்த பழம் மீட்டெடுக்கும். மலச்சிக்கல் பாதிப்பில்  இருந்து நிவாரணம் கிடைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் , வாதத்தைத் தடுக்கும். 

இது தவிர, கர்ப்ப காலத்தில் விளாம் பழம் உட்கொள்வது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது என்று பெங்களூரு நகரத்தின் அஸ்டர் CMI மருத்துவமனையின் ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்.சௌமியா லட்சுமி கூறுகிறார். அதனைப் பற்றி இந்த பதிவில் தொடர்ந்து காணலாம். 

கர்ப்பிணிகளுக்கு விளாம் பழம் :

விளம் பழம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றின் ஆதாரமாக விளங்குகிறது. கர்ப்பகாலத்தில் பொதுவாக ஏற்படும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வைத்த தருகிறது விளாம் பழம். கர்ப்பகாலத்தில் மிதமான அளவு விளாம் பழம் எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு எதிர்மறை பாதிப்புகளும் ஏற்படுவதாக குறிப்புகள் அல்லது ஆய்வறிக்கைகள் இல்லை. கர்ப்பகால நீரிழிவு உள்ள தாய்மார்கள் மட்டும் இதனை உட்கொள்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காரணம் இதில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது  என்று மருத்துவர் சௌமியா கூறுகிறார்.

விளாம் பழத்தின் ஊட்டச்சத்து விபரங்கள் :

விளாம் பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. 100 கிராம் விளாம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விபரங்கள் குறித்து இப்போது காண்போம் 

ஊட்டச்சத்து  விபரங்கள் :

கார்போஹைட்ரேட் 31.8 கிராம் 

புரதம்  1.8 கிராம் 

நார்ச்சத்து   2.9 கிராம் 

பொட்டாசியம்  600 மிகி 

வைட்டமின் சி  8 மிகி 

கால்சியம்  85 மிகி 

இரும்புசத்து  0.7 மிகி 

பாஸ்பரஸ்  50 மிகி 

கர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் :

  1. தொற்று பாதிப்பை எதிர்த்து போராடுகிறது :

விளாம் பழ சாற்றில் கிருமி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள் காரணமாக உடலில் உள்ள தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவுகிறது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். அதனால் பலவித தொற்று பாதிப்பு அவர்களை ஆட்கொள்ள நேரிடும். அந்த சூழ்நிலையில், பெண்கள் விளாம்பழ ஜூஸ் எடுத்துக் கொள்வதால் தொற்று பாதிப்பை எதிர்த்து போராட முடியும் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

  1. உடலின் நீர்ச்சத்து அளவை நிர்வகிக்க உதவுகிறது :

விளாம் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த சத்து உடலின் திரவ அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. கர்ப்பகாலத்தில் விளாம் பழம் அல்லது விளாம் பிழை ஜூஸ் எடுத்துக் கொள்வதால் உடலின் திரவ அளவு மற்றும் எலெக்ட்ரோலைட் அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. 

  1. செரிமானத்திற்கு உதவுகிறது :

கர்ப்பகாலத்தில் செரிமான கோளாறுகள் பொதுவானது. கருவில் குழந்தை வளர்ச்சி அடையும்போது, செரிமான மண்டலத்தில் ஒருவித அழுத்தம் உண்டாகலாம். இதனால் செரிமான கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படலாம். விளாம் பழம் இந்த பாதிப்பை சரி செய்யக்கூடும். விளாம் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். விளாம்பழத்தில் உள்ள பொட்டாசியம் நரம்பு தூண்டுதலுக்கு சிக்னல் அனுப்ப உதவுகிறது. தசைச் சுருக்கம் மற்றும் உடல் பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.

விளாம்பழத்தை உட்கொள்ள சில குறிப்புகள்: 

  1. விளாம் பழ விழுதை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது ஜூஸ் அல்லது ஷேக் தயாரித்து உட்கொள்ளலாம்.
  2. விளாம் பழம் கொண்டு கஸ்டர்டு அல்லது சாஸ் தயாரித்து உட்கொள்ளலாம்.
  3. பழங்கள் கொண்டு சாலட் தயாரித்து அதில் விளாம் பழத்தையும் சேர்த்து உட்கொள்ளலாம்.