வைட்டமின்களும் முடி வளர்ச்சியும்

ஊட்டச்சத்து நிபுணர்கள் 13 வகையான அத்தியாவசிய வைட்டமின்களை கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது முடியை வளர்ச்சியை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். வைட்டமின் ஏ, சி ,டி , ஈ ,கே , மற்றும் வைட்டமின் பி - காம்ப்ளெக்ஸ் குழு போன்றவை அந்த வைட்டமின்களாகும். இவற்றை பற்றி அறிந்து கொள்வததுதான் இந்த பதிவின் நோக்கம்.

வைட்டமின்களும் முடி வளர்ச்சியும்

முடி வார்ச்சிக்கு வைட்டமின்  டி :
வைட்டமின் டி சருமம் மற்றும் எழும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தலையில் புதிய வேர்க்கால்கள் உற்பத்தியில் வைட்டமின் டி உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலை முடியின் அடர்த்தியை அதிகரித்து முடி உதிர்தல் குறைகிறது.
தலையில் செயலற்று போன வேர்க்கால்களை தட்டி எழுப்பி புத்துணர்ச்சி பெற வைட்டமின் டி உதவுகிறது. வழுக்கை தோன்ற முக்கிய காரணம் வேர்க்கால்கள் செயலற்று போவதுதான். 
சால்மன் மீன், காளான், தானியங்கள், வலுவூட்டப்பட்ட ஆரஞ்சு ஜூஸ், குறைந்த கொழுப்பு வலுவூட்டப்பட்ட பால் போன்றவற்றில் வைட்டமின் டி இயற்கையாக கிடைக்கிறது. சூரிய கதிர்களால் உடல் இயற்கையாக வைட்டமின் டி யை உற்பத்தி செய்கிறது. ஆகவே காலையில் 15 நிமிடங்கள்  வெயிலில் நடப்பது அல்லது நிற்பது நல்லது. 

முடி  வளர்ச்சிக்கு வைட்டமின் பி :
வளர்சிதை மாற்றத்தை நிர்வகிக்கவும், மத்திய நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தவும், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்  முக்கியமான ஒன்றாகும். ஆரோக்கியமான சருமம் மற்றும் முடிக்கு இது ஒரு அவசியமான வைட்டமின் ஆகும். வைட்டமின் பி12 முடியை வலிமை படுத்தவும் , ஒரு கண்டிஷனர் போலவும் செயல்படுவதாக சில உணவு சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின்கள் தையாமின் (பி1), ரிபோபிளவின்(பி2), நியாசின்(பி3), பந்தொதெனிக் அமிலம்(பி5), பைரிடாக்ஸின்(பி6) , பயோட்டின்(பி7) , போலேட்(பி9) மற்றும் கோபாலமின்(பி12) ஆகியவை இணைந்து வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்  என்று அழைக்கப்படுகின்றன.

முழு தானியங்கள், காலிப்ளவர், கேரட், பச்சை காய்கறிகள், மாட்டிறைச்சியில் கல்லீரல் பகுதி, கோழி இறைச்சி, முட்ட, சோயா பீன்ஸ், நட்ஸ், அவகேடோ, பயறு போன்றவற்றில் வைட்டமின் பி சத்துகள் அதிகமாக உள்ளன.

முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ :
வைட்டமின் ஈ சத்தில் டோகோட்ரினோல் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான தலையை உருவாக்கிட உதவுகிறது. 
வைட்டமின் ஈ மாத்திரை வடிவிலும் திரவ வடிவிலும் கிடைக்கிறது. கோதுமை, கீரை, பரட்டை கீரை, பாதாம் போன்ற உனவு பொருட்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன. வைட்டமின் ஈ எண்ணெய்யை தலையில் தேய்ப்பதால் தலையில் உள்ள அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

முடி வளர்திக்கு உதவும் வேறு சில வழிகள்:
வைட்டமின்கள் ஆரோக்கியமான தலை முடிக்கு அவசியம் தேவையான ஒன்று. வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதும் முடி வளர்ச்சிக்கு உதவும்.
   * ஜெல், க்ரீம் போன்றவற்றின் பயன்பாட்டை தவிர்க்கவும்.
   * முடி ஈரமாக இருக்கும்போது சீவ கூடாது.
   * ஒரு நாளில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதாம் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள். 
   * 6-8 க்ளாஸ் தண்ணீர் தினமும் குடியுங்கள்.

சோர்வான, உடையும் தன்மையுள்ள , பளபளப்பு இல்லாத , நெகிழ்வு தன்மையில்லாத முடிகள் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகின்றன. இவை விரைவில் உடைந்து உதிர தொடங்கும். மேலே கூறிய வைட்டமின்களை உங்கள் தினசரி உணவுடன்  இணைப்பதன் மூலம் முடி உதிர்தல் குறைந்து  அழகான முடி வளர்ச்சியை பெறலாம்.