முகப்பருவிற்கான சிறந்த மற்றும் மோசமான உணவுகள் 

முகப்பருக்கள் பொதுவாக பதின் வயதில் தோன்றத் தொடங்குகிறது. முகப்பரு உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உணவு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

முகப்பருவிற்கான சிறந்த மற்றும் மோசமான உணவுகள் 

முகப்பருவும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவும் :

மரபணு, வாழ்வியல் முறை, நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆகியவை முகப்பரு உண்டாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில உணவுகள் முகப்பருவிற்கு காரணமாக இருக்கும் அதே வேளையில் சில வகை உணவுகள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. முகப்பருவிற்கான உடல் நிலையில் உணவில் பங்கு பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை சில முக்கிய தகவல்கள் இதன் மூலம் நமக்கு கிடைத்துள்ளன. 

பால்:
நீங்கள் எவ்வளவு அதிகம் பால் பருகுகிறீர்களோ அந்த அளவிற்கு பருக்கள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக கொழுப்பு நீக்கிய பால் அதிக வாய்ப்பைக் கொடுக்கிறது. இதற்கான காரணத்தை அறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். கர்ப்பமாக இருக்கும் பசுவின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம், அதன் பாலில் கலப்பது ஒரு காரணமாக இருக்கலாம். எந்த ஒரு நபரின் இரத்தத்தில் இந்த ஹார்மோன் அதிக அளவு இருக்கிறதோ, அவருக்கு அதிக அளவு பருக்கள் உண்டாகலாம்.

சர்க்கரை மற்றும் கார்போ சத்துகள் :
உங்கள் உணவில் மிக அதிக அளவு சோடா போன்ற பானங்கள், வெள்ளை பிரட், வெள்ளை அரிசி, கேக் போன்ற உணவுகள் அதிகம் இருந்தால் உங்களுக்கு பருக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. இந்த உணவுகளில் உள்ள அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரெட் , உங்கள் இரத்தத்தில் மிக எளிதாகவும் விரைவாகவும் கலந்து விடுகின்றன. அதாவது, இவற்றின் க்ளைகமிக் குறியீடு உயர்ந்த அளவில் உள்ளன, இரத்த சர்க்கரையை பாதிக்கும் உணவின் அளவைக் குறிப்பது க்ளைகமிக் குறியீடாகும். இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உடல் அதிக அளவு இன்சுலின் சுரக்கும்போது, மற்ற ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு, சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
 
சாக்லேட் :
அதிகமாக சாக்லேட் சாப்பிடும் நபர்களுக்கு பருக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதன் காரணம் தெளிவாக விளங்கவில்லை. சாக்லேட்டின் முக்கிய மூலப்பொருளான கொக்கோ பருக்களுக்கான காரணி இல்லை. 10 மடங்கு அதிகம் கொக்கோ சேர்க்கப்பட்ட சாக்லேட் உட்கொள்பவர்களை விட, வழக்கமான அளவு கொக்கோ உள்ள சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பருக்கள் அதிகம் உள்ளதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. குறைவான அளவு சர்க்கரை மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட டார்க் சாக்லேட் பருக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 

உயர் நார்ச்சத்து உள்ள உணவுகள் :
அதிக அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்கள் முகத்தில் பருக்கள் குறைவதைக் காண முடியும். ஆனால் மருத்துவர்களுக்கு இதற்கான காரணம் தெரியவில்லை. உயர் நார்ச்சத்து உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன  என்பதால் பருக்களை போக்கவும் உதவுகின்றன என்பது மருத்துவர்களுக்கு நன்கு தெரியும், ஓட்ஸ், பீன்ஸ், ஆப்பிள், கேரட் போன்றவை உங்கள் உணவில் அதிகம் நார்ச்சத்து சேர்க்கக்கூடிய உணவுகள் ஆகும். 

சால்மன்:
இந்த வகை மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகின்றது. இந்த வகை மீன்கள் உடலில் அழற்சியைக் குறைக்கின்றன. இதனால் பருக்கள் குறைகின்றன. உங்கள் உடல் உற்பத்தி செய்யும், பருக்களுடன் தொடர்புடைய IGF - 1 புரதத்தை குறைக்கவும் இவை உதவுகின்றன. 

