கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொண்டை வலி

கர்ப்பகாலத்தில் தொண்டை வலி போக்க உதவும் வைத்தியம் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொண்டை வலி

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பல வித உடல் உபாதைகள் வந்து வந்து செல்லும். அவற்றுள் ஒன்று தொண்டை வலி. 

கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் :
கிருமி தொற்று அல்லது பக்டீரியா தொற்று  காரணமாக அல்லது காய்ச்சல் மற்றும் சளி காரணமாக தொண்டையில் உண்டாகும் அழற்சியால் தொண்டை வலி உண்டாகிறது. எதுக்கலித்தல், ஒவ்வாமை, தொண்டை தசையில் வலி, சைனஸ், ரசாயனம் அல்லது மாசு போன்றவற்றின் வெளிப்பாடு போன்றவற்றின் காரணமாக இந்த தொண்டை வலி ஏற்படலாம். 

கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான அறிகுறிகள் :
கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் உங்களுக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளதை உணர்த்தும், அவை,

 . தொண்டையில் அரிப்பு
 . தொண்டையில் வலி
 . டான்சில் வீக்கம்
 . தொண்டை கரகரப்பு
 . விழுங்குவதில் சிரமம்
 . காதுவலி

கர்ப்பகாலத்தில், ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக மற்ற பாதிப்புகளான குமட்டல், தலைவலி ஆகியவற்றுடன் இணைந்து  தொண்டை வலியும் உண்டாகலாம். கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொண்டை வலி அடுத்த 7 நாட்களில் தானாக மறைந்து விடும் , அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. தொண்டை வலியால் ஒரு சிறு எரிச்சல் மட்டுமே உண்டாகும். வேறு எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது.

தொண்டை வலியின் தீவிர நிலை தொண்டை அழற்சியாகும். ஆகவே உங்களுக்கு ஏற்பட்டது தொண்டை வலியா அல்லது தொண்டை அழற்சியா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த தொண்டை அழற்சி ஏற்படக் காரணம் ஸ்ட்ரெப்டோ கொக்கல் பக்டீரியா. இந்த தொண்டை அழற்சி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது.
 
கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொண்டை வலியைப் போக்குவதற்கான எளிய வீட்டு வைத்தியம் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இப்போது நாம் காண்போம்.

 1. உப்பு நீரில் கொப்பளிப்பது 

கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொண்டை வலியைப் போக்க மிகவும் பாதுகாப்பான ஒரு எளிய வீட்டுத் தீர்வு, உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது. வெதுவெதுப்பான நீரில் கொப்பளிப்பதால் தொண்டையில் உண்டான எரிச்சல் விலகி, சளி கரைந்து தொண்டைக்கு இதமான உணர்வு உண்டாகும். மேலும், வீங்கிய திசுக்களில் உள்ள அதிகரித்த ஈரப்பதத்தை உப்பு உறிஞ்சி, அழற்சியைக் குறைக்க உதவும். உப்பில் உள்ள அன்டிசெப்டிக் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு ன்பன்புகள், கிருமி வளர்ச்சியை தடுத்து நுண்ணுயிர் தொற்று பாதிப்பை சீராக்க உதவுகிறது.

BMC ஹெல்த் சர்வீசஸ் ரிசர்ச் 2008 வெளியிடப்பட்ட ஒரு  ஆய்வில், உப்புநீரில் ஒரு நாளைக்கு மூன்று முறை கொப்பளித்து வருவதால் மேல் சுவாச குழாய் தொற்று 40% குறைவதாக கூறப்படுகிறது, 

செய்முறை:
1. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
2. அந்த நீரை நன்றாகக் கலந்து கொள்ளவும். 
3. ஒரு நிமிடம் முழுவதுமாக இந்த ஒரு கப் நீரை வாயில் ஊற்றி தொண்டையில் படுமாறு கொப்பளிக்கவும்.
4. தினமும் ஒரு நாளில் மூன்று முறை இதனை செய்து வருவதால் தொண்டை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

 2. ஆவி பிடிப்பது 

நீராவி உட்செலுத்துதலால் சளி சவ்வுகளில் ஈரப்பதம் அதிகரித்து தொண்டை வலிக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கிறது. இதனால் உங்களால் எளிதில் மூச்சு விட முடிகிறது, மேலும் சௌகரியமாக தூங்க முடியும். இதனால் உடல் எளிதில் குணமாகும்.
 
