கூகுளில் அதிகம் தேடப்படும்  அழகு சார்ந்த கேள்வி பதில்கள்

இன்றைய கணினி மயமான உலகில், எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். தாயிடமும், தந்தையிடமும் கேட்க முடியாத சந்தேகங்களை அல்லது கேள்விகளை கூட  கூகுளில் கேட்டு பதில் அறிந்து கொள்ளலாம்.

கூகுளில் அதிகம் தேடப்படும்  அழகு சார்ந்த கேள்வி பதில்கள்

இன்றைய கையடக்க கைபேசியில் உலகத்தையே  அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

அழகு சார்ந்த சந்தேகங்கள் அனைவருக்கும் உண்டு. இந்த வகையில் கூகுளில் அதிகமாக கேட்கப்பட்ட அழகு சார்ந்த கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் அடங்கியது தான் இந்த தொகுப்பு. இந்த கேள்விகள் உங்களுக்கும் இருந்தால் பதில்களை அறிந்து கொள்ள தயாராகுங்கள்.

சருமத்தின் தன்மையை தீர்மானிப்பது எப்படி? - சரும பரிசோதனை 
சருமத்தின் தன்மையை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள மருத்துவ பரிசோதனை தான் தீர்வு. சில எளிய முறைகளில் வீட்டிலேயே நமது சருமத்தின் தன்மையை தெரிந்து கொள்ளலாம்.

ப்ளோட்டிங் பேப்பர் எனப்படும் உறிஞ்சும் தாளை எடுத்து உடலின் சில இடங்களில் ஒட்டிக் கொள்ளவும். பின்பு அந்த இடத்தை லைட் வெளிச்சத்தில் காண்பிக்கவும். அந்த இடத்தில் அதிகமான எண்ணெய் இருந்தால் உங்கள் சருமம் எண்ணெய் சருமம். குறைவாக எண்ணெய் இருந்தால் உங்களுடையது வறண்ட சருமம். சில நேரங்களில் உங்கள் கன்ன பகுதி வறண்டும், மூக்கு பகுதி எண்ணெய் தன்மையுடனும் இருக்கலாம். முகத்தை குளிர்ந்த நீரில்  நன்றாக கழுவவும். ஒரு மணி நேரம் கழித்து உங்கள் முகத்தில் எண்ணெய் படர்ந்திருந்தால் உங்கள் சருமம் எண்ணெய் பசை சருமம்.  ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால் வறண்ட சருமம். உங்கள் மூக்கு மற்றும் நெற்றி பகுதியில் சிறிதளவு எண்ணெய் இருந்தால் உங்கள் சருமம் சாதாரண சருமம்.

அழகான சருமத்தை எப்படி பெறுவது ? - உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுங்கள். 
பெண்கள் அழகான சருமம் பெற எவ்வளவோ அழகு சாதன  பொருட்களை வாங்குகின்றனர்.  ஆரோக்கியமான வாழ்வு  தரும் சரும பொலிவை வேறு எந்த க்ரீம்களும், முக பவுடர்களும் தர முடியாது. ஆரோக்கியமான வாழ்வு கடினம் அல்ல. தேவையான அளவு தண்ணீர் பருகுதல், பழங்கள் மற்றும் பழச்சாறு சேர்த்துக் கொள்ளுதல், சரியான உணவு அட்டவணையை தேர்ந்தெடுத்தல், உடற்பயிற்சி செய்தல் , இவை அனைத்தும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கும். இதனை தவிர வீட்டிலேயே இயற்கையான முறையில் மேற்கொள்ளும் தீர்வுகள்  மூலம் சரும அழகை மேம்படுத்த முடியும்.

தலை முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி?- தலைமுடியை பாதுகாப்பதன்மூலம் .
தலைமுடியை நல்ல ஊட்டச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் . தலை முடியை மிருதுவான முறையில் கையாள வேண்டும். முடி வளர்ச்சிக்கு ஏதேனும் வழியை பின்பற்றும்போது பொறுமை மிகவும் அவசியம். முடி வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரே நேரத்தில் பல்வேறு வழிகளை பின்பற்றக் கூடாது. முடி வளரும் நேரத்தில் சில பெண்கள் முடி வெட்டுவதை நிறுத்தி விடுவார்கள். முடி வளர்ச்சியின் போது முடியை  வெட்டுவதும் அதன் வளர்ச்சிக்கு உதவும்.