நட்ஸ்:
பருக்கள் அதிகம் உள்ள நபர்களுக்கு வைடமின் ஈ, செலெனியம் போன்ற அன்டி ஆக்சிடென்ட் அளவு மிகவும் குறைந்து காணப்படும். இந்த அன்டி ஆக்சிடென்ட் , பாதாம், வேர்க்கடலை, பிரேசில் நட்ஸ் ஆகியவற்றில் மிக அதிகம் உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் உடல் அணுக்களை சேதம் மற்றும் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றன. அன்டி ஆக்சிடென்ட் பருக்களைப் போக்குவதில் சிறந்து விளங்குவதாக ஒரு தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், உங்கள் உடலுக்கு இவை பல வழிகளில் உதவுகின்றன. ஆகவே இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தீங்கும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். ஒரு நாளில் 2-4 பாதாம் அல்லது 3-4 பிரேசில் நட்ஸ் சேர்த்துக் கொள்வது போதுமானது.

சிப்பிகள்:
சருமத்திற்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து ஜின்க். இந்த ஊட்டச்சத்து  சிப்பியில் மிக அதிகம் உள்ளது. குறிப்பிட்ட வகை பருக்களுக்கு காரணமாக இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை இதற்கு உண்டு. பருக்களுடன் தொடர்புடைய அழற்சியை உண்டாக்கும் சில வகை ரசாயனங்களை உடல் உற்பத்தி செய்வதை தடுக்கவும் இவை உதவுகின்றன. அதிக அளவு ஜின்க் எடுத்துக் கொள்வதால்  உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் உண்டாகலாம். நடுத்தர வயதினர் ஒரு நாளில் 40 மிகி அளவிற்கு மேல் ஜின்க் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

கடற்பாசி:
உங்கள் உடலின் தைராய்டு சுரப்பி சீராக செயலாற்ற கடற்பாசியை எடுத்துக் கொள்ளலாம். இது ஐயோடினின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இதனை ரோல், சாலட் அல்லது சிற்றுண்டியாக என்று எந்த ஒரு விதத்திலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதிகமாக ஐயோடின் சேர்த்துக் கொள்வதால் பருக்கள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. நடுத்தர வயதினருக்கு ஒரு நாளில் 150 மைக்ரோ கிராம் அளவு மட்டுமே ஐயோடின்  தேவைப்படுகிறது. இருப்பினும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த அளவை விட அதிகம் தேவைப்படலாம். சமச்சீரான உணவு உட்கொள்பவர்களுக்கு உப்பின் இருப்பு குறைவாக இருக்கும். கடற்பாசியுடன் சேர்த்து, மீன், பால் பொருட்கள் மற்றும் ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பு ஆகியவற்றின் மூலம் ஐயோடின் கிடைக்கிறது.


எண்ணெய் உணவுகள் பற்றி என்ன கூறலாம்?
எண்ணெய் உணவுகள் உட்கொள்வதால் பருக்கள் அதிகமாகும் என்பதும் மோசமாகும் என்பதும் ஒரு பொதுவான பேச்சாகும். ஆனால் இது கட்டுக்கதையாகும். உணவுகளை சமைப்பதில் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் உங்கள் சருமத்தில் தொந்தரவு ஏற்படுவதை உங்களால் காண முடியும். பொரித்து எடுக்கப்படும் உணவுகள் அல்லது மற்ற மூலத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சருமத்தின் வேர்க்கால்களில் ஒட்டி அதனை மூடச் செய்கிறது.

எப்போது மருத்துவரை அணுகலாம்?
பொதுவாக பருக்கள் தொடர்பான சிகிச்சையை வீட்டிலேயே செய்து வரலாம். ஆனால் சில தீவிர நிலைகளில் மருத்துவரை அணுகுவது நலம். பாதுகாப்பான சரும பராமரிப்பு முறைகள், உணவு முறையில் மாற்றம், பல்வேறு சிகிச்சை ஆகியவற்றின் மூலம் உங்கள் பருக்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால் மருத்துவரை அணுகலாம். அவர் தோல் சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைக்கலாம். விரைவாக சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உங்கள் தன்னம்பிக்கை குறையாமல் தடுக்கலாம் மேலும் உங்கள் பயமும் தடுக்கப்படும்.