 செய்முறை:
1. ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
2. பிறகு அந்த பாத்திரத்தில் நீர் கொதித்தவுடன் அந்த நீரில் சில துளிகள் பெப்பெர்மின்ட் எண்ணெய் அல்லது தைல எண்ணெய் போன்றவற்றை சேர்த்து கலக்கவும்.
3. தலையில் ஒரு போர்வையை போர்த்தி உங்களை முழுவதும் மூடிக் கொண்டு, உங்கள் முகத்தை மட்டும் இந்த நீரில் மேல் வைத்து அந்த நீரை நுகரவும்.
4. நீரில் இருந்து வெளிப்படும் ஆவியை மூச்சுக்குள் இழுத்து வெளியே விடவும்.
5. 5-10 நிமிடம் இதனை தொடர்ந்து செய்து வரவும். இதே முறையை ஒரு நாளில் 2 அல்லது 3 முறை பின்பற்றவும்.

நீர் மிகவும் சூடாக இருந்தால் உங்கள் கண்கள் அல்லது சருமம் ஆவியின் வெப்பம் தாங்காமல் எரிச்சல் அடைய நேரிடும் என்பதால் கவனமாக வெப்பத்தை கையாள வேண்டும். நீர் இருக்கும் பாத்திரத்தில் இருந்து 8-12 இன்ச் தள்ளி உங்கள் முகத்தை வைத்துக் கொண்டு ஆவியை உள்ளிழுக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து வெளியில் விடவும்.

 3. இஞ்சி :
நெஞ்செரிச்சல் அல்லது எதுக்கலித்தல் காரணமாக உண்டாகும் தொண்டை வலிக்கு , இஞ்சி ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது.
கர்ப்பகாலத்தில் உண்டாகும் அசிடிட்டியைத் தடுக்க இஞ்சி ஒரு சிறப்பான மருந்தாக செயல்படுகிறது. பீனோலிக் கூறுகள் மற்றும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் ஆகிய சிறந்த கூறுகளைக் கொண்ட இஞ்சி  , வயிற்றில் உள்ள அமிலங்களை சமநிலையில் வைக்க உதவுகின்றன.

அசிடிட்டியுடன் கூடிய குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இஞ்சி உதவுகிறது. கர்ப்பகாலத்தின் போது குமட்டல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இஞ்சி ஒரு பாதிப்பில்லாத மற்றும் சாத்தியமான பயனுள்ள மாற்று விருப்பமாக கருதப்படுகிறது என்று 2014ம் ஆண்டு ஊட்டச்சத்து இதழில் வெளியான ஒரு  ஆய்வு தெரிவிக்கிறது.

அன்டி ஆக்சிடென்ட் , கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு , பக்டீரியா எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்ட இஞ்சி, அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது.  
 
செய்முறை:
1. உணவிற்கு பின் வெதுவெதுப்பான இஞ்சி தேநீர் பருகலாம். இஞ்சி தேநீர் தயாரிக்க, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.  10 நிமிடம் நன்றாக கொதித்தபின், அந்த தேநீரை வடிகட்டி மெதுவாக சுவையுங்கள். ஒரு நாளில் இரண்டு கப்பிற்கு மேல் இந்த தேநீரை பருக வேண்டாம்.

2. விருப்பபட்டால் இஞ்சி மிட்டாய் வாங்கி அவ்வப்போது சாப்பிடலாம்.
 
குறிப்பு:
மிதமான அளவு இஞ்சி எடுத்துக் கொள்ள மட்டுமே பரிந்துரைக்கபப்டுகிறது.

 4. வீட்டில் தயாரித்த சிக்கன் சூப்:
வெதுவெதுப்பாக எதாவது பருகுவதால் உங்கள் தொண்டை சற்று இதமான உணர்வைப் பெரும். அதற்கு ஏற்ற ஒரு பானம், வீட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கன் சூப்.

