உலகின் தலைசிறந்த மனிதன்

பழக்க வழக்கங்கள் தான் ஒரு மனிதனை உருவாக்குகின்றன.

உலகின் தலைசிறந்த மனிதன்

குழப்பமில்லாத, ஒழுங்கு முறையான வாழ்விற்கு சிறந்த பழக்கவழக்கங்கள் துணைபுரியும். அப்படிப்பட்ட சில பழக்கவழக்கங்களை இங்கே பார்க்கலாம்!

வாசிப்பு:

புத்தகங்களை வாசிப்பது நம்மை முழுமையாக மாற்றும். மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அறிவையும் பெருக்கும்.

கேள்வி:

நமக்குள்ளே நிறைய கேள்விகளை கேட்பதும், அந்த கேள்விகளுக்கான பதிலை தேட முயற்சிப்பதும் மிக முக்கியம்.

பட்டியல்:

ஒவ்வொரு நாளும் நாம் செய்த வேலைகளை பட்டியலிடும் போது, நேர மேலாண்மையை கற்று கொள்ளலாம்.

சிந்தனைகள்:

நமக்கு தோன்றும் சிந்தனைகளை எழுதும் பழக்கம் மிக நல்லது.

கற்றல்:

நம் துறை பற்றிய அறிவை பெருக்க, அது தெடர்பான வீடியோக்கள், புத்தகங்கள் படிப்பது மிக அவசியம்.

திட்டமிடல்:

சிறந்த வாழ்க்கைக்கு திட்டமிடல் மிக அவசியம். இது பதட்டமில்லாத முறையில் நம் வேலையை முடிக்க உதவும்.

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய, இந்த பழக்கவழக்கங்களை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையில் ஒழுக்கம் வரும். அது முன்னேற்றத்தின் பாதையில் நம்மை அழைத்து செல்லும்.