டாட்டூ ஒட்டிக்கொள்வது சருமத்திற்கு ஏற்றதா? அவரவர் விருப்பம்.
டாட்டூ ஒட்டிக்கொள்ளும் எல்லோருக்கும் சரும பிரச்னை ஏற்படுவதில்லை. ஆனால் பலர் , டாட்டூ ஒட்டிக்கொள்வது சரும பிரச்னையை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். தனி நபர் விருப்பமே இதில் முதன்மை பெறுகிறது. ஆகையால் டாட்டூ ஒட்டாமல் இருப்பது சருமத்திற்கு எந்த ஒரு தீங்கையும் வலிய  சென்று வரவழைக்காது என்பது உறுதி. டாட்டூவில் விருப்பம் உள்ளவர்கள் அதன் தரம் மற்றும் அதனை வரைபவர் பற்றி நன்கு தெரிந்து கொண்டு தன் விருப்பத்தை நிறைவேற்றலாம்.

பாதுகாப்பான முறையில் தேவையற்ற முடிகளை அகற்றுவது எப்படி? உடல் பகுதியை பொறுத்து உள்ளது.
முடிகளை அகற்றுவதற்கு பல வழிகள் பின்பற்ற படுகின்றன. சருமத்தின்  தன்மை மற்றும் முடி வளர்ச்சியின் ஆழத்தைப்பொறுத்து எந்த வகையை தேர்வு செய்யலாம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். புருவங்களுக்கு த்ரெட்டிங் முறையை பயன்படுத்தலாம். கை மற்றும் கால்களுக்கு வேக்சிங் முறையை பயன்படுத்தலாம். லேசர் முறையில் முடிகளை அகற்ற விரும்பினால் அதற்கான தேர்ந்த நிபுணரிடம் செல்ல வேண்டும். 

அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவது தலைக்கு நல்லதா? தலை முடியின் தன்மையை பொறுத்தது.
முடியும், உச்சந்தலையம் அழுக்காக இருக்கும்போது ஷாம்பு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை ஷாம்பு பயன் படுத்தும்போது சம இடைவெளி இருப்பது நல்ல பலன் தரும். ஷாம்பூவுடன் எண்ணெய், கண்டிஷனர் போன்ற பொருட்களையும் தவறாமல் பயப்படுத்த வேண்டும். தலை முடிக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் தினமும் ஷாம்பு பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை. தலை முடியின் தன்மைக்கேற்ப ஷாம்பூவின் பயன்பாடு மாறுபடும்.
 
கருவளையத்தை போக்குவது எப்படி? வீட்டிலேயே சரி படுத்தலாம்.
கருவளையத்தை பற்றிய கேள்விகள் அதிகமாக கூகுளில் கேட்கப்படுகின்றன . இதனை போக்க வீட்டிலேயே வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு , ஐஸ் போன்றவற்றை கண்களில் வைக்கலாம். கடுமையான முறையில் எந்த ஒரு குறிப்பையும் முயற்சிப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நல்ல தூக்கம் இதற்கு ஒரு தீர்வாகும். இவற்றை செய்த பின்னும் கருவளையம் நீடிக்குமாயின் தோல் நிபுணரை அணுகுவது நல்லது.
 
சுருக்கங்கள் இல்லாத சருமத்தை பெறுவது எப்படி? இளம் வயதிலேயே இதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும்.
சுருக்கங்கள் அற்ற சருமம் பெற, அதற்கான முயற்சிகளை உங்கள் 30 வயதிலேயே தொடங்க வேண்டும். சுருக்கங்கள் வந்த பின் அதனை போக்குவதை விட வராமல் இருக்க வழி செய்ய வேண்டும். நெற்றியில் தோன்றும் மெல்லிய கோடு தான் சுருக்கத்தின் முதல் அறிகுறி. இதற்கு பல எளிய  வீட்டு தீர்வுகள்  உள்ளன. இவற்றை பொறுமையாக பின்பற்றுவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.