வீட்டில் தயார் செய்த சிக்கன் சூப், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. மேலும் அதில் வைட்டமின், மினரல் ஆகியவை இருப்பதால், தொண்டை வலியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. கூடுதலாக, சிக்கன் சூப் பருகுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் காரணமாக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி பெற்று, மேலும் கிருமிகள் உள்ளே நுழைந்து உடலுக்கு தீமை செய்ய விடாமல் பாதுகாக்கிறது.
மேலும், வீட்டில் தயார் செய்த சிக்கென் சூப் ஒரு கப் பருகுவதால் சளி கரைந்து வெளியேறுகிறது.

2000ம் ஆண்டில் செஸ்டில் வெளியிடப்பட்ட ஒரு  ஆய்வில், சிக்கன் சூப்பில் மேல் சுவாசக் குழாய் நோய்த்தொற்றுகளுக்கு பயனுள்ள மருத்துவ செயல்பாட்டுடன் கூடிய பல பொருட்கள் உள்ளன எனக் கூறுகிறது.

ஆர்கானிக் சிக்கன் கொண்டு வீட்டிலேயே சூப் தயாரிக்கலாம். சூப்பில் வெங்காயம், பூண்டு, மிளகு, கேரட், செலரி, காளான், பார்ஸ்லி, உப்பு ஆகிவற்றை சேர்த்து தயாரிப்பதால் ஆற்றல் அதிகரிக்கும்.


 5. ஆப்பிள் சிடர் வினிகர் :
பதனிடப்படாத, வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்தி கர்ப்பகால தொண்டை வலியை போக்கலாம்.
 
ஆப்பிள் சிட வினிகர் உடலில் அமில உருவாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அமிலம் அதிகம் உருவாகாத இடத்தில கிருமிகள் வளர்வதில்லை. மேலும் ஆப்பிள் சிடர் வினிகரில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால் இது தொற்றை எதிர்த்து போராடுகிறது.

1. பதனிடப்படாத  வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகர் 1-2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீரில் அதனை சேர்த்து கலக்கவும். இந்த நீரைக் கொண்டு 2-3 முறை 30-60 வினாடிகள் வாய் கொப்பளிக்கவும். 

2. வயிற்றுக்குள் இருக்கும் தொற்றைப் போக்க , இதே நீரில் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம். ஒரு நாளில் இரண்டு முறை தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்த நீரை பருகலாம்.

 6. மஞ்சள் சேர்த்த வெதுவெதுப்பான பால் :
வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்த்து பருகுவதால், வீக்கம் மற்றும் அழற்சி அடைந்த சவ்வுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதால், தொண்டை வலிக்கு இது ஒரு இதமான மருந்தாக செயல்புரிகிறது . கூடுதலாக, மஞ்சளில் வலி குறைக்கும் பண்பு இருப்பதால் தொண்டையின் வலியைக் குறைக்க இது உதவுகிறது. தொற்று எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு தன்மை அதிகரிப்பு ஆகிய பண்புகளும் இதற்கு உண்டு. 

செய்முறை:
1. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன்  மஞ்சள் மற்றும் ஒரு சிட்டிகை  இடித்த மிளகு தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
2. இனிப்பு சுவைக்கு சிறிதளவு தேன் சேர்க்கவும்.
3. குணமடையும் செயல்பாடு விரைந்து நடக்க, இந்த மஞ்சள் கலந்த பாலை இரண்டு முறை பருகவும்.

 7. அதிக அளவு திரவம் எடுத்துக் கொள்ளுங்கள்:
தொண்டை வலியின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் அதிக அளவு திரவ உணவை எடுத்துக் கொள்வது அவசியம். திரவம் அதிகம் உட்கொள்வதால், சளி மெலிந்து கரைகிறது. இதால் தொண்டைக்குள் சளி கட்டி, எரிச்சல் உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக திரவம், நச்சுகளை வெளியேற்றி, சவ்வுகளுக்கு நீர்ச்சத்தை தர உதவுகின்றன, இதனால் விரைந்து உடல் குணமாகிறது.

மாற்றாக, குறைந்த அளவு திரவம் எடுத்துக் கொள்வதால் நீர்ச்சத்து குறைகிறது. நீர்ச்சத்து குறைவதால், தொண்டைக்கு ஈரப்பதம் கிடைக்க உதவும் உமிழ்நீர் குறைவாக சுரக்கிறது. 

மேலும், கர்ப்பகாலத்தில் நீர்ச்சத்துடன் இருப்பதால், தொற்று பாதிப்பு ஏற்படும் நிலையும் தவிர்க்கப்படுகிறது.

