ஹிமாலயன் பூண்டின் நன்மைகள்

நமது விவசாய சமூகத்தை சேர்ந்தவர்கள் இன்றளவும் பல இயற்கை மூலிகை மற்றும் செடிகளை அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். அத்தகைய விவசாயிகள் இல்லையென்றால் இன்று நாம் பல வகை செடிகளின் பெயரை கூட மறந்திருப்போம். அந்த வகையான ஒரு இயற்கை விளை பொருள் தான் ஒரே பல் பூண்டு..

ஹிமாலயன்  பூண்டின் நன்மைகள்

நம் இந்திய நாடு பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு ஊரின் பெயர் சொல்ல ஒரு  சிறப்பு அம்சம் இருக்கும். அது அந்த ஊரில் உள்ள சிறப்பான இடமாக இருக்கலாம், உற்பத்தியாக இருக்கலாம் அல்லது விளை பொருளாக இருக்கலாம். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. நம் நாட்டின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது நமது கடமை. அந்த வகையில் நாம் இன்று ஒரு சிறப்பான விளை பொருள் பற்றி காண இருக்கிறோம்.

காஷ்மீரில் இந்த உணவுப்பொருள் அதிகமாக விளைவதால் ஸ்னோ பூண்டு , காஷ்மீர் பூண்டு என்றும் பிரபலமாக அழைக்கப்படும். மேலும் இமாலய மலை பகுதிகளில் இது அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அதனால் ஹிமாலயன் பூண்டு என்று அழைப்பதுண்டு. 

இது பூண்டின் ஒரு வகையாகும். ஆனால் பொதுவாக பூண்டு பல பற்கள் அடங்கிய கொத்து போல் இருக்கும். ஆனால், இந்த வகை பூண்டில் தாமாரை இதழ் போல் ஒரே ஒரு பூண்டு பல் தான் மொத்த பூண்டின் உருவில் இருக்கும். பூண்டின் தோலை உரித்து பார்க்கும்போது, மொத்தமாக ஒரே ஒரு பல் தான் இருக்கும். கேட்கவே ஆச்சர்யமாக உள்ளதா? ஆம், இதனை ஹிமாலயன் பூண்டு என்றும் கூறுவர். சாதாரண பூண்டை விட ஏழு மடங்கு அதிக சக்தி கொண்டது இந்த ஹிமாலயன் பூண்டு.

ஏழு மடங்கு சக்தி, என்பது மிகவும் வியப்பூட்டும் விஷயமாக உள்ளது அல்லவா? வாருங்கள் அந்த அற்புத மூலிகையின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது:
ஹிமாலயன் பூண்டு உடலின் உயர்ந்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் நல்ல தீர்வைத் தருகிறது. உடலில் 20 mg/dl அளவு கொலஸ்ட்ரால் பூண்டு சாப்பிடுவதால் குறைக்கப்படுகிறது , மேலும் மனித உடலின் ட்ரை க்ளிசரைடு அளவும் இதனால் குறைகிறது. தினமும் மூன்று அல்லது நான்கு பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது:
தினமும் தொடர்ந்து ஹிமாலயன் ஒரே பல் பூண்டை சாப்பிட்டு வருவதால் சளி மற்றும் இருமல் ஏற்படும் அபாயத்தை 50% வரை குறைக்கலாம் என்று அறிவியலாளர்கள் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். கூடுதலாக, பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதும் குறைவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பூண்டை நசுக்கி விழுதாக்குவதால், இவற்றில் உள்ள இரண்டு ரசாயனக் கூறுகள் அல்லினஸ் மற்றும் அல்லின் போன்றவை இணைந்து ஒரு சக்தி மிக்க அல்லிசின் என்ற கூறை உருவாக்குகிறது. இந்த சக்தி மிகுந்த கூறு, சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது. இரண்டு பூண்டை நசுக்கி ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகிவதால் சளி மற்றும் இருமல் குணமடைகிறது.

புற்று நோயை எதிர்த்து போராடுகிறது:
பூண்டு இயற்கையாகவே டைலைல் ட்ரைசல்பைட் என்றழைக்கப்படும் ஆர்கான்சுல்ஃபர் கலவையைக் கொண்டிருக்கிறது, இது புற்றுநோய்களின் உயிரணுக்களை கொல்ல உடலுக்கு உதவுவதன் மூலம் புற்றுநோயை எதிர்த்து உதவுகிறது. பூண்டை அதிகம் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 66.67% குறைவாக இருப்பதாக வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றனர்.

தினமும் பூண்டு சாப்பிடுவதால் எந்த வகை புற்று நோய்க்கான அபாயத்தையும் 50% வரை குறைக்கலாம் என்று தேசிய புற்று நோய் நிறுவனம் கூறுகிறது. பூண்டில் உள்ள கந்தக கலவை காரணமாக புற்று நோய்க் கிருமிகள் உடலில் இருந்து வெளியேறுகின்றன.

நீரிழிவு நோயை எதிர்த்து போராடுகின்றன:
தினமும் ஹிமாலயன் பூண்டு பற்கள் இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த பூண்டில் உள்ள அல்லிசின் , வைட்டமின் பி மற்றும் தைமின் போன்றவற்றோடு இணைந்து கணயத்தை ஊக்குவித்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் நீழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் குணமடைகிறது:
ஹிமாலயன் பூண்டு இதய நோயை தீர்க்க இரண்டு வழிகளில் உதவுகிறது. ஒன்று, உடலில் உள்ள LDL கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை க்ளிசரைடுகளை குறைக்க உதவுகிறது. தினமும் பூண்டு உட்கொள்கிற நோயாளிகளுக்கு LDL கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை க்ளிசரைடு அளவு 20% வரை குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து வீக்கம் மற்றும் உறைவு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. நோயாளிகள் தினமும் பூண்டு உட்கொள்வதால் தீங்கு விளைவிக்கும் இரத்த உறைவு ஏற்படுவது 83%  குறைக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் ஹிமாலயன் பூண்டை உட்கொள்வதால், தசைகள் நெகிழ்ந்து இரத்த அழுத்த அளவு குறைக்கப்படுகிறது. இந்த மந்திரத்தை செய்ய உதவுவது பூண்டில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடு என்னும் கூறு. இதனால் உடலில் உள்ள சிஸ்டாலிக் மற்றும் டையஸ்லாடிக் இரத்த அழுத்தம் குறைகிறது .

இந்த பூண்டை பற்றிய இன்னும் பல நன்மைகள் உங்களுக்கு தேர்ந்தால் எங்களுடன் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.