ஒவ்வொரு நாளும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்?

ஒரு நாளில் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்பதுதான் மக்களின் பொதுவான கேள்வி.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்?

சர்க்கரை பல்வேறு வகையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, மேலும் உலக உடல் பருமனுக்கும் பங்களிக்கிறது. சர்க்கரையை  அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போதுதான், பல பக்க விளைவுகள் உண்டாகின்றன. 

அதிகப்படியான சர்க்கரை உங்களுக்கு நல்லதல்ல, இது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கப் அல்லது இரண்டு கப் தேநீர் / காபி சிறிது சர்க்கரையுடன் பருகுவதால் ஒரே இரவில் உடல் பருமனாக மாறும் என்று பலரும் நினைக்கிறார்கள். பல நூற்றாண்டுகளிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் உணவுகளில் பயன்படுத்தப்படும் முதன்மையான இன்பம் தரும் பொருட்களில் சர்க்கரை ஒன்றாகும்.

இனிப்பு சுவை விரும்புவது உங்களை  சர்க்கரைக்கு  அடிமையாக மாற்றாது. அப்படியென்றால் , ஒரு நாளில் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்? மிதமான சர்க்கரை உட்கொள்ளல்  உங்கள் அன்றாட வாழ்க்கையில் எந்த  பாதிப்பையும் உண்டாக்குவதில்லை . கூடுதல் தினசரி சர்க்கரை உட்கொள்ளல் உடலில் உள்ள பல சிக்கல்களுடன் தொடர்புடையது, ஆனால் இங்கே புரிந்து கொள்ள வேண்டியது “கூடுதல்” அல்லது “அதிகப்படியான” என்ற சொல் பற்றியே. 

ஒரு டீஸ்பூன் சர்க்கரை சுமார் 16-18 கலோரிகளைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு டீஸ்பூன் சர்க்கரை நிறைந்த குவியலை வைத்தால், நீங்கள் 25-30 கலோரிகளை எடுத்துக்கொள்வீர்கள். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேநீர் அல்லது காபி எடுத்துக்கொள்வது பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது, குறிப்பாக நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தால்.

இருப்பினும், நீங்கள் 5-6 அல்லது அதற்கு மேற்பட்ட கப் சர்க்கரை நிரப்பப்பட்ட பானங்கள் மற்றும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட  பழச்சாறுகள், ஆல்கஹால் போன்ற சர்க்கரை  பானங்களைப் பருகுபவராக இருந்தால், அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த பானங்கள் மூலம் நீங்கள் 300-500 கலோரிகளுக்கு மேல் அதிகமாக உட்கொள்ளலாம்.

உங்களுக்கு ஒரு உதாரணம் கொடுக்கலாம். நிறைய பேர், தங்கள் உணவுப் பழக்கம் அல்லது உணவைப் பற்றி விவாதிக்கும்போது, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கலோரி அளவிற்கும் அதிக பங்களிப்பை வழங்காது என்று நினைத்து அவர்களின் சில  உணவுப் பழக்கங்களை பற்றி குறிப்பிடுவதில்லை.  எடுத்துக்காட்டாக, கோலா போன்ற குளிர்பானங்களை பருகும் சிலர் , இதனால் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது என்று நினைத்து  அதனைப் பருகுவது பற்றி குறிப்பிட மறந்துவிடுகின்றனர். அங்குதான் அவர்கள் தவறு செய்கிறார்கள். ஒரு கேன் சோடா அடிப்படையிலான பானத்தில் சுமார் 9-11 டீஸ்பூன் சர்க்கரை இருக்கலாம், இது சிறந்த உணவு முறைகளை அழிக்க போதுமானது. இது 9-11 கப் தேநீர் அல்லது காபி சாப்பிடுவது போன்றது, அதில் நீங்கள் ஒவ்வொரு கப்பிலும்  1 டீஸ்பூன் சர்க்கரை சேர்ப்பது போன்றதாகும். உண்மையான பிரச்சினை இங்குதான் உள்ளது. இது அதிகப்படியான சர்க்கரை, அதாவது மறைக்கப்பட்ட வடிவத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையாகும். 

எனவே உங்கள் கேள்விக்கான விடை  கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.  ஒன்று அல்லது இரண்டு சாக்லேட்,  ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி போன்றவை உங்கள் உடல்நலத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.  உண்மையில் சர்க்கரை உங்கள் பசி உணர்வை குறைக்கும்.  உணவு தேடலை கட்டுப்படுத்தும்.  இந்த அளவிற்கு சர்க்கரை உட்கொள்வதால்,  உங்களை சர்க்கரைக்கு  அடிமை என்று ஒருபோதும் கூறமுடியாது.  இது வாழ்க்கையை இனிப்புடன் வாழ்வதற்கான ஒரு வழியாகும்.