1. வெதுவெதுப்பான நீரை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பருகுங்கள். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் பருகுங்கள்.
2. காபின் சேர்க்கப்படாத தேநீர் , தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து தயாரித்து பருகலாம்.
3. பழச்சாறு, காய்கறி சூப், ரசம் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் உடல் நீர்ச்சத்துடன் இருக்கும்.
4. நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்கள் மற்றும் இதர உணவுகளை உங்கள் உணவு அட்டவணையில் இணைத்துக் கொள்ளலாம்.
5. காபின் சேர்க்கப்பட்ட சோடா , காபி போன்றவற்றைத் தவிர்ப்பதால் உடல் அதிக நீர்ச்சத்து இழப்பதைத் தவிர்க்கலாம்.

8. போதுமான அளவு ஓய்வு:
தொண்டை வலியால் கர்ப்பகாலத்ல் அவதிப்படும்போது, உங்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக பேசுவதைக் குறைத்துக் கொள்ளவும். மேலும், கர்ப்பகாலங்களில் உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் காரணத்தினால் , கிருமிகள் மற்றும் பாக்டீரியாவுடன் போராட உங்கள் உடல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆகவே உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவ ஓய்வு மிகவும் அவசியம். இதனால் உங்க உடலுக்கு ஆற்றல் அதிகம் கிடைத்து விரைந்து உடல் குணமாகும்.

1. ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை ஒரு குட்டித் தூக்கம் போட்டு, நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் தானாகவே குணமடையும்.

2. தினமும் இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக் கொண்டு உறங்கச் செல்வதால், நீண்ட நேரம் தூங்க முடியும்.


9. ஈரப்பதமூட்டி :
தொண்டை வலி இரவு நேரத்தில் மேலும் மோசமைடையும் வாய்ப்பு இருப்பதால், கர்ப்பகாலத்தில் தூக்கமின்றி அவதிப்படுவது மிகுந்த கவலையை உண்டாக்கும். மேலும் விரைந்து குணமாக, தூக்கம் மிகவும் தேவை என்பதால் வீட்டிற்குள் ஈரப்பதமூட்டி இருப்பது நல்லது என்பது பரிந்துரைக்கப்படுகிறது.

ஈரப்பதமூட்டி, காற்றில் ஈரப்பதத்தை கூட்டுகிறது. ஈரப்பதமான காற்றில் உறங்குவதால், மூச்சு விடுவது இதமாக இருப்பதால், தொண்டை வலியால் தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்படாது.

ஆகவே உங்கள் படுக்கை அறை அல்லது நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அறையில் ஒரு ஈரப்பதமூட்டியை வைக்கவும்.

ஈரப்பதமூட்டி இல்லை என்றால், வெதுவெதுப்பான நீரை ஒரு ஆழமான பாத்திரத்தில் ஊற்றி, வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைக்கவும்.  அதிக வெப்பம் காரணமாக இந்த நீர் சூடாகும்போது, அந்த இடத்தில்  இருக்கும் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்.

குறிப்பு:
ஈரப்ப்தமூட்டியை பூச்சிகள், மற்றும் ஒவ்வாமை தரும் பொருட்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

10. எரிச்சலை அதிகரிக்கும் பொருட்களைத் தவிர்க்கவும்:
சுற்றுச்சூழலும் நம்மை சுற்றி இருக்கும் சில பொருட்களும் தொண்டை வலியை மேலும் அதிகரிப்பவையாக சில நேரம் இருக்கும்.

தொண்டை வலியை அதிகரிக்கும் மற்றும் அதிக எரிச்சலைத் தரும் சில முக்கிய அறிகுறிகள் சிகரெட் மற்றும் புகையிலை புகை ஆகும். ஆகவே இந்த புகை அதிகம் இருக்கும் இடங்களைத் தவிர்க்கவும்.

மேலும் காற்றின் மாசு  அதிகமாக இருக்கும் இடங்களைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும்போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்லலாம்.

மேலும், வாசனை திரவியம் மற்றும் வாசனை திரவியம் சேர்க்கபப்ட்ட பாத்ரூம் ஸ்ப்ரே ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பதால் தொண்டை வலி மற்றும் இருமல் கட்டுப்படும்.